எப்படி பதில் அளிப்பீர்கள்?
எப்படி பதில் அளிப்பீர்கள்?
இதை சொன்னது யார்?
இங்குள்ள வாக்கியங்களைச் சொன்னவர்கள் யார் என்று குறித்துக் காட்டுங்கள்.
தாவீது
இயேசு
சாலொமோன்
பவுல்
1. “கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்.”
2.“மனுஷர் உங்களுக்கு எப்படிச் செய்ய வேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அப்படியே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்.”
3.“அன்பு ஒருக்காலும் ஒழியாது.”
4.“கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன்.”
◼ கலந்தாலோசிக்க: இங்கு குறிப்பிடப்பட்டுள்ள பைபிள் கதாபாத்திரங்களைப் பற்றி உங்களுக்குத் தெரிந்த வேறு ஏதேனும் ஒரு தகவலைத் தரமுடியுமா?
சரித்திரத்தில் எப்போது சம்பவித்தது?
பைபிளின் இந்தப் புத்தகங்களை எழுதினவர்களின் பெயரிலிருந்து ஒரு கோடு கிழித்து அவர் அந்தப் புத்தகத்தை எழுதி முடித்த சராசரியான வருடத்தைக் குறித்துக் காட்டுங்கள்.
பொ.ச.மு. 1450 பொ.ச.மு. 1090 பொ.ச.மு. 1078 பொ.ச. 36 பொ.ச. 56
5. யோசுவா
6. ரூத்
7. ரோமர்
நான் யார்?
8. சிசெராவை ஒரு பெண் கொலை செய்வாள் என்று தீர்க்கதரிசனம் கூறினேன்.
நான் யார்?
9. நானும் என் கணவரும் எங்கள் உயிரைப் பணயம்வைத்து பவுலைக் காப்பாற்றினோம்.
இந்த இதழிலிருந்து
இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள், குறிப்பிடப்படாத பைபிள் வசனத்தை அல்லது வசனங்களை எழுதுங்கள்.
பக்கம் 6 இயேசுவின் சீஷராக இருப்பதற்கு ஒருவர் என்ன செய்யவேண்டும்? (லூக்கா 9:____)
பக்கங்கள் 7-8 தான் போன பிறகு கிறிஸ்தவ சபைக்கு என்ன நேரிடும் என்று அப்போஸ்தலன் பவுல் கூறினார்? (அப்போஸ்தலர் 20:____)
பக்கம் 13 சாத்தான் பலருடைய மனதை என்ன செய்திருக்கிறான்? (2 கொரிந்தியர் 4:____)
பக்கம் 28 ஓரினச்சேர்க்கை பற்றி பைபிள் என்ன சொல்கிறது? (ரோமர் 1:____)
பிள்ளைகளுக்காக: இந்தப் படங்கள் எங்கே இருக்கின்றன?
இங்குள்ள படங்கள் இந்தப் பத்திரிகையில் எங்கே இருக்கின்றன? ஒவ்வொரு படத்திலும் என்ன நடக்கிறது என்று உங்கள் சொந்த வார்த்தையில் சொல்லுங்கள்.
(பக்கம் 20-ல் பதில்கள் கொடுக்கப்பட்டுள்ளன)
பக்கம் 31-ல் உள்ள கேள்விகளுக்கான பதில்கள்
1. சாலொமோன்.—நீதிமொழிகள் 9:10.
2. இயேசு.—லூக்கா 6:31.
3. பவுல்.—1 கொரிந்தியர் 13:8.
4. தாவீது.—சங்கீதம் 23:1.
5. யோசுவா, பொ.ச.மு. 1450.
6. சாமுவேல், பொ.ச.மு. 1090.
7. பவுல், பொ.ச. 56.
8. தெபொராள்.—நியாயாதிபதிகள் 4:4, 9.
9. பிரிஸ்கில்லா.—ரோமர் 16:3, 4.