Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

எமது வாசகரிடமிருந்து

எமது வாசகரிடமிருந்து

எமது வாசகரிடமிருந்து

ஒரு சிறுவனின் விசுவாசம் (ஆகஸ்ட் 2006) வெகு விரைவில் வரவிருக்கும் புதிய உலகத்தில், டஸ்டினும் இறந்துபோன கோடானுகோடி ஜனங்களும் இளமைத்துடிப்புடன் துள்ளிக் குதித்து ஓடிவருவதைப் பார்க்க ஆசை ஆசையாகக் காத்துக்கொண்டிருக்கிறேன்.

ஏ. ஏ., இலங்கை

டஸ்டினின் விசுவாசமும் அஞ்சா நெஞ்சமும் என் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டன. என்னுடைய வாழ்க்கையில் சத்தியத்திற்கு எந்தளவு முக்கியத்துவம் கொடுக்கிறேன் என்பதையும் எதற்கு முதலிடம் கொடுக்க வேண்டும் என்பதையும் அவனுடைய அனுபவத்திலிருந்து தெரிந்துகொண்டேன். யெகோவாவுடன் நல்லுறவை வளர்த்து வருவதும் ராஜ்யத்துடன் சம்பந்தப்பட்ட காரியங்களுக்கு முதலிடம் கொடுப்பதும்தான் மிக முக்கியம் என்பது இப்போது எனக்குத் தெரிகிறது.

எம்.சி.வி., பிரேசில்

சத்தியத்திடம் டஸ்டினுக்கிருந்த ஆர்வமும் மதித்துணர்வும் என் மனதை உருக வைத்தன. யெகோவாவின் மனதைக் குளிர்விக்கவும் மற்றவர்களுக்குச் சேவை செய்யவுமே டஸ்டின் ஆசைப்பட்டான் என்பதை அவன் செயல்களே சுட்டிக்காட்டின. டஸ்டினைப் போலவே நானும் என் ‘ஓட்டத்தை ஓடி முடிக்கவும் விசுவாசத்தை காத்துக்கொள்ளவும்’ விரும்புகிறேன்!

எம். என்., ஜப்பான்

எனக்கு ஏழு வயதாகிறது. இந்த அனுபவத்தைப் பிரசுரித்ததற்காக உங்களுக்கு ரொம்ப நன்றி. குணப்படுத்த முடியாத நோய் டஸ்டினுக்கு வந்தபோதிலும் யெகோவாவிடம் அவனுக்கு இருந்த அசைக்க முடியாத விசுவாசத்தைப் பார்த்து மலைத்துப்போனேன். அவனுடைய அனுபவம், கடவுளுக்கு இன்னும் அதிகத்தைச் செய்ய என்னை உற்சாகப்படுத்தியுள்ளது.

டி. டி., இத்தாலி

தாவரங்களில் வியத்தகு வடிவமைப்புகள் (செப்டம்பர் 2006) கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் என் கண்கள் இந்தக் கட்டுரையிலேயே பதிந்திருந்தன! இதிலிருந்து ஏகப்பட்ட விஷயங்களைக் கற்றுக்கொண்டேன்! இன்னும் நன்றாகப் புரிந்துகொள்ள நானே சொந்தமாக சில படங்களையும் வரைந்துபார்த்தேன். ஆனால், ஒரு குறிப்பைச் சொல்ல விரும்புகிறேன். அதாவது, 13/21 என்ற பின்னம், வட்டத்தின் கோல்டன் ஆங்கிளோடு ஒத்துப்போகவில்லை. அதற்கு மாறாக, அதில் மீதமிருக்கும் பாகமான 222.5 டிகிரிதான் அதோடு சரியாக ஒத்துப்போகிறது.

எல். சி. ஐக்கிய மாகாணங்கள்

“விழித்தெழு!” பதில்: கோல்டன் ஆங்கிளின் ஒரு சுற்று, கிட்டத்தட்ட 222.5 டிகிரி என்று சரியாகவே அநேக வாசகர்கள் சுட்டிக்காட்டினார்கள். ஆனால், இடமிருந்து வலமாய் கணக்கிட்டால் கிடைக்கிற 137.5 டிகிரியை நம்முடைய கட்டுரை கோல்டன் ஆங்கிள் என்று ஏன் குறிப்பிட்டது? ஏனென்றால், மாத்வேர்ல்டு என்ற வெப்சைட் இவ்வாறு சொன்னது: “கோல்டன் ஆங்கிள் என்பது, முழுக்கோணத்தையும் [360 டிகிரி] கோல்டன் விகிதாச்சாரத்தில் பிரிக்கிறது (ஆனால், 180 டிகிரிக்கும் குறைவாக இருப்பதற்காக அது எதிர்த்திசையில் கணக்கிடப்படுகிறது).” கணித வல்லுநர்களும் ஆராய்ச்சியாளர்களும் கோல்டன் ஆங்கிளை இப்படிக் கணக்கிடுவதற்கான காரணத்தை பிரிட்டிஷ் கணித வல்லுநர் டாக்டர் ரான் நாட் பின்வருமாறு விளக்கினார்: “நாம் சிறிய கோணத்தைப் ‘பார்க்கவே’ விரும்புகிறோம்.” அதனால்தான், கோல்டன் விகிதாச்சாரம் சுமார் 13/21-க்குச் சமமாக (பாதிக்கும் அதிகமாக) இருந்தாலும் கோல்டன் ஆங்கிள் 137.5 டிகிரியாக (பாதிக்கும் குறைவாக) இருப்பதாகவே குறிப்பிடப்படுகிறது.

“விசுவாசத்திற்காக சிறை வாசம்” (ஏப்ரல் 2006) நான் ஒரு யெகோவாவின் சாட்சி அல்ல. இருந்தாலும் அவர்கள்மீது அளவுகடந்த மரியாதை வைத்திருக்கிறேன். க்ரோஸ் ரோஷன், பூக்கன்வால்ட் ஆகிய சித்திரவதை முகாம்களில் இருந்தபோது அங்கே அநேக யெகோவாவின் சாட்சிகளைச் சந்தித்தேன். அவர்கள் மெச்சத்தகும் விதத்தில் நடந்துகொண்டார்கள். அவர்களுடைய மதத்திடம் அவர்களுக்கிருந்த பற்றுமாறா அன்பால் சக கைதிகளுடைய மதிப்பு மரியாதையையும் சம்பாதித்தார்கள். எஸ்எஸ் அதிகாரிகளே அவர்களைப் பார்த்து மலைத்துப்போனார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்! யெகோவாவின் சாட்சிகளுக்காக என் வீட்டுக் கதவு எப்போதும் திறந்திருக்கும்.

பி. வி., ஐக்கிய மாகாணங்கள்