கடவுள் நம்மை ஏன் படைத்தார்?
கடவுள் நம்மை ஏன் படைத்தார்?
◼ இந்தப் பூமியில் ஏதோ கொஞ்ச காலம் வாழ்ந்துவிட்டு, அதாவது எழுபதோ எண்பதோ வருடங்கள் வாழ்ந்துவிட்டு, பிறகு சாவதற்குத்தான் கடவுள் நம்மை படைத்தாரா? நல்லவர்கள் இறுதியில் பரலோகத்தில் வாழ வேண்டும் என்பதற்காக படைத்தாரா? அவர் ஏன் பூமியைப் படைத்தார்? மனிதர்கள் தற்காலிகமாய் குடியிருப்பதற்காகத்தான் அதைப் படைத்தாரா?
மனிதர்கள் என்றென்றும் குடியிருப்பதற்காகவே அவர் பூமியைப் படைத்தார் என பூமியில் வாழ்க்கையை என்றென்றும் மகிழ்வுடன் அனுபவியுங்கள்! என்ற 32 பக்க சிற்றேடு விளக்குகிறது. சரிவர பராமரிக்கப்படும்போது அழகிய தோட்டமாக, பரதீஸாக இருக்கும் விதத்தில் பூமி உருவாக்கப்பட்டது. ஆனால் என்ன சம்பவித்துவிட்டது என்பதை, “மனிதன் சாவது ஏன்?,” “மரணம் என்றால் என்ன?” ஆகிய பகுதிகளில் அச்சிற்றேடு விளக்குகிறது; “யெகோவா நமக்கு ஓர் இரட்சகரைத் தருகிறார்,” “பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் நாம் எப்படி விடுதலை அடைகிறோம்” ஆகிய பகுதிகள், இந்த பூமி எப்படி மனிதர்கள் குடியிருப்பதற்கு ஏற்ற அருமையான பரதீஸாக ஆகும் என்பதைக் காட்டுகின்றன.
இந்தச் சிற்றேட்டில் 75-க்கும் அதிகமான படங்கள் இருக்கின்றன, ஒவ்வொரு படத்திற்கும் பைபிளிலிருந்து ஒரு வசனமோ பல வசனங்களோ கொடுக்கப்பட்டுள்ளன. இந்த வசனங்கள், படங்களைப் பற்றிக் கலந்தாலோசிப்பதற்கு உதவுகின்றன. உங்களுக்குப் பிள்ளைகள் இருந்தால் கடவுளுடைய நோக்கங்களைப் பற்றி அவர்களுக்குக் கற்றுக்கொடுக்க இப்படங்களை நீங்கள் பயன்படுத்தலாம். (g05 7/22)
◻எந்த நிபந்தனையுமின்றி, பூமியில் வாழ்க்கையை என்றென்றும் மகிழ்வுடன் அனுபவியுங்கள்! என்ற சிற்றேட்டைப் பற்றி கூடுதல் தகவல் பெற விரும்புகிறேன்.
◻இலவசமாக பைபிளை கற்றுக்கொள்ள ஆசைப் படுகிறேன்.