Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உங்களுக்குத் தெரியுமா?

உங்களுக்குத் தெரியுமா?

உங்களுக்குத் தெரியுமா?

(இந்த வினாடி வினாவுக்கான விடைகளை, கொடுக்கப்பட்ட பைபிள் வசனங்களில் காணலாம்; எல்லா விடைகளும் பக்கம் 13-⁠ல் அச்சிடப்பட்டுள்ளன. கூடுதலான தகவல் பெற விரும்பினால், யெகோவாவின் சாட்சிகள் பிரசுரித்த “வேதாகமத்தின்பேரில் உட்பார்வை” [ஆங்கிலம்] என்ற பிரசுரத்தை ஆராய்ந்து பாருங்கள்.)

1. சாலோமோன் காலத்தில், வெள்ளியையும் யானைத் தந்தங்களையும் குரங்குகளையும் மயில்களையும் இஸ்ரவேலுக்கு எந்தக் கப்பல்கள் கொண்டு வந்தன? (1 இராஜாக்கள் 10:22)

2. தான் சகிப்புத்தன்மையோடு இருந்ததை பவுல் அறிந்திருந்தார்; அப்படி அறிந்திருந்ததை மரணம் நெருங்கும் தறுவாயில் எப்படிச் சொல்லிக் காட்டினார்? (2 தீமோத்தேயு 4:7)

3. பார்வோனுடைய எந்தக் கனவுக்கு விளக்கம் அளித்தபோது ஏழு வருட கொடிய பஞ்சம் வருமென யோசேப்பு சொன்னார்? (ஆதியாகமம் 41:17-24)

4. தீமோத்தேயுவுக்கு வேதவசனங்களைக் கற்றுக்கொடுத்த இரண்டு பெண்கள் யார்? (2 தீமோத்தேயு 1:5)

5. என்ன அசாதாரண விதத்தில் அப்சலோம் இறந்தார், அவர் எப்படிப் புதைக்கப்பட்டார்? (2 சாமுவேல் 18:9, 14-17)

6. பாவத்தின் சம்பளம் என்ன? (ரோமர் 6:23)

7. கடவுளுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது ஐசுவரியவானுக்கு வெகு கடினமாக இருக்கும் என்பதைக் காட்ட இயேசு என்ன உயர்வு நவிர்ச்சி அணியைப் பயன்படுத்தினார்? (மத்தேயு 19:24)

8. யூதேயாவை ஆட்சி செய்துவந்த எந்த ரோம தேசாதிபதி, யூதருக்குத் தயவுசெய்ய விரும்பி பவுலைக் காவலில் வைத்துவிட்டுப் போனார்? (அப்போஸ்தலர் 24:27)

9. கடவுளுடைய எதிரிகள் அழிக்கப்படுவதை விளக்குவதற்கு, திராட்சரசம் தயாரிக்கையில் செய்யப்படும் எந்தச் செயலை இயேசு செய்வதாகச் சித்தரித்துக் காட்டப்பட்டுள்ளது? (வெளிப்படுத்துதல் 19:15)

10. ஆரம்பத்தில் பத்துக் கட்டளைகள் எப்படி எழுதப்பட்டன, எதில் எழுதப்பட்டன? (யாத்திராகமம் 31:18)

11. கிறிஸ்தவப் பெண்கள் தங்களை எப்படி அலங்கரித்துக்கொள்ள வேண்டுமென அப்போஸ்தலன் பவுல் விரும்பினார்? (1 தீமோத்தேயு 2:9, 10)

12. யெகோவாவின் மகத்துவத்தை விளக்குவதற்கு, “தண்ணீர்களை” அவர் எதினால் அளவிட முடியுமென ஏசாயா சொன்னார்? (ஏசாயா 40:12)

13. ஆதாமும் ஏவாளும் குடியிருந்த இடத்தின் பெயர் என்ன? (ஆதியாகமம் 2:15)

14.எந்த இரண்டு மகன்களுடைய வன்முறை செயலை யாக்கோபு அங்கீகரிக்கவில்லை? (ஆதியாகமம் 49:5-7)

15. ஏதேனில் உற்பத்தியான ஆறிலிருந்து பிரிந்து சென்ற நான்கு கிளை ஆறுகளின் பெயர்கள் யாவை? (ஆதியாகமம் 2:11-14)

16. சக விசுவாசி தெரியாமல் தவறுசெய்யும்போது ஆவிக்குரிய தகுதிபெற்ற கிறிஸ்தவர்கள் என்ன செய்ய வேண்டும்? (கலாத்தியர் 6:1)

வினாடி வினாவுக்கான விடைகள்

1. தர்ஷீசின் கப்பல்கள்

2. “நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்” என்று சொன்னார்

3. இளைத்திருந்த ஏழு பசுக்கள் புஷ்டியான ஏழு பசுக்களை பட்சித்தன, பதர் போலிருந்த ஏழு கதிர்கள் நிறைமேனியுள்ள ஏழு கதிர்களை விழுங்கின

4. அவருடைய தாய் ஐனிக்கேயாளும், பாட்டி லோவிசாளும்

5. தலைமயிர் மரத்தில் மாட்டிக்கொண்டு அப்சலோம் தொங்கியபோது யோவாபும் அவருடைய ஆயுததாரிகளும் அவரைக் கொன்றார்கள்; பிறகு அவருடைய உடலைப் பெரிய குழியிலே போட்டு மகா பெரிய கற்குவியலைக் குவித்தார்கள்

6. மரணம்

7. “ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப் பார்க்கிலும், ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும்” என அவர் சொன்னார்

8. பேலிக்ஸ்

9. மதுவுள்ள ஆலையை மிதித்தல்

10. ‘தேவனுடைய விரல்’ அவற்றை இரண்டு கற்பலகைகளில் எழுதியது

11. “மயிரைப் பின்னுதலினாலாவது, பொன்னினாலாவது, முத்துக்களினாலாவது, விலையேறப்பெற்ற வஸ்திரத்தினாலாவது தங்களை அலங்கரியாமல், தகுதியான வஸ்திரத்தினாலும், நாணத்தினாலும், தெளிந்த புத்தியினாலும்” அலங்கரிக்க வேண்டுமென விரும்பினார்

12. ‘அவருடைய கைப்பிடியால்’

13. ஏதேன் தோட்டம்

14. சிமியோன், லேவி

15. பைசோன், கீகோன், இதெக்கேல், ஐபிராத்து

16. ‘சாந்தமுள்ள ஆவியோடே அப்படிப்பட்டவனைச் சீர்பொருந்தப் பண்ண வேண்டும்’