Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

“கிறிஸ்துவைப் பின்பற்றுங்கள்!”

“கிறிஸ்துவைப் பின்பற்றுங்கள்!”

“கிறிஸ்துவைப் பின்பற்றுங்கள்!”

யெகோவாவின் சாட்சிகளுடைய மாவட்ட மாநாடு

அமெரிக்காவில் மே மாதம் துவங்கிய இந்த மூன்றுநாள் மாநாடுகள் உலகெங்குமுள்ள பல நகரங்களில் 2008 வரை நடைபெற உள்ளன. பெரும்பாலான இடங்களில் இம்மாநாட்டு நிகழ்ச்சிகள் வெள்ளிக்கிழமை காலை 9:20 மணிக்கு இசையுடன் ஆரம்பமாகும். மாநாட்டின் ஒவ்வொரு நாள் நிகழ்ச்சியும் இயேசுவின் மீது கவனத்தை ஒருமுகப்படுத்தும்.

வெள்ளிக்கிழமை நிகழ்ச்சியின் முக்கியத் தலைப்பு, “நம் விசுவாசத்தை முழுமையாக்கும் நம் தலைவராகிய இயேசுவைப் பின்பற்றுங்கள்.” (எபிரெயர் 12:2, NW) “‘கிறிஸ்துவை’ ஏன் பின்பற்ற வேண்டும்?” என்ற ஆரம்பப் பேச்சுடன் அந்த நாளின் நிகழ்ச்சி துவங்கும். “பெரிய மோசேயாக, தாவீதாக, சாலொமோனாக இயேசுவைப் போற்றுதல்” என்ற தலைப்பில் மூன்று பாக தொடர்பேச்சும் இடம்பெறும். “யெகோவாவின் சித்தத்தை நிறைவேற்றுவதில் இயேசுவின் விசேஷித்த பங்கு” என்ற முக்கியப் பேச்சுடன் காலை நிகழ்ச்சி நிறைவடையும்.

வெள்ளிக்கிழமை பிற்பகல் நிகழ்ச்சியில், “‘மேசியாவைக் கண்டோம்’!” என்ற தலைப்பில் கொடுக்கப்படும் முதல் பேச்சுக்குப் பிறகு, “‘அவருக்குள் அடங்கியிருக்கிற’ பொக்கிஷங்களைக் கண்டடைதல்” என்ற தலைப்பில் அடுத்த பேச்சு கொடுக்கப்படும். “கிறிஸ்துவின் சிந்தையை வளர்த்துக்கொள்ளுங்கள்” என்ற தலைப்பில் ஐந்து பாக தொடர்பேச்சு ஒரு மணிநேரத்திற்குக் கொடுக்கப்படும். “அவர் அன்பாக ‘அவர்களை ஏற்றுக்கொண்டார்,’” “அவர் ‘மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தார்,’” “அவர் ‘முடிவுபரியந்தமும் அவர்களிடத்தில் அன்புவைத்தார்’” போன்றவை அவற்றில் சில. “ஆட்டுக்குட்டியானவர் எங்கே போனாலும் அவரைப் பின்பற்றுகிறார்கள்” என்ற பேச்சுடன் அன்றைய தின நிகழ்ச்சி முற்றுப்பெறும்.

சனிக்கிழமை நிகழ்ச்சியின் முக்கியத் தலைப்பு, “என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது . . . அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது.” (யோவான் 10:27) நம்முடைய ஊழியத்தை இன்னும் சிறப்பாகச் செய்வதற்கு, “ஊழியத்தில் இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றுங்கள்” என்ற தலைப்பில் ஒரு மணிநேர தொடர்பேச்சு கொடுக்கப்படும். அதோடு, “அவர் ‘நீதியை விரும்பி, அக்கிரமத்தை வெறுத்தார்’​—⁠நீங்கள்?,” “இயேசுவைப் போலவே ‘பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள்’” ஆகிய தலைப்புகளிலும் பேச்சுகள் இடம்பெறும். அடுத்து, முழுக்காட்டுதல் பேச்சுடன் காலை நிகழ்ச்சி நிறைவுபெறும். இந்தப் பேச்சுக்குப் பிறகு, முழுக்காட்டுதல் பெற தகுதி உடையோர் முழுக்காட்டப்படுவர்.

சனிக்கிழமை பிற்பகல் நிகழ்ச்சி, “. . . பின்பற்றாதீர்கள்” என்ற தலைப்புடைய தொடர்பேச்சுடன் ஆரம்பமாகும். அதன் ஆறு பாக பேச்சுகள் பின்வருமாறு: “திரளான பேர்களைப் பின்பற்றாதீர்கள்,” “உங்கள் இருதயத்தையும் கண்களையும் பின்பற்றாதீர்கள்,” “வீணானவைகளைப் பின்பற்றாதீர்கள்,” “கள்ளப்போதகர்களைப் பின்பற்றாதீர்கள்,” “கட்டுக்கதைகளைப் பின்பற்றாதீர்கள்,” “சாத்தானைப் பின்பற்றாதீர்கள்.” அடுத்ததாக, “‘யெகோவாவால் போதிக்கப்படுவதன்’ மகிமை,” “மந்தைக்குத் திரும்பிவர அவர்களுக்கு உதவுங்கள்” ஆகிய தலைப்புகளில் பேச்சுகள் இடம்பெறும். “என்னைப் பின்பற்றி வா” என்ற தலைப்பில் மாநாட்டின் சிறப்புப் பேச்சுடன் அந்த நாளின் நிகழ்ச்சி நிறைவுபெறும்.

ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சியின் தலைப்பு, “என்னைப் பின்பற்றி வா.” (யோவான் 21:19) “கிறிஸ்துவைப் பின்பற்றுவதிலிருந்து பின்வாங்காதீர்கள்” என்ற பேச்சுக்குப் பிறகு “மலைப்பிரசங்கத்திலிருந்து மதிப்புமிக்க மணிக்கற்கள்” என்ற தலைப்பில் ஆறு பாக தொடர்பேச்சு கொடுக்கப்படும். இந்தப் பேச்சு இயேசு கூறிய விஷயங்களின் மீது கவனத்தை ஒருமுகப்படுத்தும். அவற்றில் சில: “ஆன்மீகத் தேவையைக் குறித்து உணர்வுடையோர் சந்தோஷமுள்ளவர்கள்,” ‘முதலில் உன் சகோதரனோடே ஒப்புரவாகு,’ “கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்.” அடுத்து, “கிறிஸ்துவை உண்மையாய் பின்பற்றுபவர்கள் யார்?” என்ற பொதுப் பேச்சுடன் காலை நிகழ்ச்சி முடிவுக்கு வரும். பிற்பகல் நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக ஒரு நாடகம் அரங்கேறும்; அது, கடவுளுடைய தீர்க்கதரிசியான எலிசாவின் பேராசைப் பிடித்த ஊழியனாகிய கேயாசியைப் பற்றிய பைபிள் பதிவின் அடிப்படையில் உள்ளது. அதில், கதாபாத்திரங்கள் பூர்வ கால உடையணிந்து நடிப்பார்கள். “வெல்ல முடியாத நம் தலைவரான கிறிஸ்துவைத் தொடர்ந்து பின்பற்றுங்கள்!” என்ற பேச்சுடன் மாநாடு முடிவடையும்.

இந்த மாவட்ட மாநாட்டில் கலந்துகொள்ள இப்போதே திட்டமிடுங்கள். நீங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகே மாநாடு எங்கே நடைபெறவிருக்கிறது என்பதை அறிந்துகொள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய ராஜ்ய மன்றத்தைத் தொடர்புகொள்ளுங்கள் அல்லது இப்பத்திரிகையைப் பிரசுரிப்போருக்குக் கேட்டெழுதுங்கள். இதன் கூட்டுப் பத்திரிகையான காவற்கோபுரத்தின் மார்ச் 1 தேதியிட்ட இதழில், இந்தியாவில் மாநாடுகள் நடைபெறும் இடங்களின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது.