Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

சரித்திரத்திலேயே அதிமுக்கியமான தேதி

சரித்திரத்திலேயே அதிமுக்கியமான தேதி

சரித்திரத்திலேயே அதிமுக்கியமான தேதி

அதுதான் இயேசு கிறிஸ்து இறந்த தேதி. இயேசுவின் மரணம் ஏன் அவ்வளவு முக்கியம்? அதற்கு அநேக காரணங்கள் உள்ளன.

இயேசுவைப் போல மனிதனும் கடைசிவரை கடவுளுக்கு உத்தமமாக இருக்க முடியும் என்பதை அவருடைய மரணம் நிரூபித்துக் காட்டியது.

கிறிஸ்து மரித்ததால்தான் பரலோகத்தில் அவரோடு ஆட்சிசெய்யும் வாய்ப்பு சில மனிதர்களுக்குக் கிடைத்திருக்கிறது. அதுமட்டுமல்ல, பரதீஸான பூமியில் நித்திய ஜீவனை சந்தோஷமாக அனுபவிக்கும் வாய்ப்பும் ஏராளமானோருக்குக் கிடைத்திருக்கிறது.

இயேசு தாம் இறப்பதற்கு முந்தின இரவன்று, அன்போடு தாம் செலுத்தவிருந்த மனித பலிக்கு அடையாளமாக புளிப்பில்லா அப்பத்தையும் சிவப்பு திராட்ச ரசத்தையும் உபயோகித்தார்; அப்போது, “என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்” என்று தம் சீஷர்களுக்குக் கட்டளையிட்டார். (லூக்கா 22:19) இந்த முக்கிய நிகழ்ச்சியை நீங்கள் நினைவுகூருவீர்களா?

இயேசுவின் நினைவுநாள் ஆசரிப்புக்கு யெகோவாவின் சாட்சிகள் உங்களை அன்புடன் அழைக்கிறார்கள். இந்த வருட ஆசரிப்பு புதன்கிழமை, ஏப்ரல் 12 அன்று சூரிய அஸ்தமனத்திற்குப் பின் நடைபெறும். உங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள ராஜ்ய மன்றத்தில் நடைபெறும் அந்நிகழ்ச்சியில் நீங்களும் கலந்துகொள்ளலாம். சரியான நேரத்தையும் இடத்தையும் யெகோவாவின் சாட்சிகளைக் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.