“பிரமாதமாக இருக்கிறது”
“பிரமாதமாக இருக்கிறது”
பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? என்ற புத்தகத்தைப் பற்றி அமெரிக்காவிலுள்ள, ஜார்ஜியாவில் வசிக்கும் ஒரு தம்பதியர் இப்படித்தான் எழுதினார்கள். வண்ணப் படங்களுடன் விளக்கப்பட்டுள்ள, 224-பக்கங்களைக் கொண்ட இப்புத்தகம் 2005-இல் வெளியிடப்பட்டது. அந்தத் தம்பதியினர் இவ்வாறு விளக்கமாகச் சொன்னார்கள்: “கிட்டத்தட்ட எல்லாருமே வாசிக்குமளவுக்கு எளிமையாக இருக்கிறது. அதிகமாகப் படித்தவர்களின் ஆன்மீகத் தேவையையும் பூர்த்தி செய்கிறது; அந்தளவு ஆழமான விஷயங்கள் இதில் உள்ளன.”
இப்புத்தகத்தின் தலைப்பே ஆர்வத்தைத் தூண்டுவதாக இருக்கிறது; இதற்கு உதாரணமாக, அமெரிக்காவிலுள்ள நியூ ஜெர்ஸியிலுள்ள ஒரு தம்பதியரின் அனுபவத்தைச் சொல்லலாம். ப்ளோரிடாவில் யெகோவாவின் சாட்சிகளுடைய ஒரு மாநாட்டில் கலந்து கொண்ட அந்தத் தம்பதியர் அங்கு அந்தப் புத்தகத்தைப் பெற்றுக்கொண்டு, விடுமுறையைக் கழிக்க பஹாமாஸுக்குச் சென்றார்கள். ஒரு சுங்கவரி அதிகாரி அவர்களுடைய பைகளைச் சோதனையிட்டபோது அதிலிருந்த புத்தகத்தைப் பார்த்தார்; அதன் தலைப்பை வாசித்துவிட்டு, “ரொம்ப நாளாகவே இந்தக் கேள்விக்குப் பதிலைத் தெரிந்துகொள்ள ஆசைப்பட்டேன்” என்று சொன்னார். எனவே, அந்தத் தம்பதியர் அவர்களிடம் இருந்த கூடுதல் பிரதியை அவருக்குக் கொடுத்தபோது அந்தப் பெண் அதிகாரி மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.
அடுத்த நாளில் அதே தம்பதியர் கடற்கரையில் அமர்ந்து அந்தப் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்ததை சுற்றுலாப் பயணிகளுக்குப் பொருள்களை விற்றுக்கொண்டிருந்த ஒரு பெண் கவனித்தாள். பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? என்ற இதே கேள்விக்கான பதிலைத் தெரிந்துகொள்ள நேற்றுதான் கடவுளிடம் ஜெபம் செய்ததாக அந்தப் பெண் சொன்னாள். அந்தப் புத்தகம் எங்கே கிடைக்கும் என்று அவர்களிடம் கேட்டாள். அந்தத் தம்பதியரிடம் கூடுதலாக இன்னும் ஒரு பிரதி மட்டுமே இருந்தது. அதை அவளுக்குக் கொடுத்தபோது அவளுக்கு ஒரே சந்தோஷம்!
பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? என்ற புத்தகம் இப்பொழுது 145-க்கும் அதிகமான மொழிகளில் கிடைக்கிறது, நான்கு கோடிக்கும் அதிகமான பிரதிகள் ஏற்கெனவே அச்சடிக்கப்பட்டுள்ளன. இந்தப் புத்தகத்தைப் பற்றி கூடுதல் தகவல் பெற விரும்பினால் இங்கே உள்ள கூப்பனைப் பூர்த்தி செய்து 5-ம் பக்கத்திலுள்ள பொருத்தமான விலாசத்திற்கு அனுப்பவும்.
□ பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? என்ற புத்தகத்தைப் பற்றி எந்த நிபந்தனையுமின்றி கூடுதலான தகவல் பெற விரும்புகிறேன்.
□ இலவசமாக பைபிளை கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன். தயவுசெய்து என்னைத் தொடர்புகொள்ளவும்.