Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிளைப் பெறுவதற்கான ஆசையை அது தூண்டியது

பைபிளைப் பெறுவதற்கான ஆசையை அது தூண்டியது

பைபிளைப் பெறுவதற்கான ஆசையை அது தூண்டியது

கம்யூனிச சர்வாதிகாரிகள் ரஷ்யாவை ஆண்ட காலத்தில் பைபிள் படிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் சமீப வருடங்களில் இந்நாட்டில் லட்சக்கணக்கான பைபிள்கள் வினியோகிக்கப்பட்டு வந்திருக்கின்றன. மீண்டும் பைபிளிடம் இந்த ஆர்வம் ஏற்பட்டிருப்பதற்கான காரணத்தை ரஷ்யாவிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்திற்கு வந்த கடிதம் ஒன்று சுட்டிக்காட்டுகிறது. சிர்கியே என்பவர் மணமானவர், அவருக்கு ஒரு மகனும் உண்டு; அவர் வோல்காகிராட் என்ற பெரிய நகரத்தில் வசிக்கிறார். அந்த நகரம், சோவியத் நாட்டு சர்வாதிகாரியான ஜோசஃப் ஸ்டாலின் என்பவரின் நினைவாக, பல பத்தாண்டுகளுக்கு ஸ்டாலின்கிராட் என்ற பெயரில் அழைக்கப்பட்டது. அவர் இவ்வாறு சொல்கிறார்:

“கொஞ்ச நாட்கள் முன்பு உங்கள் அமைப்பைச் சேர்ந்த ஆட்கள் என் வீட்டிற்கு வந்தார்கள். எனக்குக் கடவுள் நம்பிக்கை இருக்கிறதாவென அவர்கள் மரியாதையுடன் கேட்டார்கள். சிலருக்குக் கொஞ்ச நம்பிக்கை இருக்கும், மற்றவர்களுக்கு நிறைய நம்பிக்கை இருக்கும், ஆக மொத்தத்தில் எல்லாருக்குமே அந்த நம்பிக்கை இருக்கத்தான் செய்யும் என்று சொன்னேன். நான் மணமானவன் என்றும், எனக்கு ஒரு மகன் இருக்கிறான் என்றும் சொன்னபோது, வந்தவர்களில் ஒருவர் தன் கைப் பையிலிருந்து குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம் என்ற புத்தகத்தை எடுத்துக் கொடுத்தார்.”

சில நாட்களுக்குப் பிறகு சிர்கியே அந்தப் புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்தார். அவர் சொல்வதாவது: “அந்தப் புத்தகம் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. புத்திக்கூர்மையும் முழு ஈடுபாடும் கொண்டவர்களே அதை எழுதியிருக்க வேண்டும். பொதுவாக மத அமைப்புகளின் மீது எனக்கு நம்பிக்கை இல்லை, ஆனால் நீங்கள் நேர்மையான ஜனங்கள் என்று நினைக்கிறேன். இந்தப் புத்தகத்தின் கடைசி பக்கத்தில் உங்கள் விலாசத்தைப் பார்த்தேன்.” ஆகவே, ஒரு பைபிளை அனுப்பித் தருமாறு கேட்டு அந்த விலாசத்திற்கு அவர் கடிதம் எழுதினார்.

குடும்ப மகிழ்ச்சி புத்தகத்தில் காணப்படுகிற நியமங்கள், அதாவது குடும்பத்தில் மகிழ்ச்சியை அனுபவிக்க உதவும் நியமங்கள், பைபிள் போதனைகளின் அடிப்படையில் அமைந்தவை. அப்புத்தகத்தில் இருக்கும் பயனுள்ள அதிகாரங்களில் சில இதோ: “சிசுப்பருவத்திலிருந்தே உங்கள் பிள்ளையை பயிற்றுவியுங்கள்,” “உங்கள் குடும்பத்தை தீங்கு விளைவிக்கும் செல்வாக்குகளிலிருந்து பாதுகாத்திடுங்கள்,” “உங்கள் குடும்பத்தில் சமாதானத்தைக் காத்துக்கொள்ளுங்கள்.”

இந்தப் புத்தகத்தைப் பற்றி கூடுதல் தகவல் பெற விரும்பினால் இங்கே உள்ள கூப்பனைப் பூர்த்தி செய்து, இப்பத்திரிகையின் 5-⁠ம் பக்கத்திலுள்ள பொருத்தமான விலாசத்திற்கு அனுப்பவும். (g05 6/22)

எந்த நிபந்தனையுமின்றி, குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம் என்ற புத்தகத்தைப் பற்றி கூடுதல் தகவல் பெற விரும்புகிறேன்.

இலவசமாக பைபிளை கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன்.