Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

‘நன்றியுள்ளவர்களாய் இருங்கள்’

‘நன்றியுள்ளவர்களாய் இருங்கள்’

‘நன்றியுள்ளவர்களாய் இருங்கள்’

நன்றி செலுத்தும்படி கடவுளை வழிபடுகிறவர்களுக்கு பைபிள் திரும்பத் திரும்ப ஊக்கம் அளிக்கிறது. “ஆண்டவருக்கு நன்றியுரைப்பது நன்று” என்று பொது மொழிபெயர்ப்பு பைபிளில் சங்கீதம் [திருப்பாடல்கள்] 92:1 சொல்கிறது. அதேபோல் அப்போஸ்தலன் பவுலும், ‘நன்றியுள்ளவர்களாய் இருங்கள்’ என்று அறிவுரை கூறினார்.—கொலோசெயர் 3:15, பொ.மொ.

நன்றியுள்ளவர்களாய் இருக்க நியாயமான காரணம் இருக்கிறது. டேவிஸ் நகரிலுள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பணியாற்றுகிற பேராசிரியர் ராபர்ட் இம்மன்ஸ் இவ்வாறு சொல்கிறார்: “நன்றி உணர்வுள்ளவர்களாய் இருப்பது, அன்றாட பிரச்சினைகளைச் சமாளிக்க ஜனங்களுக்குப் பெருமளவு உதவுகிறது; முக்கியமாய் அழுத்தத்தைச் சமாளிப்பதற்கும் சுயமரியாதையோடு இருப்பதற்கும் உதவுகிறது என்று இதுபற்றிய ஆராய்ச்சி முடிவுகள் காட்டுகின்றன.”

மற்ற பயன்களைப்பற்றி டைம் பத்திரிகை இவ்வாறு குறிப்பிடுகிறது: “மொத்த ஜனங்களையும் எடுத்துக்கொண்டால் . . . தாங்கள் பிறருக்கு நன்றி உள்ளவர்களாய் இருப்பதாக உணருவோர் மற்றவர்களைவிட . . . நல்லாரோக்கியத்தோடு வாழ்கிறார்கள், அதிக நம்பிக்கையான மனநிலையோடு இருக்கிறார்கள், அழுத்தத்தால் பெருமளவு பாதிக்கப்படாதிருக்கிறார்கள், தீராத மனச்சோர்வில் பெரும்பாலும் சிக்கிக்கொள்ளாதிருக்கிறார்கள்.”

எனினும், “கடைசி நாட்களில்” “தற்பிரியராயும்,” “நன்றியறியாதவர்களாயும்” அநேகர் நடந்துகொள்வார்களென பைபிள் முன்னுரைத்தது; ஜனங்கள் இப்படி இருப்பது வருத்தத்திற்குரிய விஷயம். (2 தீமோத்தேயு 3:1-5) இத்தகைய மனப்பான்மைக்கு உண்மைக் கிறிஸ்தவர்கள் எப்படி அடிமையாகாதிருக்கலாம்? “பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியிலே உன்னை நடத்துகிற உன் தேவனாகிய கர்த்தர் நானே” என்று பைபிளின் ஆசிரியர் சொல்கிறார். (ஏசாயா 48:17) கடவுளுடைய சட்டங்களுக்குக் கீழ்ப்படிவதன்மூலம், தன்னல காரியங்களில் மூழ்கியிருப்பவர்கள் சந்திக்கிற பெரும்பாலான துன்பங்களை நாம் தவிர்க்கிறோம். அதோடு, நாம் எடுக்கிற முயற்சிகளையெல்லாம் யெகோவா பார்த்து, அதற்கேற்ப பலன் அளிப்பார் என்ற உறுதியையும் பெற்றிருக்கிறோம். (எபிரெயர் 6:10) இத்தகைய பலன்கள், அவருக்கு ‘நன்றி செலுத்த’ நம்மைத் தூண்டுகின்றன.—சங்கீதம் [திருப்பாடல்கள்] 107:8, பொ.மொ.