பிள்ளை மரிக்கையில்
பிள்ளை மரிக்கையில்
◼ ஏதேனுமொரு விபத்தில் ஒரு பிள்ளை இறந்துவிட்டால், அதில் தப்பியவர்களுக்கு, குறிப்பாகப் பெற்றோர்களுக்கு, பெரும் அதிர்ச்சியாக இருக்கும். தன் 16 வயது மகனை கோர தீ விபத்தொன்றில் பறிகொடுத்த ஒரு தாய் இவ்வாறு புலம்புகிறார்: “பிள்ளைகளுக்குப் பதிலாக நாங்கள் செத்துப்போவதற்கும் கடவுள் விடுவதில்லை, அவர்களோடு சேர்ந்து செத்துப்போகவும் அவர் விடுவதில்லை.”
என்றாலும், அந்தத் தாய்க்கு நம்பிக்கை இல்லாமல் இல்லை; “மரணத்தைப் பற்றிய உண்மையைக் கடவுள் சொல்லியிருக்கிறார், மனம் கசந்துபோகாமலும் குழப்பத்தில் ஆழ்ந்துபோகாமலும் இருக்க இந்த உண்மை எனக்கும் என் கணவருக்கும் உதவியிருக்கிறது” என அவர் சொல்கிறார். “எங்கள் மகன் செத்ததற்குக் காரணம் கடவுள் அல்ல; சொல்லப்போனால், இறந்தவர்களைப் பரதீஸ் பூமியில் உயிர்த்தெழுப்புவதே அவருடைய நோக்கம்” என்று ஒப்புக்கொள்ளும் அவர் மேலும் இவ்வாறு சொல்கிறார்: “எங்கள் மகன் ஆரோக்கியமாக, சந்தோஷமாக தன் நண்பர்களுடனும் குடும்பத்துடனும் சேர்ந்து வாழப்போவதை எங்களால் கற்பனைசெய்து பார்க்க முடிகிறது.”
ஆம், உயிர்த்தெழுதலைக் குறித்த கடவுளுடைய வாக்குறுதியில் முழு நம்பிக்கை வைத்திருப்பவர்களுக்குக்கூட ஆறுதல் தேவைப்படுகிறது. அத்தகைய ஆறுதலை அநேக நண்பர்களிடமிருந்து அந்தத் தாய் பெற்றபோது அதை நன்றியோடு ஏற்றுக்கொண்டார். அவர் இவ்வாறு கூறினார்: “நீங்கள் நேசிக்கிற ஒருவர் மரிக்கையில் என்ற சிற்றேட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் வேதப்பூர்வ கருத்துகளை அவர்கள் எங்களுடன் பகிர்ந்துகொண்டார்கள்; அதில் சொல்லியிருக்கிறபடியே அன்பான பல உதவிகளையும் செய்தார்கள். எனவே, எங்களுக்குத் தெரிந்த மற்ற எல்லாரையுமே அந்தச் சிற்றேட்டைப் படிக்குமாறு ஊக்கப்படுத்தினோம்; எங்களைப் பற்றியும், நாங்கள் அனுபவித்துவரும் துக்கத்தைப் பற்றியும் அவர்கள் இன்னும் நன்கு புரிந்துகொள்ள அது உதவுமென்பதால் அவ்வாறு ஊக்கப்படுத்தினோம்.”
நீங்கள் நேசிக்கிற ஒருவர் மரிக்கையில் என்ற சிற்றேட்டிலிருந்து ஒருவேளை நீங்களோ அல்லது உங்களுக்குத் தெரிந்தவர்களோ ஆறுதலைப் பெற்றுக்கொள்ள முடியும். இந்தச் சிற்றேட்டைப் பற்றி கூடுதலான தகவல் பெற விரும்பினால், இங்கே கொடுக்கப்பட்டுள்ள கூப்பனை பூர்த்தி செய்து இந்தப் பத்திரிகையின் 5-ம் பக்கத்தில் உள்ள பொருத்தமான விலாசத்திற்கு அனுப்புங்கள்.
◻ நீங்கள் நேசிக்கிற ஒருவர் மரிக்கையில் என்ற சிற்றேட்டைப் பற்றி எந்த நிபந்தனையுமின்றி கூடுதலான தகவல் பெற விரும்புகிறேன்.
◻ இலவசமாக பைபிளை கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன். தயவுசெய்து என்னைத் தொடர்புகொள்ளவும்.