Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பொம்மைகளைவிட இதுதான் ரொம்ப பிடிக்கும்

பொம்மைகளைவிட இதுதான் ரொம்ப பிடிக்கும்

பொம்மைகளைவிட இதுதான் ரொம்ப பிடிக்கும்

பொம்மைகளைவிட புத்தகங்களை விரும்பும் சிறு பிள்ளைகளை எங்காவது பார்த்திருக்கிறீர்களா? கைக்குழந்தைகளாக இருக்கும்போதே அவர்களுக்குப் புத்தகங்கள்மீது பெற்றோர் ஆர்வத்தை ஊட்டி வளர்த்தால் பிள்ளைகள் அவற்றை விரும்பக்கூடும். அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியாவில் வாழும் மெப்ராதூ, ஆன்ஜெலா தம்பதி அப்படித்தான் செய்தார்கள். தங்களுடைய மகளை மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு அழைத்துவந்த சமயத்திலிருந்தே பெரிய போதகரிடம் கற்றுக்கொள் என்ற புத்தகத்திலிருந்து வாசித்துக்காட்ட ஆரம்பித்துவிட்டார்கள்.

அவர்கள் இவ்வாறு எழுதினார்கள்: “இப்படி நாங்கள் செய்ததால் போதகர் புத்தகத்தின் மீது அவளுக்குத் தனி பிரியம் ஏற்பட்டுவிட்டது. அந்தப் புத்தகத்திற்கு அவள் வைத்த பெயர் இயேசு புத்தகம். அவள் 12 மாத குழந்தையாக இருக்கும்போதே இயேசு புத்தகத்திலிருந்து வாசியுங்கள் என்று எங்களிடம் வாயைத் திறந்து கேட்க ஆரம்பித்துவிட்டாள். ஜூலியானாவிற்கு இப்போது மூன்று வயதாகிறது. ஒவ்வொரு நாளும் அம்மா அப்பாவோடு அவள் இனிதாகக் கழிக்கும் அந்த நேரத்திற்காக ஆவலோடு காத்திருக்கிறாள். எங்கள் மகளுக்கு பொம்மைகளைவிட இந்தப் புத்தகம்தான் ரொம்ப பிடிக்கும் என்று நாங்கள் பெருமைக்காகச் சொல்லவில்லை, அதுவே நிஜம். அந்தப் புத்தகத்திலுள்ள படங்களும் எடுத்துக்காட்டுகளுமே பாதி கற்பித்துவிடுகின்றன. அவளுக்குக் கற்பிப்பதிலிருந்து நாங்களும் நிறையவே கற்றுக்கொள்கிறோம்.”

இந்தப் பத்திரிகையின் அளவில் உள்ள, 256 பக்கங்களைக் கொண்ட இப்புத்தகத்தில் அழகிய படங்கள் நிறைந்துள்ளன. இந்தப் புத்தகத்தைப்பற்றி கூடுதல் தகவலைப் பெற விரும்பினால் இங்கே உள்ள கூப்பனைப் பூர்த்தி செய்து 5-ஆம் பக்கத்திலுள்ள பொருத்தமான விலாசத்திற்கு அனுப்பவும். (g 1/08)

❑ எந்த நிபந்தனையுமின்றி இந்தப் புத்தகத்தைப்பற்றி கூடுதலான தகவல் பெற விரும்புகிறேன்.

❑ இலவசமாக பைபிளை கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன். தயவுசெய்து என்னைத் தொடர்புகொள்ளவும்.