Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

எப்படி பதில் அளிப்பீர்கள்?

எப்படி பதில் அளிப்பீர்கள்?

எப்படி பதில் அளிப்பீர்கள்?

இந்தப் படத்தில் என்ன தவறு?

ஆதியாகமம் 3:1-5-⁠ல் உள்ள பைபிள் பதிவோடு பொருந்தாத மூன்று விஷயங்களைக் கண்டுபிடியுங்கள்.

1. ․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․

2. ․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․

3. ․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․

கலந்தாலோசிக்க: நன்மைதீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியை சாப்பிடக்கூடாது என்று ஆதாமுக்கும் ஏவாளுக்கும் யெகோவா ஏன் கட்டளையிட்டார்? யெகோவாவின் கட்டளைகளுக்கு கீழ்ப்படிவது முக்கியம் என நீங்கள் ஏன் நினைக்கிறீர்கள்?

சரித்திரத்தில் எப்போது சம்பவித்தது?

படத்திலிருந்து ஒரு கோடு கிழித்து சிருஷ்டிப்பின் சம்பவங்களை அவை தொடங்கிய ‘நாளோடு’ இணையுங்கள்.

முதல் நாள் இரண்டாம் நாள் மூன்றாம் நாள் நான்காம் நாள் ஐந்தாம் நாள் ஆறாம் நாள் ஏழாம் நாள்

4. ஆதியாகமம் 1:14-16

5. ஆதியாகமம் 1:24

6. ஆதியாகமம் 1:20, 21

நான் யார்?

7. சரித்திரத்தில் முதன்முதலில் ஒரு நகரத்தைக் கட்டியவன் நானே.

நான் யார்?

8. பைபிளில் ஏவாளுக்கு அடுத்து பெயர் சொல்லி அழைக்கப்பட்ட முதல் பெண் நானே.

இந்த இதழிலிருந்து

இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள், குறிப்பிடப்படாத பைபிள் வசனத்தை அல்லது வசனங்களை எழுதுங்கள்.

பக்கம் 5 பைபிள் காலங்களில் எந்த உயிரினம் ஏறும் திறமைக்கு நன்கு அறியப்பட்டிருந்தது? (நீதிமொழிகள் 30:____)

பக்கம் 9 துதிக்கப்படுவதற்கு யெகோவா ஏன் தகுந்தவர்? (வெளிப்படுத்துதல் 4:____)

பக்கம் 20 விஞ்ஞான உண்மைகள் ஆதியாகமத்தில் முன்கூட்டியே பதிவுசெய்யப்பட்டிருப்பது எதை நிரூபிக்கிறது? (2 தீமோத்தேயு 3:____)

பக்கம் 25 ஒவ்வொன்றும் “அதினதின் காலத்திலே” எப்படிச் செய்யப்பட்டிருக்கின்றன? (பிரசங்கி 3:____)

பிள்ளைகளுக்காக: இந்தப் படங்கள் எங்கே இருக்கின்றன?

இங்குள்ள படங்கள் இந்தப் பத்திரிகையில் எங்கே இருக்கின்றன? ஒவ்வொரு படத்திலும் என்ன நடக்கிறது என்று உங்கள் சொந்த வார்த்தையில் சொல்லுங்கள்.

(பக்கம் 12-⁠ல் பதில்கள் கொடுக்கப்பட்டுள்ளன)

பக்கம் 31-⁠ல் உள்ள கேள்விகளுக்கான பதில்கள்

1. சர்ப்பம் ஏவாளிடம் பேசியது, ஆதாமிடம் அல்ல.​—⁠ஆதியாகமம் 3:⁠1.

2. ஏதேன் தோட்டத்தில் இருந்தபோது ஆதாம் ஏவாளுக்கு பிள்ளைகள் இல்லை.​—⁠ஆதியாகமம் 4:1.

3. தோட்டத்தில் இருந்தபோது ஆதாமும் ஏவாளும் நிர்வாணிகளாக இருந்தார்கள்.​—⁠ஆதியாகமம் 2:25.

4. நான்காம் “நாள்”.​—⁠ஆதியாகமம் 1:14-16, 19.

5. ஆறாம் “நாள்”.​—⁠ஆதியாகமம் 1:24, 31.

6. ஐந்தாம் “நாள்”.​—⁠ஆதியாகமம் 1:20, 21, 23.

7. காயீன்.​—⁠ஆதியாகமம் 4:⁠17.

8. ஆதாள்.​—⁠ஆதியாகமம் 4:⁠19.

[பக்கம் 31-ன் படங்களுக்கான நன்றி]

முதல் வட்டம்: Breck P. Kent; இரண்டாவது வட்டம்: © Pat Canova/Index Stock Imagery