Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

எமது வாசகரிடமிருந்து

எமது வாசகரிடமிருந்து

எமது வாசகரிடமிருந்து

இளைஞர் கேட்கின்றனர் . . . நான் எதற்காக வாசிக்க வேண்டும்? (மே 2006) எனக்கு 15 வயது; இந்தக் கட்டுரை எனக்கு மிகவும் உதவியாக இருந்தது. இந்தப் பத்திரிகையை எங்கள் பள்ளிக்கூடத்திற்கு எடுத்துச் சென்றேன், அது என்னுடைய ஆசிரியர் கண்ணில் பட்டது. வகுப்பு எடுக்கையில் வாசிக்கும் பழக்கத்தைப்பற்றி அவர் பேசினார், வகுப்பிலிருந்த மாணவர்களுக்கு இந்த விழித்தெழு!-வைக் காட்டினார். தான் இந்தக் கட்டுரையை அனுபவித்துப் படித்ததாகக் குறிப்பிட்டார், இதை வாசித்துப் பார்க்கும்படி வகுப்பிலிருந்த அனைவருக்கும் சிபாரிசு செய்தார்.

டி.எ.சி., பிரேசில்

கடந்த காலத்தில், எனக்குப் பிடித்த கட்டுரைகளைத்தான் வழக்கமாகப் படித்து வந்தேன். இப்பொழுதோ, எடுத்த எடுப்பில் அவை சுவாரஸ்யமாய் இருப்பதுபோல் தோன்றாவிட்டாலும்கூட எல்லாக் கட்டுரைகளையும் எப்படியாவது படித்துவிட முயற்சி செய்கிறேன். பெரும்பாலும் அந்தக் கட்டுரைகள் எனக்குப் பிடித்தவையாகவே எப்பொழுதும் இருப்பதை நான் கண்டிருக்கிறேன். மிகவும் நன்றி.

இ.ஜி., ஐக்கிய மாகாணங்கள்

நான் இருந்ததைப் போலவே இன்று நிறைய இளைஞர்கள் இருப்பதை அறிந்து சந்தோஷப்பட்டேன். 14 வயதில் முழுக்காட்டுதல் பெற்றேன், இப்போது எனக்கு 40 வயது. முழுக்காட்டுதல் பெறுவதற்குச் சற்று முன்னாலிருந்து நானும்கூட காவற்கோபுரத்திலிருந்தோ விழித்தெழு!-விலிருந்தோ ஒவ்வொரு நாளும் ஏராளமான பக்கங்களை வாசிப்பதைப் பழக்கமாக்கினேன். தவறாமல் படிக்கும் இந்தப் பழக்கத்தின் காரணமாகவே ஒரு கட்டுரையும் விட்டுப்போகாமல் படிக்கவும் என்னுடைய ஆவிக்குரிய தன்மையைப் பாதுகாக்கவும் முடிந்திருக்கிறது என்று உணருகிறேன்.

எஸ்.ஓ., ஜப்பான்

மைக்கேல் சர்வீட்டஸ் தன்னந்தனியாக சத்தியத்தைத் தேடி . . . (மே 2006) புதுமையான, அருமையான, மதிப்புள்ள இந்தக் கட்டுரைக்கு நன்றி. தொடர்ந்து பிரசங்கிக்கவும் யெகோவாவின் நாமத்தை ஆதரித்துப் பேசவும் இது என்னை மிகவும் உற்சாகப்படுத்தியது.

எம்.ஆர்., பிரேசில்

சர்வீட்டஸ், மருந்து உலகில் தலைசிறந்த நபர் என்பது பெரும்பாலோருக்குத் தெரியும். என்றாலும், சத்தியத்திற்கான இந்த அறிஞரின் தணியா தாகம், விடாமுயற்சி போன்ற மனதைத் தொடும் குணாம்சங்களை இந்தக் கட்டுரை வெளிப்படுத்தியது. இந்தக் கட்டுரையைப் பிரசுரித்ததற்காக உங்களுக்கு நன்றி.

எம்.ஜே., ஸ்பெயின்

எச்சரிக்கைக்குக் கீழ்ப்படிந்தவர்கள் காப்பாற்றப்பட்டார்கள் (ஜூன் 2006) யெகோவாவின் அன்பான அமைப்பின் பாகமாக இருப்பது மிகவும் மகிழ்ச்சிக்குரிய விஷயம். கேட்ரீனா சூறாவளியால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட என்னுடைய வீட்டைத் திரும்பக் கட்டுவதற்கு உதவிய எல்லா சகோதர சகோதரிகளுக்கும் நெஞ்சம் நெகிழ்ந்து நன்றி சொல்கிறேன். இப்பொழுது இந்த வீடு அவர்களுடைய அன்பால் நிறைந்திருக்கிறது.

ஐ.எஃப்., ஐக்கிய மாகாணங்கள்

பட்டு​—⁠“துணிகளின் ராணி” (ஜூன் 2006) நான் சிறுபிள்ளையாக இருந்ததிலிருந்தே பட்டு எவ்வாறு தயாரிக்கப்படுகிறது என எப்பொழுதும் யோசிப்பேன். இந்தக் கட்டுரையை விழித்தெழு!-வில் பார்த்தபோது நான் எவ்வளவாய் சந்தோஷப்பட்டேன்! உண்மையில் அதை அனுபவித்துப் படித்தேன், யெகோவாவின் படைப்புகளுக்கான என்னுடைய போற்றுதலை அது நிச்சயமாகவே அதிகரித்திருக்கிறது.

எ.சி.எல்., பிரேசில்

கொடிய கருங்கட்டிகளின் முக்கியமான எச்சரிக்கை அறிகுறிகள் (ஜூன் 8, 2005 [ஆங்கிலம்]) இந்தக் கட்டுரையில் வண்ணப் புகைப்படங்களும் இருந்ததால் என்னை நானே பரிசோதிக்க முடிந்தது; சந்தேகத்திற்குரிய கருங்கட்டிகளைக் கூர்ந்து ஆராய்ந்து அவை கொடிய கருங்கட்டிகள் எனக் கண்டறியவும் முடிந்தது. மகிழ்ச்சிகரமாக, அந்தக் கருங்கட்டிகள் அவற்றின் ஆரம்ப நிலைகளிலேயே அறுவை சிகிச்சைமூலம் அகற்றப்பட்டுவிட்டன. இதுபோன்ற நடைமுறையான கட்டுரைக்காக யெகோவாவுக்கு என் இதயங்கனிந்த நன்றிகள்.

கே.என்., ஜப்பான்