Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

எமது வாசகரிடமிருந்து

எமது வாசகரிடமிருந்து

எமது வாசகரிடமிருந்து

குழந்தைகள் “குழந்தைப் பருவம்​—⁠பெற்றோர் என்ன செய்ய வேண்டும்?” (நவம்பர் 8, 2004) என்ற தொடர் கட்டுரைகளைச் சமீபத்தில் படித்தேன். அவை என்னை ரொம்பவே கவர்ந்ததால் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். என் மகளுக்கு ஐந்து வயதாகப் போகிறது. ஒவ்வொரு நிமிஷமும் அவள் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை நன்றாக ப்ளான் போட வேண்டும் என்றே அதுவரை நினைத்திருந்தேன். ஆனால் குழந்தைகள் இப்படித்தான் விளையாட வேண்டும் என்று சட்டம் போடாமல், அவர்களை ஃப்ரீயாக விட வேண்டும் என்ற சில அறிஞர்களுடைய கருத்தைப் பற்றி இப்பத்திரிகை சொன்னது. அப்படி அவர்களை ஃப்ரீயாக விடும்போது அவர்களுடைய படைப்பாற்றல் அதிகரிக்கும், அதோடு சமூக ரீதியிலும் மனோ ரீதியிலும் உணர்ச்சி ரீதியிலும் திறமைகளை வளர்த்துக்கொள்ள அவர்களுக்கு உதவியாக இருக்கும் என்பதையெல்லாம் தெரிந்துகொண்டேன். இந்தக் கட்டுரைக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்! தயவுசெய்து இதுபோன்ற கட்டுரைகளைத் தொடர்ந்து பிரசுரியுங்கள்!

ஐ.கே., ரஷ்யா

இந்தத் தொடர் கட்டுரைகளைப் படித்தபோது என்னால் அழுகையை அடக்கவே முடியவில்லை. 29 வருடங்களுக்கு முன், யெகோவாவை அறியாத இளம் பெண்ணாக இருந்த நான் ஒரு குழந்தைக்குத் தாயானேன். குழந்தையை வளர்க்கத் தெரியாததால் நிறைய தவறுகளைச் செய்தேன். இப்போதோ என்னுடைய சோகக் கண்ணீரெல்லாம் ஆனந்தக் கண்ணீராக மாறியிருக்கிறது. ஒரு வாரத்திற்கு முன்புதான் என்னுடைய மகளுக்கு முதல் குழந்தை பிறந்திருக்கிறது. யெகோவாவை நேசிக்கிற, இதுபோன்ற கட்டுரைகளிலிருந்து பயனடைகிற அம்மா அப்பா என் பேரக் குழந்தைக்குக் கிடைத்திருப்பதற்காக, யெகோவாவுக்கு ரொம்ப நன்றியுள்ளவளாய் இருக்கிறேன்.

இ.எச்., ஐக்கிய மாகாணங்கள் (g05 8/8)

இளைஞர் கேட்கின்றனர் “இளைஞர் கேட்கின்றனர் . . . என் மனசில் இருப்பதை எப்படி அவரிடம் சொல்வேன்?” (நவம்பர் 8, 2004) என்ற கட்டுரைக்காக ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். சமீபத்தில்தான் என்னுடைய காதலி என்னைக் கைவிட்டாள். அவளை நான் தொடர்ந்து நேசித்ததால், அவள் திரும்பி வருவாள் என்ற நம்பிக்கையோடு இருந்தேன். ஆனால் இந்தக் கட்டுரையைப் படித்த பின்பு, அது ஒரு வீண் கற்பனை என்று புரிந்துகொண்டேன். இப்போதுதான், அதுவும் முதல் முறையாக, நிஜத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடிந்திருக்கிறது. நடைமுறையான இந்தக் கட்டுரைக்கு மிக்க நன்றி. பைபிள் நியமங்கள் எவ்வளவு உதவியாக இருக்கின்றன என்பதை மறுபடியும் புரிந்துகொண்டேன்.

வை.கே., ஜப்பான்

இப்போது கல்யாணத்தைப் பற்றி நான் யோசிக்காவிட்டாலும் இந்தக் கட்டுரை எனக்குப் பயனுள்ளதாக இருக்கிறது; ஏனென்றால் ஜாக்கிரதையாய் இருக்க இது எனக்கு உதவுகிறது. இளைஞர்களான நாங்கள் சாத்தானின் தாக்குதலுக்கு முக்கிய குறியாய் இருக்கிறோம் என்பது உண்மைதான், ஆனால் யெகோவா எங்களுக்கு உதவிக் கரம் நீட்டுகிறார் என்பதும் உண்மையே. இது போன்ற கட்டுரைகளைத் தொடர்ந்து பிரசுரியுங்கள்!

சி.டி., ருமேனியா

காரியங்களை எதார்த்தமாகப் பார்க்க இந்தக் கட்டுரை எனக்கு உதவியது. அதோடு, ஒருவரைப் பற்றி நன்கு தெரிந்துகொண்ட பிறகே என்னுடைய உணர்ச்சிகளை அவரிடம் சொல்ல வேண்டுமென்ற தீர்மானத்துடன் இருக்கவும் எனக்கு உதவியது. எல்லாவற்றிற்கும் மேலாக இந்தக் கட்டுரை, சபையில் நல்ல பெயரெடுக்கவும், யெகோவாவுடன் உள்ள உறவை மேம்படுத்தவும் சபை காரியங்களில் அதிகமாகப் பங்குகொள்ளவும் என்னை ஊக்குவித்தது. இப்படிச் செய்யும்போது எல்லோரும் விரும்புகிற நபராக இருக்க முடியும். இளைஞர்களுக்காக இவ்வளவு அக்கறை எடுத்து எழுதிய இந்த அருமையான கட்டுரைக்கு மிக்க நன்றி!

டி.கே., ஹாலந்து

ஒரு நாள் என் தோழியுடன் பேசிக்கொண்டிருந்தேன். அவள் ஒரு நபரைக் காதலிப்பதாகச் சொன்னாள். அதைக் குறித்து என்னிடம் ஆலோசனைக் கேட்டாள். இது சம்பந்தமாக பைபிள் என்ன சொல்கிறது என்று நாங்கள் யோசித்துக்கொண்டிருந்தோம். அடுத்த நாளே இந்தப் பத்திரிகை எங்கள் கைக்குக் கிடைத்தபோது, நாங்கள் எந்தளவு ஆச்சரியப்பட்டிருப்போம் என்பதைச் சொல்லவும் வேண்டுமா! இது போன்ற கட்டுரைகளைப் பிரசுரிப்பதற்கு ரொம்ப நன்றி!

ஜே.எஸ்., அயர்லாந்து

எனக்கு 14 வயதாகிறது. லவ் பண்ணுவது, டேட்டிங் செய்வது போன்ற விஷயங்களைத்தான் என் வகுப்பிலுள்ள பிள்ளைகள் எப்போதும் பேசிக்கொண்டிருப்பார்கள். இந்தக் கட்டுரையைப் படித்த பிறகு, எதிர்காலத்தில் ஒரு நல்ல மணத்துணையை எப்படித் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று தெரிந்துகொண்டேன். யெகோவா நம்மீது எவ்வளவு அக்கறையுள்ளவராக இருக்கிறார் என்றும், காலத்துக்கேற்ற அறிவுரைகளை நமக்கு கொடுக்கிறார் என்றும் புரிந்துகொண்டேன். பையன்களோடு பழகும் விஷயத்தில், கடவுளுக்குப் பிடித்த மாதிரி ஞானமாக நடக்க விரும்புகிறேன். தயவுசெய்து இதுபோன்ற அருமையான கட்டுரைகளைத் தொடர்ந்து பிரசுரியுங்கள்.

கே.எல்., ஜப்பான் (g05 8/8)