Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

“நாம் யாருக்குக் கீழ்ப்படிய வேண்டும்?” சொற்பொழிவைக் கேட்க வாரீர்!!!

“நாம் யாருக்குக் கீழ்ப்படிய வேண்டும்?” சொற்பொழிவைக் கேட்க வாரீர்!!!

“நாம் யாருக்குக் கீழ்ப்படிய வேண்டும்?” சொற்பொழிவைக் கேட்க வாரீர்!!!

கீழ்ப்படிவது என்றாலே அநேகருக்கு எட்டிக் காயாய் கசக்கிறது. ‘சுதந்திரப் பறவையாக மனம் போல் திரிய வேண்டும்’ என்றே பெரும்பாலோர் விரும்புகிறார்கள். ஆனால், அன்றாட வாழ்க்கையில் நாம் அனைவருமே கீழ்ப்படிதலுக்கு மதிப்பு காட்டுகிறோம் என்பதுதான் உண்மை. ஏதேனும் எச்சரிக்கை அடையாளத்தை அல்லது அறிவுரையைப் பின்பற்றுகிற ஒவ்வொரு சமயமும் நீங்கள் ஓரளவு கீழ்ப்படிதலைக் காட்டுகிறீர்கள். அதோடு, மனித சமுதாயத்தில் ஒழுங்கையும் சமாதானத்தையும் கட்டிக் காப்பதற்கு அரசாங்க அதிகாரிகளின் சட்டதிட்டங்களுக்குக் கீழ்ப்படிவது அவசியம் என்பதை யார்தான் மறுக்க முடியும்? உதாரணத்திற்கு, சாலை விதிகளுக்கு மக்கள் கீழ்ப்படிய மறுத்தால் என்ன நடக்கும் என்பதைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்!

ஆனால் மனிதர்களை மனிதர்கள் ஆளும்போது ஏற்படும் விளைவுகள் எப்போதுமே சாதகமாக இருப்பதில்லை. ‘ஒரு மனுஷன் தனக்கே கேடுண்டாக வேறொரு மனுஷனை ஆளுகிறான்’ என நீண்ட காலத்துக்கு முன்பே பைபிள் குறிப்பிட்டது. (பிரசங்கி 8:9) நாம் நம்புவதற்கும் கீழ்ப்படிவதற்கும் தகுதியான ஓர் ஆட்சியாளர் இருக்கிறாரா? இருந்தால், அவரை நாம் எப்படி அடையாளம் கண்டுகொள்ள முடியும்? அவருடைய ஆட்சியில் நாம் எதை எதிர்பார்க்கலாம்? இக்கேள்விகளுக்கான பதில், “நாம் யாருக்குக் கீழ்ப்படிய வேண்டும்?” என்ற ஆர்வத்தைத் தூண்டும் பொதுப் பேச்சில் அளிக்கப்படும். இப்பேச்சு யெகோவாவின் சாட்சிகளுடைய மாவட்ட மாநாட்டில் கொடுக்கப்படும். இத்தகைய நூற்றுக்கணக்கான மாநாடுகள் இந்த மாதம் முதற்கொண்டு உலகெங்கும் நடைபெற உள்ளன. மாநாடு பக்கத்தில் எங்கே நடைபெறுகிறதென தெரிந்துகொள்வதற்கு உங்கள் பகுதியிலுள்ள யெகோவாவின் சாட்சிகளை அணுகுங்கள் அல்லது 5-⁠ம் பக்கத்திலுள்ள விலாசத்தைப் பயன்படுத்தி இப்பத்திரிகையைப் பிரசுரிப்போருக்குக் கேட்டு எழுதுங்கள். (g05 5/22)