Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கடவுள் அக்கறையுள்ளவரே!

கடவுள் அக்கறையுள்ளவரே!

கடவுள் அக்கறையுள்ளவரே!

ஏதேன் தோட்டத்தில் ஆரம்பித்த கலகத்தை கடவுள் கையாண்ட விதத்திலிருந்து அவர் நம் ஒவ்வொருவர் மீதும் அளவிலா அன்பு வைத்திருக்கிறார் என்பதும், நம் எதிர்காலத்தைக் குறித்து அக்கறையுள்ளவராக இருக்கிறார் என்பதும் தெரியவருகிறது. கடவுள் நம்மீது உண்மையிலேயே அக்கறையுள்ளவராக இருக்கிறார் என்பதற்கான பின்வரும் அத்தாட்சிகளை தயவுசெய்து கவனியுங்கள். அதோடு, கீழே குறிப்பிடப்பட்டுள்ள வசனங்களையும் உங்கள் பைபிளைத் திறந்து வாசியுங்கள்.

● வியக்கவைக்கும் விலங்கினங்களையும், செழிப்பான நிலங்களையும் கொண்ட இயற்கை அழகு கொஞ்சும் இந்தப் பூமியை அவர் நமக்கு கொடுத்திருக்கிறார். ​—⁠அப்போஸ்தலர் 14:17; ரோமர் 1:20.

● ருசியான உணவை உண்பது, சூரிய அஸ்தமனத்தைக் காண்பது, மழலையின் சிரிப்பொலியைக் கேட்பது, நமக்குப் பிரியமானவர் நம்மைத் தொடுவதை உணர்வது போன்ற தினசரி காரியங்களில் மகிழ்ச்சி காண அவர் அற்புதமான உடலை நமக்குக் கொடுத்திருக்கிறார். ​—⁠சங்கீதம் 139:14.

● பிரச்சினைகளையும் அழுத்தங்களையும் சமாளிக்க உதவும் ஞானமான அறிவுரைகளை நமக்கு அளித்திருக்கிறார்.​—⁠சங்கீதம் 19:7, 8; 119:105; ஏசாயா 48:17, 18.

● பூங்காவன பரதீஸ் பூமியில் வாழப்போகும் அருமையான நம்பிக்கையையும் மரித்த அன்பானவர்கள் மீண்டும் உயிர்பெற்று வருவதைப் பார்க்கும் நம்பிக்கையையும் அளித்திருக்கிறார்.​—⁠லூக்கா 23:43; யோவான் 5:28, 29.

● என்றென்றும் வாழும் நம்பிக்கையை நமக்கு அளிப்பதற்காக தம் ஒரேபேறான குமாரனை நமக்காக இறக்கச் செய்தார்.​—⁠யோவான் 3:16.

● பரலோகத்தில் மேசியானிய ராஜ்யத்தை ஸ்தாபித்திருக்கிறார்; அந்த ராஜ்யம் பூமியின்மீது முழுமையாக ஆட்சி செலுத்தும் என்பதற்கு ஏராளமான அத்தாட்சிகளை நமக்கு கொடுத்திருக்கிறார்.​—⁠ஏசாயா 9:6, 7; மத்தேயு 24:3, 4, 7; வெளிப்படுத்துதல் 11:15; 12:10.

● அவரிடத்தில் ஜெபிக்கவும் நம் இருதயத்தில் இருப்பதையெல்லாம் அவரிடம் கொட்டிவிடவும் நம்மை அழைக்கிறார். நாம் அப்படிச் செய்கையில் அதற்கு உண்மையிலேயே செவிகொடுக்கிறார்.​—⁠சங்கீதம் 62:8; 1 யோவான் 5:14, 15.

● மனிதர்கள்மீது தமக்கு ஆழ்ந்த அன்பும் அக்கறையும் இருக்கிறது என திரும்பத் திரும்ப உறுதி அளிக்கிறார்.​—⁠1 யோவான் 4:9, 10, 19.