Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

“என் பேராசிரியர்களுக்கு ஒரே சந்தோஷம்”

“என் பேராசிரியர்களுக்கு ஒரே சந்தோஷம்”

“என் பேராசிரியர்களுக்கு ஒரே சந்தோஷம்”

ஜார்ஜியா நாட்டில் டிபிலிஸி அரசு மருத்துவ பல்கலைக்கழகத்தில் பயிலும் முதலாம் ஆண்டு மாணவன் விழித்தெழு! பிரசுரிப்போருக்கு எழுதிய கடிதத்திலுள்ள வார்த்தைகளே இவை. இந்த மாணவன் விழித்தெழு!-விற்கு ஏன் எழுதினான்?

“நான் உங்களுடைய பத்திரிகையின் வாசகன்; 1998-லிருந்து இதைப் படித்து வருகிறேன். . . . என்னுடைய படிப்புக்கு அவை ரொம்பவே கைகொடுக்கின்றன. ஏற்ற வேளையில், நம்பகமான தகவல்கள் அடங்கிய கட்டுரைகள் வெளிவருகின்றன. சமீபத்தில் ‘குளோனிங் மற்றும் ஸ்டெம் செல் வகைகள்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதுவதற்காக ஸ்டெம் செல்கள்​—⁠அறிவியல் வெகு தூரம் சென்றுவிட்டதா? என்ற தலைப்பில் 2002, நவம்பர் 22 தேதியிட்ட ஆங்கில விழித்தெழு! இதழில் வெளிவந்த கட்டுரைகளிலுள்ள தகவல்களைப் பயன்படுத்தினேன். என் பேராசிரியர்களுக்கு ஒரே சந்தோஷம். எனக்குத்தான் முதல் மார்க்.

“மருத்துவம் போன்ற மனதைக் கவரும் தலைப்புகளில் நீங்கள் கட்டுரைகளைப் பிரசுரிப்பதைப் பார்ப்பது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. நானும் என்னுடைய குடும்பத்தாரும் யெகோவாவின் சாட்சிகளாக இல்லாவிட்டாலும், உங்களுடைய பத்திரிகைகளைப் படிப்பதில் எங்களுக்கு ஆர்வம் அதிகம். இன்று உலகில் நம்மைச் சுற்றி என்ன நடக்கின்றன என்பதைப் பற்றிய அறிவை விருத்தி செய்துகொள்ள அவை உதவுகின்றன.”

உடலுக்கும் உள்ளத்துக்கும் உதவும் நடைமுறையான ஆலோசனைகள் பைபிளில் உள்ளன. கேட்க ஆச்சரியமாக இருக்கிறதா? எல்லா மக்களுக்கும் ஏற்ற ஒரு புத்தகம் என்ற அருமையான 32-பக்க சிற்றேடு இந்த உண்மையை விளக்குகிறது. கீழுள்ள கூப்பனைப் பூர்த்திசெய்து பக்கம் 5-⁠ல் கொடுக்கப்பட்டுள்ள பொருத்தமான விலாசத்திற்கு அனுப்பினால், கூடுதலான தகவலைப் பெற்றுக்கொள்ளலாம். (g05 1/22)

எல்லா மக்களுக்கும் ஏற்ற ஒரு புத்தகம் என்ற சிற்றேட்டைப் பற்றி எந்த நிபந்தனையுமின்றி கூடுதலான தகவல் பெற விரும்புகிறேன்.

◻ இலவசமாக பைபிளை கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன்.