Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பலரை நெகிழ வைத்த பழைய கட்டுரை

பலரை நெகிழ வைத்த பழைய கட்டுரை

பலரை நெகிழ வைத்த பழைய கட்டுரை

வடகிழக்குப் போலந்தில் சுவாவ்கி என்ற இடத்திலுள்ள ஒரு பள்ளி ஆசிரியை, கருக்கலைப்பைப் பற்றி கலந்தாலோசிக்க மாணவர்களைத் தயாரித்து வரச்சொன்னார். 16 வயதான யுஸ்டீனா, இது சம்பந்தமான தகவல்களை யெகோவாவின் சாட்சிகளுடைய பிரசுரங்களிலிருந்து சேகரித்தாள். கலந்தாலோசிப்பதற்கான நாள் வந்தபோது, கருக்கலைப்பைப் பற்றிச் சொல்லுமாறு மாணவர்களை ஆசிரியை கேட்டுக்கொண்டார்.

யுஸ்டீனா இவ்வாறு சொல்கிறாள்: “நான் ஆசிரியையிடம் சென்று மே 22, 1980, விழித்தெழு! (ஆங்கிலம்) பிரதியில் வெளியான, ‘ஒரு பிறவா குழந்தையின் டைரி’ என்ற கட்டுரையைக் காண்பித்தேன். இந்தக் கட்டுரை, கருக்கலைப்பால் இறக்கப்போகும் ஒரு சிசு பேசுவது போல் எழுதப்பட்டிருப்பதால், ரொம்ப சுவாரஸ்யமாக இருக்கும் என்று சொன்னேன்.” அதை அந்த ஆசிரியை சப்தமாக வாசிக்க ஆரம்பித்தார். மாணவர்கள் எல்லோரும் அமைதியாக, கூர்ந்து கவனித்தார்கள்.

ஆசிரியை பாதி கட்டுரையைக்கூட வாசித்திருக்க மாட்டார், அதற்குள் அவருக்குத் துக்கம் தொண்டையை அடைத்தது. எனவே, ஒரு மாணவியைத் தொடர்ந்து வாசிக்கச் சொல்லிவிட்டு, அவர் போய் உட்கார்ந்து அழத்தொடங்கினார். அந்தக் கட்டுரை முழுவதும் வாசிக்கப்பட்ட பிறகு, அதைக் குறித்து நிறைய விஷயங்களை வகுப்பாகக் கலந்துபேசினார்கள். சில மாணவர்கள் இக்கட்டுரையின் ஒரு பிரதியைக் கேட்டார்கள். “யெகோவாவின் சாட்சிகளுடைய பிரசுரங்களின் மீது அவர்களுக்கு நல்ல அபிப்பிராயம் ஏற்பட்டது. முன்பு அவர்களுக்கு இருந்த தவறான கருத்தை இப்போது மாற்றிக் கொண்டார்கள். அதுமட்டுமல்ல, ஒரு மாணவன் விழித்தெழு! பத்திரிகையைத் தவறாமல் வாசிக்கவும் ஆரம்பித்துவிட்டான்” என யுஸ்டீனா சொல்கிறாள்.

யுஸ்டீனா, 20 வருடங்களுக்கு முன்பு வெளிவந்த விழித்தெழு! பத்திரிகையை நல்ல விதத்தில் உபயோகித்து சாட்சி கொடுத்தாள். அவளைப் போலவே நீங்களும் பழைய பத்திரிகைகளில் ‘ஞானம்’ கொட்டிக் கிடப்பதைக் காண்பீர்கள். (யோபு 28:18) யெகோவாவின் சாட்சிகளுடைய உள்ளூர் ராஜ்ய மன்றத்தில் நடக்கும் கூட்டங்களுக்குச் செல்லும்போது, அங்குள்ள லைப்ரரியின் ஷெல்ஃபுகளில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் விழித்தெழு! பவுண்டு வால்யூம்களை நீங்கள் அலசிப்பார்க்கலாம். பழையதாக இருந்தாலும் அதன் மதிப்புமிக்க கட்டுரைகளை வாசிப்பதன் மூலம் நீங்கள் பயனடைவீர்கள். சமீபத்திய விழித்தெழு! பத்திரிகையை உங்கள் ஏரியாவில் வசிக்கும் யெகோவாவின் சாட்சிகளிடமிருந்து நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். (g05 8/8)

[பக்கம் 31-ன் படம்]

யுஸ்டீனா, உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போது