லட்சக்கணக்கானோர் வருகிறார்கள்—நீங்களும் வருகிறீர்களா?
லட்சக்கணக்கானோர் வருகிறார்கள்—நீங்களும் வருகிறீர்களா?
◼ எங்கே? “மீட்பு விரைவில்!” என்ற தலைப்பில் நடைபெறும் மாவட்ட மாநாட்டுக்கு. இந்த மூன்று நாள் மாநாட்டை யெகோவாவின் சாட்சிகள் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். நூற்றுக்கணக்கான இம்மாநாடுகள் அமெரிக்காவில் மே மாத கடைசி வாரத்தில் ஆரம்பமாயின; வரவிருக்கும் மாதங்களில் இம்மாநாடுகள் உலகெங்குமுள்ள நகரங்களில் வெவ்வேறு தேதிகளில் நடைபெற உள்ளன. சமீப ஆண்டு ஒன்றில் 2,981 இடங்களில் நடைபெற்ற மாவட்ட மாநாடுகளில் கலந்துகொண்டோரின் எண்ணிக்கை, சுமார் 1 கோடியே 10 லட்சம்!
பெரும்பாலான இடங்களில் இம்மாநாட்டு நிகழ்ச்சிகள் காலை 9:30 மணிக்கு இசையுடன் ஆரம்பமாகும். வெள்ளிக்கிழமை அன்று “மீட்பு பற்றிய யெகோவாவின் வாக்குறுதிகளுக்குக் கவனம் செலுத்துங்கள்,” “‘கூப்பிடுகிற எளியவனை’ யெகோவா விடுவிப்பார்” ஆகிய தலைப்புகளில் பேச்சுகள் கொடுக்கப்படும். “யெகோவாவின் ஏற்பாடுகள் நம்முடைய ‘நித்திய மீட்புக்கானவை’” என்ற முக்கியப் பேச்சுடன் காலை நிகழ்ச்சி நிறைவடையும்.
வெள்ளிக்கிழமை பிற்பகல் நிகழ்ச்சியில், “முதியோரை யெகோவா கனிவோடு கவனித்துக்கொள்கிறார்,” “தாங்க முடியாத வேதனையிலிருந்து மீட்பு,” “தேவதூதர்கள் செய்யும் ‘பணிவிடை’” ஆகிய தலைப்புகளில் பேச்சுகள் இடம்பெறும். அடுத்து, “யெகோவா—‘விடுவிக்கிறவர்’” என்ற தலைப்பில் நான்கு பகுதிகளைக் கொண்ட தொடர்பேச்சு கொடுக்கப்படும். இதைத் தொடர்ந்து வரும் கடைசி பேச்சின் தலைப்பு: “எதிர்க்கும் எந்த ஆயுதமும் நாவும் வெற்றி பெறாது.”
சனிக்கிழமை காலை, “‘இடைவிடாமல்’ தொடர்ந்து ஊழியம் செய்யுங்கள்” என்ற தலைப்பில் மூன்று பகுதிகளைக் கொண்ட தொடர்பேச்சு கொடுக்கப்படும். அதோடு, “‘வேடனுடைய கண்ணிக்குத் தப்புவிக்கப்படுதல்,’” “‘தேவனுடைய ஆழங்களுக்குள்’ ஆராய்தல்” ஆகிய தலைப்புகளிலும் பேச்சுகள் இடம்பெறும். முழுக்காட்டுதல் பேச்சோடு காலை நிகழ்ச்சிகள் நிறைவடையும்; தகுதி பெற்றவர்களுக்கு அதன் பிறகு முழுக்காட்டுதல் கொடுக்கப்படும்.
சனிக்கிழமை பிற்பகல் நிகழ்ச்சியில் பின்வரும் பேச்சுகள் இடம்பெறும்: “உடல்நல பராமரிப்பு விஷயத்தில் எப்போதும் பைபிள் சொல்வதைப் பின்பற்றுங்கள்,” “எத்தகைய மனப்பான்மை உங்கள் வாழ்க்கையைக் கட்டுப்படுத்துகிறது?,” “மணவாழ்க்கை எப்போதும் ‘முப்புரி நூலுடன்’ இருக்கட்டும்,” “இளைஞர்களே, ‘உங்கள் சிருஷ்டிகரை நினையுங்கள்.’” “யெகோவாவின் நாளை மனதில் வைத்து வாழ்கிறீர்களா?” என்ற கடைசிப் பேச்சில், நம் நாளுக்குத் தேவையான நடைமுறை ஆலோசனைகள் கொடுக்கப்படும்.
ஞாயிற்றுக்கிழமை காலை நிகழ்ச்சியில், “பரலோக ராஜ்யம் எதற்கு ஒப்பாயிருக்கிறதென்றால் . . . ” என்ற தலைப்பில் தொடர்பேச்சு இடம்பெறும். நான்கு பகுதிகளைக் கொண்ட இப்பேச்சு, இயேசுவின் உவமைகள் சிலவற்றைச் சுருக்கமாகச் சிந்திக்கும்.
மாவட்ட மாநாடுகளின் சிறப்பம்சங்களில் ஒன்றான நாடகத்தை அறிமுகப்படுத்தும் பேச்சு, காலை நிகழ்ச்சியில் இடம்பெறும். அதைத் தொடர்ந்து, 1 இராஜாக்கள் 13-ம் அதிகாரத்தின் அடிப்படையில் நாடகம் அரங்கேறும்; அதில், கதாபாத்திரங்கள் பூர்வ கால உடையணிந்து நடிப்பார்கள். மாநாட்டின் முடிவான நிகழ்ச்சியாக, ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் கொடுக்கப்படவிருக்கும் பொதுப் பேச்சின் தலைப்பு: “கடவுளுடைய ராஜ்யம் அளிக்கும் மீட்பு விரைவில்!”
இந்த மாவட்ட மாநாட்டில் கலந்துகொள்ள இப்போதே திட்டமிடுங்கள். நீங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகே மாநாடு எங்கே நடைபெறவிருக்கிறது என்பதை அறிந்துகொள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய ராஜ்ய மன்றத்தைத் தொடர்புகொள்ளுங்கள் அல்லது இப்பத்திரிகையைப் பிரசுரிப்போருக்குக் கேட்டெழுதுங்கள். இதன் கூட்டுப் பத்திரிகையான காவற்கோபுரத்தின் மார்ச் 1 தேதியிட்ட இதழில், இந்தியாவில் மாநாடுகள் நடைபெறும் இடங்களின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது.