Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மாணவர்களின் அபிப்பிராயம் மாறியது

மாணவர்களின் அபிப்பிராயம் மாறியது

மாணவர்களின் அபிப்பிராயம் மாறியது

விக்டோரியா என்ற 11 வயது சிறுமி (மேலே படத்தில்), உக்ரைனில் வசிக்கிறாள். அவளுக்குப் பிடித்தமான ஒரு புத்தகத்தைப் பற்றி ரிப்போர்ட் ஒன்றைத் தயாரித்து அளிக்கும்படி அவளுடைய டீச்சர் சொன்னார். வகுப்பிலிருந்த எல்லோருமே அந்தப் புத்தகத்தை ஆசையோடு வாங்கிப் படிக்கும் அளவிற்குச் சுவாரஸ்யமாக அதை அளிக்கும்படி சொன்னார். விக்டோரியா சொல்கிறாள்: “உடனே நான் இளைஞர் கேட்கும் கேள்விகள்​—⁠பலன்தரும் விடைகள் என்ற புத்தகத்தைப் பற்றிய ரிப்போர்ட்டை அளிக்க முடிவு செய்தேன். அந்தப் புத்தகத்தின் பொருளடக்கத்தையும், அதிலுள்ள பைபிள் நியமங்களையும் விளக்கிச் சொன்னேன். கிளாஸ் முடிந்தவுடனே அந்தப் புத்தகத்தைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் கடைசியாகக் குறிப்பிட்டேன்.”

மாணவர்கள் அந்தப் புத்தகத்தைப் பெற்றுக்கொண்டார்களா? விக்டோரியாவே சொல்கிறாள்: “அன்றைக்கு மொத்தம் 20 பேர் புத்தகத்தைப் பெற்றுக்கொண்டார்கள். யெகோவாவின் சாட்சிகளை மதபேதவாதிகள் என்று நினைத்துக்கொண்டிருந்த மாணவர்கள் தங்கள் அபிப்பிராயத்தை மாற்றிக்கொண்டார்கள்; அதுமட்டுமல்ல, இரண்டு பேர் நம் பத்திரிகைகளைத் தொடர்ந்து படிக்கவும் ஆரம்பித்திருக்கிறார்கள்!”

இளைஞர் கேட்கும் கேள்விகள் என்ற இப்புத்தகம் இளைஞர்களின் எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் ஊடுருவிப் பார்க்கிறது; பயனுள்ள விஷயங்களைப் பேசுவதற்குத் தூண்டுகிறது. அதோடு, இளைஞர்களின் மனதில் எழும் சில கேள்விகளுக்குப் பதில்களையும் அளிக்கிறது; உதாரணத்திற்கு, “என் பெற்றோர் எனக்கு மேலுமதிக சுதந்திரம் தரும்படி நான் எவ்வாறு செய்விப்பது?,” “நான் எவ்வாறு உண்மையான நண்பர்களை அடைய முடியும்?,” “விவாகத்துக்கு முன்னான பாலுறவு பற்றி என்ன?” போன்ற கேள்விகளுக்குப் பதில் அளிக்கிறது. அதிலுள்ள 39 அதிகாரங்களில் இன்னும் அநேக விஷயங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

இப்புத்தகத்தைப் பற்றி கூடுதலான தகவல் பெற வேண்டுமென்றால் இங்கே கொடுக்கப்பட்டுள்ள கூப்பனை பூர்த்தி செய்து இந்தப் பத்திரிகையின் 5-ம் பக்கத்தில் உள்ள பொருத்தமான விலாசத்திற்கு அனுப்புங்கள். (g05 11/22)

இளைஞர் கேட்கும் கேள்விகள்​—⁠பலன்தரும் விடைகள் என்ற புத்தகத்தைப் பற்றி எந்த நிபந்தனையுமின்றி கூடுதலான தகவல் பெற விரும்புகிறேன்.

□ இலவசமாக பைபிளை கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன்.