Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மின்சக்தியிலிருந்து ஆன்மீக ஒளி

மின்சக்தியிலிருந்து ஆன்மீக ஒளி

மின்சக்தியிலிருந்து ஆன்மீக ஒளி

இத்தாலியிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்

இத்தாலியிலுள்ள பிஸ்டோயா மலைகளில் 1900-களின் ஆரம்பத்தில் தொழிற்சாலைகள் தோன்ற ஆரம்பித்தன. இந்த மலைப்பகுதிகளுக்குக் கச்சாப்பொருள்களையும் உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களையும் எடுத்துச் செல்வதற்காக மின்சார ரயில் பாதை அமைக்கப்பட்டது. இந்தக் குறுகிய ரயில் பாதைக்கான திறப்பு விழா ஜூன் 21, 1926-ல் நடைபெற்றது. கிட்டத்தட்ட 15 கிலோமீட்டர் தூரத்திற்கு இந்தப் ரயில் பாதை குன்றுகளிலும் மலைகளிலும் வளைந்துநெளிந்து சென்றது.

ரயிலுக்குத் தேவையான மின்சக்தி, துணை மின்நிலையம் மூலமாக வழங்கப்பட்டது (மேலே இடப்பக்கம்). இருந்தாலும் காலப்போக்கில், வர்த்தக போக்குவரத்தின் வீழ்ச்சியால் ரயில் போக்குவரத்து ரத்துச் செய்யப்பட்டது. கடைசியில், 1965-ல் அது ஒரேயடியாக நிறுத்தப்பட்டது. ஆனால், இந்த ரயில் பாதை நெடுக கட்டப்பட்ட கட்டிடங்களின் கதி என்னவாயிற்று? சில கட்டிடங்கள் பழுதடைந்தன; மற்ற கட்டிடங்கள் ‘பார்களாகவும்’ பஸ் டிப்போக்களாகவும் மாற்றப்பட்டன.

அந்தத் துணை மின்நிலையமோ புதுப்பிக்கப்பட்டது. 1997-ல் சான்மார்செலோ பிஸ்டோயேசி அசோசியேஷன் ஆஃப் ஜெஹோவாஸ் விட்னஸஸ் என்ற சங்கம் அதை விலைக்கு வாங்கி ராஜ்ய மன்றமாக மாற்றியமைத்தது. டஸ்கனி பகுதியிலுள்ள ராஜ்ய மன்றங்களிலேயே இது தனிச் சிறப்பு வாய்ந்த ஒரு ராஜ்ய மன்றமாக இருக்கிறது (கீழே இடப்பக்கம்). முன்பு துணை மின்நிலையமாக இருந்த இந்த ராஜ்ய மன்றத்தில் கூடிவருகிற சாட்சிகள், இந்த மலைப் பகுதியில் சுறுசுறுப்பாக ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியைப் பிரசங்கித்து வருவதன்மூலம் ‘சுடர்களைப்போலப் பிரகாசிக்கிறார்கள்.’ (பிலிப்பியர் 2:14; மத்தேயு 24:14) ஆம், முன்பு சொல்லர்த்தமான விதத்தில் மின்சக்தி வழங்குவதற்காகப் பயன்படுத்தப்பட்ட கட்டிடம் இன்று ஆன்மீக ஒளியைப் பரப்புவதற்குப் பயன்படுத்தப்படுகிறது.—மத்தேயு 5:14-16; 28:19, 20.