Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வியத்தகு மாயா காலண்டர்

வியத்தகு மாயா காலண்டர்

வியத்தகு மாயா காலண்டர்

மெக்சிகோவிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்

பண்டைய மாயா a இனத்தவர் காலத்தைத் துல்லியமாகக் குறித்து வைப்பதை அதிமுக்கியமானதாய் கருதினார்கள். குறிப்பிட்ட கால சுழற்சிகளில் சில சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நிகழும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருந்ததை அவர்களுடைய காலண்டர்கள் சுட்டிக்காட்டின.

ட்ஸோல்கீன் (நாட்களைக் கணக்கிடும்) காலண்டர் என சில ஆராய்ச்சியாளர்கள் அழைக்கும் காலண்டரில், 260 நாட்களின் சுழற்சி அடுத்தடுத்து 13 காலப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. இந்த ஒவ்வொரு காலப் பகுதியிலும் 20 நாட்கள் இருந்தன, ஒவ்வொரு நாளுக்கும் அதற்கே உரிய பெயரும் இருந்தது. மாயாக்களின் சடங்காச்சார வாழ்க்கைக்கு ட்ஸோல்கீன் காலண்டர்தான் அடிப்படையாய் இருந்தது, இது குறிசொல்லுவதற்கும் பயன்படுத்தப்பட்டது.

இந்தக் காலண்டரோடுகூட ஹாப் என்ற பொதுக் காலண்டரையும் அவர்கள் பயன்படுத்தினார்கள். இது 365 நாட்களை உடைய சூரிய காலண்டராகும். இதில் 19 மாதங்கள் இருந்தன, 18 மாதங்களுக்கு 20 நாட்கள் வீதமும் ஒரேவொரு மாதத்திற்கு ஐந்து நாட்களும் ஆக மொத்தம் 365 நாட்கள் இருந்தன. விவசாயமும் அன்றாட வாழ்க்கையும் இந்தச் சூரிய காலண்டரின் அடிப்படையிலேயே இருந்தன. கெட்டிக்கார மாயாக்கள் அந்த இரண்டு காலண்டர்களையும் இணைத்து காலண்டர் வட்டம் என ஆராய்ச்சியாளர்கள் அழைக்கும் ஒரு காலண்டரை உருவாக்கினார்கள்; அதாவது, அந்த இரண்டு காலண்டர்களிலும் உள்ள பகுதிகளிலிருந்து தேதிகளை உருவாக்கினார்கள். இந்த நாட்களின் மிகப் பெரிய சுழற்சி மீண்டும் தொடங்குவதற்கு 52 வருடங்கள் எடுத்தன. b

எந்தவொரு பண்டையப் பொருளிலும் முழு மாயா காலண்டர் கண்டுபிடிக்கப்படவில்லை. இன்றுவரை பாதுகாக்கப்பட்டுள்ள மாயாக்களின் புத்தகங்கள் சிலவற்றிலிருந்தும், அவர்களுடைய ஸ்தூபிகளிலும் நினைவுச் சின்னங்களிலும் உள்ள குறியீட்டு எழுத்துப் பொறிப்புகளை ஆராய்வதிலிருந்தும் கல்விமான்கள் இந்தக் காலண்டரைப் பற்றி புரிந்துகொண்டிருக்கிறார்கள்.

மாயாக்களின் காலண்டரை பல்லாண்டுகளாக ஆராய்ந்த பிறகும்கூட வல்லுனர்கள் இன்னும் அதில் ஆர்வம் காட்டுகிறார்கள். சூரிய வருடத்தின் கால அளவுக்கு ஏற்றபடி துல்லியமாகச் சரிசெய்வது, சந்திரனின் சுழற்சியையும் கிரகங்களின் சுழற்சியையும் மிகத் திருத்தமாக வரைந்து வைப்பது போன்ற சிக்கலான அம்சங்கள் அதில் இருந்தன. ஆம், இவை அனைத்தையும் திறம்பட்ட விதத்தில் பண்டைய மாயாக்கள் கணக்கிட்டிருந்தார்கள்; காலத்தைத் துல்லியமாக அவர்கள் குறித்து வைத்திருந்தார்கள். (g05 4/8)

[அடிக்குறிப்புகள்]

a செப்டம்பர் 8, 2001 தேதியிட்ட ஆங்கில விழித்தெழு! பத்திரிகையில் “மாயா​—⁠நேற்றும் இன்றும்” என்ற கட்டுரையைக் காண்க.

b இதோடுகூட மாயாக்கள் லாங் கவுண்ட் என்ற காலண்டரையும் பயன்படுத்தினார்கள்; இது முக்கியமாய், பூர்வ காலத்தின் ஓர் அடிப்படை தேதியிலிருந்து ஆரம்பமான நாட்களைப் பற்றிய தொடர்ச்சியான பதிவாக இருந்தது.

[பக்கம் 31-ன் படங்கள்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

ட்ஸோல்கீன் ஹாப்

6 காபான் 5 போப்

மேலே கற்பாளத்தில் சிறப்பித்துக் காட்டப்பட்டிருக்கும் தேதி, 6 காபான் 5 போப்; இது பொ.ச. 752, பிப்ரவரி 6-⁠க்கு இணையானது

[பக்கம் 31-ன் படங்கள்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

0 1 5

ஒவ்வொரு எண்ணையும் குறிப்பதற்கு மேலே உள்ள மூன்று குறியீடுகளின் கூட்டுத் தொகுப்பை மாயாக்கள் உபயோகித்தார்கள்

0 1 2 3 4

5 6 7 8 9

10 11 12 13 14

15 16 17 18 19

7 நாட்களுக்குப் பதிலாக ட்ஸோல்கீன் காலண்டரில் 20 நாட்கள் அதன் பெயர்களுடன் இருந்தன. கீழே சில குறியீடுகள்

ஹாப் காலண்டரிலுள்ள 19 மாதங்களுக் கான சில குறியீடுகள்

[பக்கம் 31-ன் படங்களுக்கான நன்றி]

மேலே வலது புறமுள்ளதும் உட்படமும்: HIP/Art Resource, NY; குறியீடுகள்: An Introduction to the Study of the Maya Hieroglyphs/Sylvanus Griswold Morlay/Dover Publications