Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உடலுறவுக்கு விலகியிருக்கும் உறுதிமொழி —என்ன சொல்லலாம்?

உடலுறவுக்கு விலகியிருக்கும் உறுதிமொழி —என்ன சொல்லலாம்?

உடலுறவுக்கு விலகியிருக்கும் உறுதிமொழி—⁠என்ன சொல்லலாம்?

சமீப ஆண்டுகளில் இளைஞர்கள் மத்தியில் கற்பைக் காக்கும் உறுதிமொழிகள் பிரபலமாகி வருகின்றன; “திருமணம் வரை உடலுறவு கிடையாது” என்பதைப் போன்ற உறுதிமொழிகளை அவர்கள் ஏற்கிறார்கள். இந்த உறுதிமொழிகள் பாராட்டத்தக்க இலட்சியங்களாகவும் பைபிள் கட்டளைகளுக்கு இசைவாகவும் உள்ளன. (1 கொரிந்தியர் 6:18; எபேசியர் 5:5) என்றாலும், இப்படி உறுதிமொழிகள் எடுப்பதால் பிரயோஜனம் உண்டா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. ஒரு சுற்றாய்வின்படி, சுமார் 60 சதவிகித பருவ வயதினர் தங்களுடைய உறுதிமொழியை ஒரு வருடத்திற்குள்ளாகவே காற்றில் பறக்கவிட்டனர்.

கூடுதலாக, பருவ வயதினர் “உடலுறவுக்கு விலகியிருத்தல்,” “கற்பு” என்பவற்றிற்கு அளிக்கும் விளக்கம் கவலை அளிக்கிறது. பையன்கள் மேல் பைத்தியம்! என்ற ஆங்கில புத்தகத்தில் ஷார்லீன் சி. ஜானெட்டீயும் மார்கரெட் சாகாரேஸவும் இவ்வாறு எழுதினார்கள்: “இளசுகள் மற்ற பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும்கூட தாங்கள் கற்புள்ளவர்களென ‘உறுதியாக’ நினைப்பதால்தான் வாய்வழிப் புணர்ச்சி, ஆசனவழிப் புணர்ச்சியும்கூட அதிகரித்திருக்கின்றன என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். உடலுறவு தவிர மற்ற எந்தப் பாலியல் நடவடிக்கைகளும் பாலுறவே கிடையாதென்று அவர்கள் தீர்மானமாய் சொல்கின்றனர்.”

இதுபோன்ற கருத்து பரவலாகக் காணப்படுவது தெளிவாக இருக்கிறது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட பருவ வயதினரைப் பேட்டி கண்ட பிறகு, “நூற்றுக்கு ஒருவரோ இருவரோ வாய்வழிப் புணர்ச்சி என்பது பாலுறவு என்று கருதுவதுபோல் தெரிகிறது. . . . உங்களுடைய பருவ வயது பிள்ளைகளும், இன்னும் பருவ வயதில் காலடியெடுத்து வைக்காத பிள்ளைகளும்கூட இவ்வாறே நினைத்துக்கொண்டிருக்கலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா?” என்று ஓர் ஆசிரியர் கூறினார்.

வாய்வழிப் புணர்ச்சி, ஆசனவழிப் புணர்ச்சி என்ற பெயர்களே காட்டுகிறபடி, அவை புணர்ச்சியை, அதாவது பாலுறவைக் குறிக்கிறதென பைபிள் தராதரங்களைக் கடைப்பிடிப்பவர்கள் அறிந்திருக்கின்றனர். ‘வேசிமார்க்கத்துக்கு விலகியிருங்கள்’ (‘பாலியல் குற்றத்தில் இருந்து விலகி இருக்க வேண்டும்,’ ஈஸி டு ரீட் வர்ஷன்) என்ற பைபிள் கட்டளை, எல்லா விதமான தவறான பாலியல் பழக்கங்களையும் உட்படுத்துகிறது.​—1 தெசலோனிக்கேயர் 4:⁠3.