“ரொம்ப அற்புதமாயிருக்கிறது!”
“ரொம்ப அற்புதமாயிருக்கிறது!”
“இந்தப் புத்தகத்தில் எளிமையான தகவல், மிகச் சிறந்த படங்கள், கூடுதல் விளக்கமளிக்கும் சிறப்பான பிற்சேர்க்கை ஆகியவை இருப்பதால் இது இதயத்தைத் தூண்டுவிக்கிறது. ரொம்ப அற்புதமாயிருக்கிறது!”—ஜான் மற்றும் பாலா.
“பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? புத்தகம் அளிக்கும் தெளிவான, எளிமையான விளக்கம் மலைக்க வைக்கிறது! புதிதாக பைபிள் படிப்பவர்கள் யெகோவாவுக்கு மனப்பூர்வமாக சேவை செய்ய முயலுகையில் பல தடைகள் குறுக்கிடலாம். அவற்றைத் தகர்த்தெறிய இப்புத்தகம் நிச்சயம் அவர்களைத் தூண்டுவிக்கும். இதைப் படித்த பிறகு நான் எந்தளவு மெய்சிலிர்த்துப் போனேன் என்பதை விவரிக்க வார்த்தைகளே இல்லை.”—ஜோ.
“மக்கள் மனதில் உண்மையிலேயே ஓடிக்கொண்டிருக்கும் எண்ணங்களையும் புதைந்திருக்கும் கவலைகளையும் தெளிவாகப் படம்பிடித்து காட்டியிருக்கிறீர்கள். எல்லா பதில்களையும் கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளிலிருந்து கொடுத்திருக்கிறீர்கள்.”—ராபர்ட்.
“உண்மையில் இது ஒரு பிரமாதமான புத்தகம்; புரிந்துகொள்ள எளிமையான வாக்கியங்களும் தெளிவான விளக்கங்களும் இதில் உள்ளன. இது அநேகருடைய இதயங்களைத் தொடுவது நிச்சயம்.”—நார்மா.
பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது?—வண்ணப் படங்களைக் கொண்ட, 224-பக்க புத்தகம்—இப்பொழுது 140-க்கும் மேற்பட்ட மொழிகளில் கிடைக்கிறது. இந்தப் புத்தகத்தைப் பற்றி கூடுதல் தகவல் பெற விரும்பினால் இங்கே உள்ள கூப்பனைப் பூர்த்தி செய்து 5-ம் பக்கத்திலுள்ள பொருத்தமான விலாசத்திற்கு அனுப்பவும்.
இப்புத்தகத்தை நீங்களும் பெற்றுக்கொள்ளலாமே!
◻ பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? புத்தகத்தைப் பற்றி எந்த நிபந்தனையுமின்றி கூடுதலான தகவல் பெற விரும்புகிறேன்.
◻ இலவசமாக பைபிளை கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன். தயவுசெய்து என்னைத் தொடர்புகொள்ளவும்.