Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

எமது வாசகரிடமிருந்து

எமது வாசகரிடமிருந்து

எமது வாசகரிடமிருந்து

மலைகள்​—⁠உயிர் வாழ்வுக்கு இன்றியமையாதவை (ஏப்ரல் 8, 2005) என்னை வியப்பில் ஆழ்த்திய சம்பவங்களில் ஒன்று, கிராண்ட் டீட்டான் மலையைப் பார்த்ததுதான். ஆனால், மலைகள் எவ்வளவு இன்றியமையாதவை என்று படித்தபோது இன்னுமதிகமாக வியந்தேன். மலைகள் மீதும் அவற்றை உருவாக்கிய அற்புத படைப்பாளர் மீதும் என்னுடைய போற்றுதல் இப்போது அதிகரித்துள்ளது.

ஜெ.ஜி., ஐக்கிய மாகாணங்கள்

யெகோவாவுடைய படைப்பின் அழகைப் பார்க்கும்போது எனக்குள் பொங்கியெழும் உணர்ச்சிகளை வார்த்தைகளில் வடிக்கவே முடியாது. மனிதனின் ஆக்கிரமிப்பு, சுற்றுச்சூழல் தூய்மைக்கேடு ஆகியவை மலைகளைப் பாதித்திருக்கிறபோதிலும், அவற்றைப் போற்றுதலோடு நம்மால் ரசிக்க முடிகிறது. சங்கீதம் 72:16-⁠ல் சொல்லப்பட்ட விதமாக சீக்கிரத்தில் சம்பவிக்கப்போவதைப் பற்றி மற்றவர்களுக்குச் சொல்வதில் சந்தோஷப்படுகிறேன்.

ஆர்.சி., ஐக்கிய மாகாணங்கள்

இளைஞர் கேட்கின்றனர் . . . நான் ஏன் உடலை வளைத்து வேலை செய்ய வேண்டும்? (ஏப்ரல் 8, 2005) நான் என் அப்பாவின் பெயின்ட் கம்பெனியில் வேலை செய்கிறேன். இந்த வேலைக்கு மூளையை உபயோகிக்கத் தேவையில்லை என்று யாரோ என்னிடம் சொன்னார்கள். ஆனால் இந்தக் கட்டுரையில், இயேசுவும் பவுலும் கைத்தொழிலில் ஈடுபட்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இப்போது, என் வேலையை இன்னும் ஆர்வத்தோடு செய்ய உற்சாகம் பெற்றிருக்கிறேன். மாநாட்டு மன்றங்களையும் ராஜ்ய மன்றங்களையும் கட்ட உதவுவதற்காக இந்த வேலையில் என் திறமைகளை வளர்த்துக்கொள்ள கடினமாக முயற்சி செய்யப்போகிறேன்.

எம்.ஒய்., ஜப்பான்

இந்தக் கட்டுரை என்னை உண்மையிலேயே ஊக்குவித்தது! யெகோவா தேவனுக்குச் சேவை செய்வதுதான் வாழ்க்கையின் முக்கிய நோக்கம் என்பதையும், நான் தேர்ந்தெடுக்கிற வேலை இந்த நோக்கத்திற்கு இசைவாக இருக்க வேண்டும் என்பதையும் இக்கட்டுரை எனக்கு நினைப்பூட்டியது. வீட்டு வேலையை நானே முன்வந்து செய்வதில் இன்னும் முன்னேற அருமையான இந்தக் கட்டுரை என்னைத் தூண்டியது. எல்லாவற்றிக்கும் மேலாக, உடலை வளைத்து வேலை செய்வதை யெகோவா எப்படிக் கருதுகிறார் என்பதைப் புரிந்துகொள்ள அது எனக்கு உதவியது.

ஒய்.கே., ரஷ்யா

உயிர்​—⁠ஓர் அற்புத சங்கிலித் தொகுப்பு (பிப்ரவரி 8, 2005) எனக்கு 15 வயது. பள்ளியில் உயிரியல் வகுப்பின்போது, ஆற்றல் வளர்சிதை மாற்றம் என்ற தலைப்பில் படித்துக்கொண்டிருந்தோம். நான் இந்தப் பத்திரிகையைப் பள்ளிக்குக் கொண்டுசென்றபோது, என் உயிரியல் ஆசிரியர் இந்தக் கட்டுரையை உபயோகித்து அதிலிருந்த படங்களைக் காட்டி பாடம் நடத்தினார். வகுப்பு முடிந்ததும் அந்தப் பத்திரிகையைப் பெற்றுக்கொள்ள எல்லாருமே விரும்பினார்கள். யெகோவா எவ்வளவு ஞானமுள்ளவர் என்று இந்தக் கட்டுரையிலிருந்து தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. சந்தேகமே இல்லை, யெகோவாதான் நம் போற்றுதலுக்குப் பாத்திரமானவர். எல்லா உயிர்களும் யெகோவாவைப் போற்றிப்பாடும் காலத்திற்காக ஆவலோடு காத்திருக்கிறேன்!

ஒய்.பி., ரஷ்யா

“இதை மட்டும் மக்கள் புரிந்துகொண்டால் . . .!” (பிப்ரவரி 8 2005) எனக்கு 17 வயது; ராஜ்ய பிரஸ்தாபிகள் அதிகமாகத் தேவைப்படும் இடத்திற்குப் போக நான் எப்போதும் நினைத்ததுண்டு. என் பள்ளி படிப்பை முடித்த கையோடு அப்படிப்பட்ட பிராந்தியத்திற்குப் போக வேண்டுமென்று திடத்தீர்மானமெடுக்க டேவிடின் உதாரணம் என்னை உந்துவித்தது. தயவுசெய்து இதுபோன்ற ஆட்களின் ஊக்கமூட்டும் உதாரணங்களைத் தொடர்ந்து வெளியிடுங்கள். என்னைப் போன்ற இளைஞர்கள் பிரசங்க வேலையில் முன்னேற இப்படிப்பட்ட ஊக்கம் தொடர்ந்து தேவை.

கே.ஓ., போலந்து

எனக்கு 20 வயது. இந்தக் கட்டுரையைப் படித்ததும் என் கண்கள் கலங்கிவிட்டன. “ஒருவேளை நான் சிறியவளாக இருக்கும்போதே இறந்துபோக நேரிட்டால், ‘முடிந்தளவு யெகோவாவுக்குச் சேவை செய்யாமல் போய்விட்டேனே’ என்ற வருத்தமே எனக்கு இருக்கக் கூடாது” என்று நினைத்துக்கொண்டேன். சீக்கிரத்தில் முழுநேர ஊழியத்தை ஆரம்பித்துவிட வேண்டும் என்பதே என் இலட்சியம். இக்கட்டுரையை ஃப்ரேம் செய்து சுவரில் தொங்கவிடப் போகிறேன், அப்போதுதான் அதை வாசித்தபோது என் மனதில் ஏற்பட்ட உணர்வு அகலாமல் அப்படியே இருக்கும். இப்படிப்பட்ட அருமையான அனுபவங்களைப் பிரசுரிப்பதற்காக நன்றி.

என்.என்., ஜப்பான்