Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

“என்னால் அதை கீழே வைக்கவே முடியவில்லை”

“என்னால் அதை கீழே வைக்கவே முடியவில்லை”

“என்னால் அதை கீழே வைக்கவே முடியவில்லை”

கடந்த வருடம் உலகெங்கும் நடைபெற்ற யெகோவாவின் சாட்சிகளுடைய மாவட்ட மாநாடுகளில் ஒரு புதிய புத்தகம் வெளியிடப்பட்டது. பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? என்பதுதான் அப்புத்தகத்தின் தலைப்பு. 224 பக்கங்கள் கொண்ட அப்புத்தகத்தில் வண்ணப் படங்கள் உள்ளன. மொத்தத்தில், அடிப்படை பைபிள் போதனைகளைக் கற்பிப்பதற்கு உதவும் புத்தகம் அது.

ஒரு வாசகர் இவ்வாறு எழுதினார்: “என்னால் அதை கீழே வைக்கவே முடியவில்லை. பைபிளை மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுக்க இதுவரை நான் எத்தனையோ புத்தகங்களைப் பயன்படுத்தியிருக்கிறேன்; ஆனால், அந்தப் புத்தகங்களில் இருந்த சிறப்பம்சங்களை எல்லாம் ஒட்டுமொத்தமாக இந்த ஒரே புத்தகத்தில் பார்க்கிறேன்.”

இன்னொரு வாசகர் இவ்வாறு சொன்னார்: “ஒவ்வொரு பக்கமாகப் படிக்கப் படிக்க, இன்னும் படித்துக்கொண்டே இருக்க வேண்டும் போல் தோன்றுகிறது. ஒவ்வொரு அதிகாரத்தின் முடிவிலும், அடுத்த அதிகாரம் அறிமுகப்படுத்தப்படும் விதம் வெகு அருமை. படிக்கும்போது அநேக இடங்களில் கண்கள் குளமாகின்றன. இன்னும் எத்தனையோ விஷயங்கள் எனக்குப் பிடித்திருக்கிறது, அதையெல்லாம் எழுத ஆரம்பித்தால் அதுவே ஒரு புத்தகமாகிவிடும்!”

மற்றொரு வாசகர் நன்றி தெரிவித்து இவ்வாறு எழுதினார்: “இந்தப் புத்தகம் உண்மையிலேயே ஒரு பொக்கிஷம், பைபிளை யாருக்காவது புதிதாகச் சொல்லிக் கொடுப்பதற்குக் கிடைத்திருக்கும் ஒரு வரப்பிரசாதம்.”

இன்று 140-⁠க்கும் மேற்பட்ட மொழிகளில் கிடைக்கும் இந்தப் புத்தகத்தைப் பற்றி கூடுதல் தகவல் பெற விரும்பினால், இங்கே உள்ள கூப்பனைப் பூர்த்தி செய்து 5-⁠ம் பக்கத்திலுள்ள பொருத்தமான விலாசத்திற்கு அனுப்பவும்.

◻ பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? புத்தகத்தைப் பற்றி எந்த நிபந்தனையுமின்றி கூடுதலான தகவல் பெற விரும்புகிறேன்.

◻ இலவசமாக பைபிளை கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன். தயவுசெய்து என்னைத் தொடர்புகொள்ளவும்.