Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

முறியவிருந்த மணவாழ்வு மீண்டது

முறியவிருந்த மணவாழ்வு மீண்டது

முறியவிருந்த மணவாழ்வு மீண்டது

தென் ஆப்பிரிக்காவில் ஒரு பெண் முதலாளி தன்னுடைய பணியாளராய் இருந்த பெல்லா என்ற பெண்ணுக்கு மண வாழ்க்கையில் பிரச்சினைகள் இருப்பதைக் கவனித்தார். எனவே, யெகோவாவின் சாட்சியாக இருந்த டான்டி என்ற பெண்ணை அந்தப் பெண்ணிடம் பேசச் சொன்னார். பெல்லா தன் கணவரை விவாகரத்து செய்ய முடிவு செய்திருப்பதை டான்டி தெரிந்துகொண்டார்.

குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம் என்ற புத்தகத்தின் இரண்டு பிரதிகளை பெல்லாவிடம் கொடுத்து, ஒன்றை அவளுடைய கணவருக்கும் கொடுக்கும்படி டான்டி ஊக்குவித்தார். அவர் சொன்னபடியே பெல்லா செய்தாள். அவளுடைய கணவர் அந்தப் புத்தகத்தை வாசிப்பதையும் குடும்பத்தில் சமாதானம் வந்திருப்பதையும்பற்றி ஒரு வாரத்திற்குப்பின் டான்டி தெரிந்துகொண்டார். கடவுளிடம் செய்த ஜெபத்தின் மூலமாகவும் குடும்ப மகிழ்ச்சி புத்தகத்தின் மூலமாகவும் அவர்களுடைய மணவாழ்க்கை காப்பாற்றப்பட்டது என மூன்று மாதங்களுக்குப்பின் டான்டியிடம் பெல்லா கூறினாள். அத்துடன் விஷயம் முடிந்துவிடவில்லை.

இதைப்பற்றி பெல்லாவின் முதலாளி கேள்விப்பட்டபோது, அந்தப் புத்தகத்தை எல்லா பணியாளர்களும் பெற்றுக்கொள்ளும்படி சிபாரிசு செய்தார். 192 பக்கங்களைக் கொண்ட குடும்ப மகிழ்ச்சி புத்தகத்தின் 100-⁠க்கும் அதிகமான பிரதிகள் பணியாளர்களுக்குக் கொடுக்கப்பட்டன. அந்தப் புத்தகத்தின் அறிவுரையூட்டும் அதிகாரங்களில் சில: “திருமணம் முறிவுறும் நிலையில் இருக்கிறதென்றால்,” “உங்கள் குடும்பத்தை தீங்கு விளைவிக்கும் செல்வாக்குகளிலிருந்து பாதுகாத்திடுங்கள்,” “உங்கள் குடும்பத்தில் சமாதானத்தைக் காத்துக்கொள்ளுங்கள்.”

குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம் என்ற புத்தகத்தைப் பற்றி கூடுதல் தகவலைப் பெற விரும்பினால் இங்கே உள்ள கூப்பனைப் பூர்த்தி செய்து 5-⁠ம் பக்கத்திலுள்ள பொருத்தமான விலாசத்திற்கு அனுப்பவும்.

□ குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம் என்ற புத்தகத்தைப் பற்றி எந்த நிபந்தனையுமின்றி கூடுதலான தகவல் பெற விரும்புகிறேன்.

□ இலவசமாக பைபிளை கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன். தயவுசெய்து என்னைத் தொடர்புகொள்ளவும்.