Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

“அருமையிலும் அருமை!”

“அருமையிலும் அருமை!”

“அருமையிலும் அருமை!”

கல்வி புகட்டுவதில் விழித்தெழு!-வின் பயனைக் கண்டு பிரேசில் நாட்டு புவியியல் ஆசிரியர் ஒருவர் ஈர்க்கப்பட்டார். அவர் இவ்வாறு எழுதினார்: “பாடநூல்களைவிட இந்தப் பத்திரிகைதான் பாடம் நடத்தத் தேவைப்படும் அநேக விஷயங்களை எனக்கு அளித்தது. நான் வேறு மதத்தவனாக இருந்தாலும், விழித்தெழு!-வின் மதிப்பீடுகளை நான் முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன்.”

விழித்தெழு! தவிர இன்னுமநேக பிரசுரங்களை யெகோவாவின் சாட்சிகள் வெளியிடுகிறார்கள் என்பதை அந்த ஆசிரியர் தெரிந்துகொண்டார். அவர் இவ்வாறு எழுதினார்: “ஆறாம் வகுப்பு மாணவன் ஒருவன், ‘அந்த நல்ல தேசத்தைப் பாருங்கள்’ என்ற சிற்றேட்டை எனக்குக் கொடுத்தான். அதில் உள்ள தகவலின் தரத்தைக் கண்டு நான் அசந்துபோனேன். அது அருமையிலும் அருமை! பைபிளிலுள்ள சம்பவங்கள் நடந்த இடங்களைக் கண்டுபிடித்து அவற்றை மனக்கண்களால் பார்க்க முடிவதால், பைபிள் படிப்பு இன்னும் அர்த்தமுள்ளதாக ஆகிறது, குறிப்பாக இளைஞர்களுக்கு.”

அவர் இவ்வாறு தொடர்கிறார்: “உங்கள் பிரசுரங்களை எல்லா இடங்களிலும் பார்க்க முடிகிறது: பஸ்சில், மாணவர்கள் மத்தியில், ஏன், வங்கியிலும்கூட வரிசையில் நிற்கும்போது பார்க்க முடிகிறது. சிறந்த தகவல்கள் சென்றெட்ட முடியாத சமுதாயங்களுக்கும் உங்கள் பிரசுரங்கள் சென்றெட்டிவிடுகின்றன; இதைக் குறித்து நான் அதிக மகிழ்ச்சி அடைகிறேன். உங்களுடைய அற்புதமான வேலைக்கு வாழ்த்துக்கள்.”

‘அந்த நல்ல தேசத்தைப் பாருங்கள்’ என்ற சிற்றேடு சுமார் 80 மொழிகளில் கிடைக்கிறது. பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு இடங்கள், முக்கியமாக வெவ்வேறு காலகட்டத்தில் வாக்குப்பண்ணப்பட்ட தேசம் எப்படி இருந்தது என்பதை காட்டுகிற முழு-வண்ண வரைபடங்களும் புகைப்படங்களும் இதில் உள்ளன. இந்த 36-பக்க சிற்றேட்டைப் பற்றி கூடுதல் தகவல் பெற விரும்பினால் இங்கே உள்ள கூப்பனைப் பூர்த்தி செய்து 5-⁠ம் பக்கத்திலுள்ள பொருத்தமான விலாசத்திற்கு அனுப்பவும்.

□ ‘அந்த நல்ல தேசத்தைப் பாருங்கள்’ என்ற சிற்றேட்டைப் பற்றி எந்த நிபந்தனையுமின்றி கூடுதலான தகவல் பெற விரும்புகிறேன்.

□ இலவசமாக பைபிளை கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன். தயவுசெய்து என்னைத் தொடர்புகொள்ளவும்.

[பக்கம் 32-ன் படத்திற்கான நன்றி]

Brochure covers: Pictorial Archive (Near Eastern History) Est.