Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கடவுள் உண்மையிலேயே அக்கறை உள்ளவராக இருக்கிறாரா?

கடவுள் உண்மையிலேயே அக்கறை உள்ளவராக இருக்கிறாரா?

கடவுள் உண்மையிலேயே அக்கறை உள்ளவராக இருக்கிறாரா?

கடவுள் என்று ஒருவர் இருந்தால், மனிதர்கள் படும் கஷ்டங்களையெல்லாம் பார்த்துவிட்டு அவர் சும்மா இருக்க மாட்டார் என்றே அநேகர் நினைக்கின்றனர். “எங்களுக்கு உதவி தேவைப்பட்டபோது கடவுள் எங்கிருந்தார்?” என்ற கேள்வியைத்தான் சிலர் அடிக்கடி கேட்கின்றனர். மனித சரித்திரம் முழுவதிலும், கோடானுகோடி மக்கள் கடும் துயரத்தில் தவித்திருக்கின்றனர், சிலர் சித்திரவதை செய்யப்பட்டு இறந்திருக்கின்றனர்.

அதே சமயத்தில், உயிரினங்களின் பிரமிக்க வைக்கும் ஒழுங்கமைப்பையும் வடிவமைப்பையும் பார்க்கும்போது, அக்கறையுள்ள ஒரு படைப்பாளர் நிச்சயம் இருக்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆனால் இவ்வளவு அக்கறையுள்ள ஒரு கடவுள் ஏன் கடுந்துயரங்களை அனுமதிக்கிறார்? கடவுளை நாம் சரியான விதத்தில் வழிபட வேண்டுமென்றால், இந்த முக்கிய கேள்விக்குத் திருப்தியான பதிலைக் கண்டுபிடிக்க வேண்டும். ஆனால் அதை எங்கே கண்டுபிடிக்க முடியும்?

பதிலைக் கண்டுபிடிக்க, கடவுள் உண்மையில் நம்மைப்பற்றி அக்கறை உள்ளவராக இருக்கிறாரா? என்ற சிற்றேட்டைப் பார்க்கும்படி உங்களை நாங்கள் அழைக்கிறோம். “கடவுள் ஏன் துன்பத்தை அனுமதித்திருக்கிறார்,” “கலகத்தின் விளைவு என்னவாக இருந்திருக்கிறது?” என்ற தலைப்புகளின் கீழ் திருப்தியான பதில்கள் உங்களுக்குக் கிடைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். (g05 8/22)

எந்த நிபந்தனையுமின்றி, கடவுள் உண்மையில் நம்மைப்பற்றி அக்கறை உள்ளவராக இருக்கிறாரா? என்ற சிற்றேட்டைப் பற்றி கூடுதல் தகவல் பெற விரும்புகிறேன்.

இலவசமாக பைபிளை கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன்.