Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அருமையான அன்பளிப்பு

அருமையான அன்பளிப்பு

அருமையான அன்பளிப்பு

அவசியமான பொருளை ஒருவருக்கு அன்பளிப்பாகக் கொடுக்கும்போது அதை அவர் பொக்கிஷமாய் போற்றுகிறார்; இதனால் இருவருக்குமே மகிழ்ச்சி. சில மாதங்களுக்கு முன்பு, மெக்ஸிகோவைச் சேர்ந்த உயர் அரசதிகாரி ஒருவர், அந்நாட்டிலுள்ள யெகோவாவின் சாட்சிகளின் கிளை அலுவலகத்திற்கு கடிதம் எழுதியிருந்தார்; பெரிய போதகரிடம் கற்றுக்கொள் புத்தகத்தை அனுப்பியதற்காக அதில் நன்றி தெரிவித்திருந்தார். அவருடைய கடிதத்திலிருந்து சில பகுதிகள் இதோ:

“இந்தப் புத்தகம் விலையேறப்பெற்ற தகவல்களின் களஞ்சியம். அதிலுள்ள குறிப்புகள் ஒரு பழமையான புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டிருந்தாலும் அவை நம் நாளுக்கு ஏற்றதாகவும் நடைமுறையானதாகவும் உள்ளன என்பதை நான் புரிந்துகொண்டேன்.

“பிள்ளைகள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைப் பகுத்தறியவும் திறமைசாலிகளாக ஆகவும் உயர்ந்த ஒழுக்கநெறிகளே உதவும்; மரியாதையும் நேர்மையும் இல்லாத இந்த உலகில் மரியாதையுள்ள, நேர்மையுள்ள நபர்களாக வாழவும் இவை அவர்களுக்கு உதவும். அப்படிப்பட்ட ஒழுக்கநெறிகளை பிள்ளைகளின் மனதில் பதியவைக்க வேண்டிய பொறுப்பு பெற்றோருக்கு உள்ளது என்பதை உறுதியாக நம்புகிறேன். அதிலும் முக்கியமாக, அன்பும் கரிசனையுமுள்ள ஒரு உன்னதமானக் கடவுள் இருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள நாம் அவர்களுக்கு உதவ வேண்டும். எனக்கு பிரயோஜனமான புத்தகத்தை நீங்கள் அனுப்பியிருக்கிறீர்கள் என்பதில் சந்தேகமே இல்லை. இது, என்னுடைய வேலையில் மட்டுமல்லாமல் குடும்பத்திலும் அதிக உதவியாக இருக்கும். அதாவது, சின்னஞ்சிறு பிள்ளைகள் பெரியவர்களாகும்போது பிறர்மீது அன்புகாட்டுகிறவர்களாக ஆவதற்கு உதவும்படி பெற்றோரிடம் படைப்பாளர் ஒப்படைத்துள்ள பொறுப்பை சரிவர செய்வதற்கு உதவும்.”

பெரிய போதகரிடம் கற்றுக்கொள் என்ற புத்தகத்தில் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையும் போதனைகளும் புகட்டுகிற பாடங்கள் விளக்கப்பட்டுள்ளன. இவற்றின் அருமையை இந்த அரசதிகாரி புரிந்துகொண்டார். இந்தப் பத்திரிகையின் அளவில் உள்ள, 256 பக்கங்களைக் கொண்ட இப்புத்தகத்தில் அழகிய படங்கள் நிறைந்துள்ளன. இந்தப் புத்தகத்தைப் பற்றி கூடுதல் தகவல் பெற விரும்பினால் இங்கே உள்ள கூப்பனைப் பூர்த்தி செய்து 5-⁠ம் பக்கத்திலுள்ள பொருத்தமான விலாசத்திற்கு அனுப்பவும்.

□ பெரிய போதகரிடம் கற்றுக்கொள் புத்தகத்தைப் பற்றி எந்த நிபந்தனையுமின்றி கூடுதலான தகவல் பெற விரும்புகிறேன்.

□ இலவசமாக பைபிளை கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன். தயவுசெய்து என்னைத் தொடர்புகொள்ளவும்.