Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

‘கடவுளுடைய ஆதரவைப் பெற்ற பத்திரிகை’

‘கடவுளுடைய ஆதரவைப் பெற்ற பத்திரிகை’

‘கடவுளுடைய ஆதரவைப் பெற்ற பத்திரிகை’

நைஜீரியாவில் யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளைப் படித்து வரும் ஒருவர், மகளிர் மற்றும் பிள்ளைகள் நலத்திற்கான இன்டர் ஆஃப்ரிக்கன் கமிட்டியால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டார். சமீபத்திய விழித்தெழு! பத்திரிகைகள் இரண்டை கூடவே எடுத்துச் சென்றார்.

கருத்தரங்கின் முதல் நாளன்று, தான் வைத்திருந்த அந்தப் பத்திரிகையிலிருந்தே பேச்சாளர் குறிப்புகளைச் சொல்லிக் கொண்டிருந்தது போல் அவருக்குத் தோன்றியது. அதனால், “வாழ்க்கை வாழ்வதற்கே” (நவம்பர் 8, 2001) என்ற தொடர் கட்டுரைகள் வெளிவந்திருந்த அப்பத்திரிகையைச் சட்டென வெளியே எடுத்து, பேச்சாளர் குறிப்புகளைச் சொல்லச் சொல்ல அவற்றைப் பார்த்துக்கொண்டே வந்தார்.

அந்த நாளின் முடிவில், வக்கீல் ஒருவர் அந்த பைபிள் மாணாக்கர் வைத்திருந்த மற்றொரு விழித்தெழு! இதழின் அட்டையைக் கவனித்தார்; “அடிக்கப்படும் பெண்களுக்கு ஆதரவு” என்ற தொடர் கட்டுரைகள் அதில் இருந்தன. அதை ஆசையுடன் இரவல் வாங்கிச் சென்றார். மறுநாள் அவர் உரையாற்ற வேண்டியிருந்தது, அதனால் அன்றிரவே, பேச்சிற்காகத் தான் தயாரித்திருந்த விஷயங்களை ஓரங்கட்டிவிட்டு, இந்த விழித்தெழு! கட்டுரைகளின் அடிப்படையில் ஒரு புதிய உரையைத் தயாரித்தார். அடுத்த நாள் அந்த வக்கீல் பேச்சு கொடுக்கையில், இந்த பைபிள் மாணாக்கர் உட்கார்ந்திருந்த அதே வரிசையிலிருந்த மற்றொரு பெண்மணி தன்னுடைய விழித்தெழு! இதழிலிருந்து அந்த விஷயங்களை எடுத்துப் பார்க்க ஆரம்பித்தாள்.

விழித்தெழு! கட்டுரைகளைப் படித்திருந்ததால் அந்த பைபிள் மாணாக்கராலும் அங்கு நடந்த கலந்தாலோசிப்பிற்குப் பயனுள்ள விதத்தில் பங்களிக்க முடிந்தது. ‘இந்தப் பத்திரிகை கடவுளுடையஆதரவைப் பெற்றிருக்கிறது என்பதில் எனக்கு எவ்வித சந்தேகமும் இல்லை’ என்று அவர் கூறினார். இந்தப் பத்திரிகையை உங்கள் வீட்டிலேயே தவறாமல் பெற்றுக்கொள்ள விரும்புகிறீர்களா? அதற்காக யெகோவாவின் சாட்சிகளில் ஒருவரை நீங்கள் ஏன் கேட்கக் கூடாது? (g05 3/8)