“இதுதான் எனக்குத் தேவைப்பட்டது!”
“இதுதான் எனக்குத் தேவைப்பட்டது!”
பெரிய போதகரிடம் கற்றுக்கொள் என்ற புத்தகத்தைப் பெற்றதும் இத்தாலியைச் சேர்ந்த ஒரு தாயார் உணர்ச்சிபொங்க கூறிய வார்த்தைகளே அவை. “சந்தோஷத்தில் என் கண்ணீரை கட்டுப்படுத்தவே முடியவில்லை” என்றார் அவர். சிறு பிள்ளையாயிருக்கும் தன் மகளைக் குறித்து அவர் சொன்னதாவது: “அவளால் வாசிக்க முடியாது, ஆனால், அதிலுள்ள படங்களைப் பார்த்து முக்கியமான குறிப்புகளை நினைவில் வைத்துக்கொள்கிறாள். அந்தப் புத்தகம், வாசிப்பவருடன் உரையாடும் நடையில் எழுதப்பட்டிருப்பதால் அவள் அதை கூர்ந்து கவனிக்கிறாள். இடையிடையே அவளும் உரையாடலில் கலந்துகொள்வாள். இதைவிட சிறந்த வேறொரு பரிசை பெற்றிருக்கவே முடியாது.”
இத்தாலியைச் சேர்ந்த ஒரு தகப்பன் என்ன சொல்கிறாரென்று கவனிப்போம். பாலியல் சம்பந்தப்பட்ட விஷயங்களைத் தங்கள் இளம் மகனுக்கு எப்படி விளக்குவதென்று அவரும் அவருடைய மனைவியும் யோசித்துக் கொண்டிருந்ததாக அவர் சொன்னார். “இந்தப் புதிய பிரசுரம் வெளியானதும், கடவுள் எங்கள் கவலைகளைப் புரிந்துகொண்டதாக உணர்ந்தோம். இந்தப் புத்தகத்தை நாங்கள் அலசி ஆராய்ந்தபோது அது எந்தளவுக்கு எங்கள் மகனுக்கு பிரயோஜனமாக இருக்கும் என்பதைப்பற்றி பேசிக்கொண்டோம். எங்கள் மகன் அதிலுள்ள விஷயங்களைக் கவனமாகச் சிந்தித்துப் பார்த்து, அவற்றைப் புரிந்துகொள்வதற்கு அது மிகவும் உதவியாக இருக்கும் என சொல்லிக்கொண்டோம்” என்று அவர்கள் கூறினார்கள்.
சிறுமியாக இருந்தபோது பாலியல் ரீதியில் தவறாக நடத்தப்பட்ட ஓர் இளம் ஜப்பானிய பெண் இந்தப் புத்தகத்திற்காக நன்றி தெரிவித்து இவ்வாறு எழுதினாள்: “தாரை தாரையாக வழிந்தோடிய கண்ணீருடன், நான் யெகோவாவுக்கு நன்றி தெரிவித்தேன். இந்தப் பொல்லாத யுகத்தில் பிள்ளைகள் எதிர்ப்படும் பிரச்சினைகளை வெளிப்படையாகவும் திருத்தமாகவும் இந்தப் புத்தகம் எடுத்துரைக்கிறது. அதிலுள்ள கேள்விகள் பிஞ்சு மனதிலுள்ளவற்றை தகுந்த விதத்தில் வெளிக்கொணர உதவி செய்கிறது. கெட்டவர்களிடமிருந்து பிள்ளைகளைப் பாதுகாப்பதற்கு 32-ம் அதிகாரம் எவ்வளவு அருமையான உதவியாக அமைகிறது! விஷயங்களை இதுபோல நேரடியாகச் சொல்லி, அறிவூட்டுகிற அற்புதமான உதவி 20 வருடங்களுக்கு முன் எனக்குக் கிடைத்திருந்தால் என் வாழ்க்கை எவ்வளவோ வித்தியாசமாக இருந்திருக்கும்.”
இந்தப் பத்திரிகையின் அளவில் உள்ள, 256 பக்கங்களைக் கொண்ட இப்புத்தகத்தில் அழகிய படங்கள் நிறைந்துள்ளன. இந்தப் புத்தகத்தைப் பற்றி கூடுதல் தகவல் பெற விரும்பினால் இங்கே உள்ள கூப்பனைப் பூர்த்தி செய்து 5-ஆம் பக்கத்திலுள்ள பொருத்தமான விலாசத்திற்கு அனுப்பவும்.
□ பெரிய போதகரிடம் கற்றுக்கொள் புத்தகத்தைப்பற்றி எந்த நிபந்தனையுமின்றி கூடுதலான தகவல் பெற விரும்புகிறேன்.
□ இலவசமாக பைபிளை கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன். தயவுசெய்து என்னைத் தொடர்புகொள்ளவும்.