Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கடவுள் தரும் போதனை நற்பலன்களைத் தருகிறது

கடவுள் தரும் போதனை நற்பலன்களைத் தருகிறது

கடவுள் தரும் போதனை நற்பலன்களைத் தருகிறது

பிஞ்சு வயதிலேயே பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்கிற பெற்றோர் தங்களுடைய உழைப்புக்கு நல்ல பலன் உண்டு என்பதை அனுபவத்தில் கண்டிருக்கிறார்கள். டோரியான், தென் அமெரிக்காவிலுள்ள பெரு நாட்டைச் சேர்ந்த சிறுவன்; அவன் நான்கு வயதிலேயே தேவராஜ்ய ஊழியப்பள்ளியில் முதன்முதலாக மாணாக்கர் பேச்சைக் கொடுத்தான்; இப்பள்ளி யெகோவாவின் சாட்சிகளுடைய ராஜ்ய மன்றத்தில் நடைபெறுகிறது. ஸ்கூலுக்குச் செல்லத் துவங்கிய சமயத்தில், டீச்சருக்கும் சக மாணவர்களுக்கும் தான் கிறிஸ்மஸ் கொண்டாடாததற்கான காரணத்தை பைபிளிலிருந்து விளக்கிக்காட்டும் அளவுக்கு அவன் திறமைசாலியாக இருந்தான்.

சமீபத்தில், அதாவது அவனுக்கு ஐந்து வயது இருக்கும்போது, ஸ்கூலில் உள்ளவர்கள் அனைவருக்கும் முன்பாக, சொல்லப்போனால் சுமார் 500 மாணவர்களுக்கு முன்பாக தந்தையர் தினத்தைப்பற்றி அவனுடைய கருத்தைத் தெரிவிக்கும்படி கேட்டார்கள். எபேசியர் 6:4-ன் அடிப்படையில், “தந்தையின் பொறுப்புகள்” என்ற பொருளில் பத்து நிமிட பேச்சை அவன் தயாரித்துக் கொடுத்தான். அப்பேச்சின் முடிவில் இவ்வாறு சொன்னான், “தந்தையர் தினத்தை வருடத்திற்கு ஒருமுறை கொண்டாடுவதற்குப் பதிலாக, தினமும் பிள்ளைகள் தங்களுடைய தந்தையையும் தாயையும் மதித்து அவர்களுக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும்.”

சிறியோரும் சரி, பெரியோரும் சரி, பேச்சு கொடுக்கும் திறமையை வளர்ப்பதற்கென்று உருவாக்கப்பட்ட இந்தத் தேவராஜ்ய ஊழியப்பள்ளி 1943-ல் யெகோவாவின் சாட்சிகளுடைய வாராந்தர கூட்டங்களின் ஒரு பாகமாக ஆனது. அது முதற்கொண்டு, பிள்ளைகளுக்குப் பெற்றோர் கொடுக்கும் போதனையோடுகூட அதிகப்படியான பைபிள் போதனையை இப்பள்ளி அளித்து வருகிறது.—நீதிமொழிகள் 22:6.

ஸீமான் என்ற சிறுவன் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்தவன். அவன் நவம்பர் 2005-ல், அதாவது, தன்னுடைய ஆறு வயதில் தேவராஜ்ய ஊழியப்பள்ளியில் முதன்முறையாக பைபிள் வாசிப்பு நியமிப்பைச் செய்தான். சுமார் ஒரு வருடத்திற்குப் பின், யெகோவாவின் சாட்சிகளுடைய ஒரு பெரிய மாநாட்டு நிகழ்ச்சியில் அவனிடம் பேட்டி காணப்பட்டது. கடவுளை வணங்குவதைக் குறித்தும் அவருக்குச் சேவை செய்வதைக் குறித்தும் என்ன மனப்பான்மையை அவன் வளர்த்திருக்கிறான்?

கிறிஸ்தவ கூட்டங்களுக்குச் செல்வதென்றால் ஸீமானுக்குக் கொள்ளை ஆசை; களைப்பாக இருந்தாலும் ஒரு கூட்டத்தைக்கூட தவறவிடாமல் அதில் அவன் கலந்துகொள்கிறான் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்! அதுமட்டுமல்ல, குடும்பத்தினரோடு சேர்ந்து ஊழியத்திலும் அவன் ஈடுபடுகிறான். ஒவ்வொரு மாதமும் 30 முதல் 50 காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளை எல்லா வயதினருக்கும் அவன் அளிக்கிறான். அதோடு, பைபிள் சத்தியத்தைப்பற்றி தன் அப்பாவிடம் அடிக்கடி பேசுகிறான், குடும்பமாக கூட்டங்களுக்குச் செல்லும்போது அவரையும் வரும்படி அழைக்கிறான்.

பிள்ளைகளை “கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும்” வளர்க்கிற பெற்றோர், தங்களுடைய பிள்ளைகள் அதைக் கேட்டு நடந்து, நீதியான பலனைத் தரும்போது அளவிலா ஆனந்தம் அடைகிறார்கள்.—எபேசியர் 6:4; யாக்கோபு 3:17, 18.

[பக்கம் 28-ன் படம்]

பள்ளியில் டோரியான்

[பக்கம் 28-ன் படம்]

ராஜ்ய மன்றத்தில் ஸீமான்