எப்படி பதில் அளிப்பீர்கள்?
எப்படி பதில் அளிப்பீர்கள்?
இச்சம்பவம் எங்கே நடந்தது?
மத்தேயு 2:1-16-ல் உள்ள பதிவை வாசித்து பின்வரும் கேள்விகளுக்குப் பதிலளியுங்கள்.
1. அந்த நட்சத்திரம் வானசாஸ்திரிகளை முதலில் எந்த நகரத்திற்கு வழிநடத்தியது?
பதிலை வரைபடத்தில் வட்டமிட்டுக் காட்டுங்கள்.
எரிகோ
எருசலேம்
பெத்தானியா
பெத்லகேம்
◆ என்ன செய்யும்படி வானசாஸ்திரிகளிடம் ஏரோது கேட்டார்?
․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․
․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․
◆ இயேசு இருந்த இடத்தை அறிந்துகொள்ள ஏரோது ஏன் விரும்பினார்?
◼ கலந்தாலோசிக்க: பைபிள் பதிவுக்கும் கிறிஸ்மஸைப் பற்றிய பாரம்பரிய கதைகளுக்கும் இடையே என்ன வித்தியாசத்தைப் பார்க்கிறீர்கள்.
சரித்திரத்தில் எப்போது சம்பவித்தது?
கீழே கொடுக்கப்பட்டுள்ள பைபிள் புத்தகங்களை எழுதியவர்கள் யார் எனச் சொல்லுங்கள், அதோடு ஒவ்வொரு புத்தகமும் ஏறக்குறைய எந்த வருடத்தில் எழுதி முடிக்கப்பட்டது என்பதைக் கோடிட்டுக் காட்டுங்கள்.
பொ.ச. 50 பொ.ச. 65 பொ.ச. 77 பொ.ச. 96 பொ.ச. 98
2 1 யோவான்
3 யூதா
4 வெளிப்படுத்துதல்
நான் யார்?
5. அன்பையும் உபசரிப்பையும் காட்டியதால் யோவான் என்னைப் பாராட்டினார்.
நான் யார்?
6. நான் ஆதாமுக்கு ஏழாம் தலைமுறை; இருந்தாலும், நான் சொன்ன தீர்க்கதரிசனம் யூதா புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த இதழிலிருந்து
இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள், விடப்பட்ட பைபிள் வசனத்தை அல்லது வசனங்களை எழுதுங்கள்.
பக்கம் 4 மரித்தவர்கள் என்ன நிலையில் இருக்கிறார்கள்? (பிரசங்கி 9:____)
பக்கம் 8 மரணத்தை கடவுள் என்ன செய்வார்? (ஏசாயா 25:____)
பக்கம் 10 பூமியைக் கெடுப்பவர்களை கடவுள் என்ன செய்வார்? (வெளிப்படுத்துதல் 11:____)
பக்கம் 14 ஆபாசத்தைத் தவிர்க்க வேண்டுமானால், எதைச் செய்ய நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும்? (சங்கீதம் 97:____)
பிள்ளைகளுக்காக: இந்தப் படங்கள் எங்கே இருக்கின்றன?
இங்குள்ள படங்கள் இந்தப் பத்திரிகையில் எங்கே இருக்கின்றன? ஒவ்வொரு படத்திலும் என்ன நடக்கிறது என்று உங்கள் சொந்த வார்த்தையில் சொல்லுங்கள்.
(பதில்கள் பக்கம் 28-ல்)
பக்கம் 31-ல் உள்ள கேள்விகளுக்கான பதில்கள்
1. எருசலேம்.
◆ குழந்தை இருக்குமிடத்தைக் கண்டுபிடித்து அவரிடம் அறிவிக்க வேண்டும்.
◆ அப்போதுதான் அவரால் குழந்தையைக் கொல்ல முடியும்.
2. அப்போஸ்தலன் யோவான், பொ.ச. 98.
3. இயேசுவின் சகோதரனான யூதா, பொ.ச. 65.
4. அப்போஸ்தலன் யோவான், பொ.ச. 96.
5. காயு.—3 யோவான் 1, 3-6.
6. ஏனோக்கு.—யூதா 14.