Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

எல்லா மக்களுக்கும் ஏற்ற ஒரு புத்தகம்

எல்லா மக்களுக்கும் ஏற்ற ஒரு புத்தகம்

எல்லா மக்களுக்கும் ஏற்ற ஒரு புத்தகம்

எந்தப் புத்தகம் இந்தத் தலைப்பிற்குப் பொருத்தமாக இருக்கிறதென்று நீங்கள் நினைக்கிறீர்கள்? அமெரிக்காவில், கொலராடோ என்ற இடத்தில் வசிக்கும் ஒரு பெண்மணிக்கு, எல்லா மக்களுக்கும் ஏற்ற ஒரு புத்தகம் என்ற சிற்றேடு கிடைத்தது. பைபிளில் என்ன விஷயம் அடங்கியிருக்கிறது? இன்று எல்லா மக்களும் படிக்கவேண்டிய அளவுக்கு அது ஏன் முக்கியமாக இருக்கிறது? போன்ற கேள்விகளுக்கு இந்தச் சிற்றேடு பதிலளிக்கிறது. இந்தச் சிற்றேடிற்காக நன்றி தெரிவித்து அந்தப் பெண்மணி ஒரு கடிதம் எழுதினார்:

“அருமையான புத்தம். ஒரு பக்கம் விடாமல் முழுவதையும் வாசித்து முடித்துவிட்டேன். புத்தகத்தை மூடிவைக்கவே மனம் வரவில்லை. கடவுளுடைய வார்த்தையிலுள்ள முக்கிய குறிப்புகளை எல்லாம் அது தெரிவிக்கிறது. அதோடு பைபிளும் அறிவியலும் எப்படி ஒன்றோடு ஒன்று ஒத்துப்போகிறதென்று அதில் அற்புதமாக விளக்கப்பட்டிருக்கிறது. மேலும், எல்லா மனிதர்களும் படிக்கவேண்டும் என்பதற்காக பைபிள் எப்படிப் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்றும் அது எப்படி காலத்தால் அழியாமல் இன்றுவரை நிலைத்திருக்கிறது என்றும் அந்தச் சிற்றேடு விளக்குகிறது.”

உண்மையிலேயே, பைபிள் தனிச்சிறப்பு வாய்ந்த ஒரு புத்தகம். சரித்திரத்திலேயே எந்தப் புத்தகத்தையும்விட இந்தப் புத்தகமே மிகப் பரவலாக வினியோகிக்கப்பட்டுள்ளது. இது கிட்டத்தட்ட 2,000 வருடங்களுக்கு முன்பு எழுதி முடிக்கப்பட்டாலும் அறிவியலோடு துல்லியமாக ஒத்துப்போகிறது. அதுமட்டுமல்ல, நவீன காலத்திற்கு ஏற்ற ஒரு வழிகாட்டியாகவும் இருக்கிறது.

இந்தச் சிற்றேட்டைப்பற்றி கூடுதல் தகவலைப் பெற விரும்பினால் இங்கே உள்ள கூப்பனைப் பூர்த்தி செய்து 5-ஆம் பக்கத்திலுள்ள பொருத்தமான விலாசத்திற்கு அனுப்பவும். (g 2/08)

❑ எந்த நிபந்தனையுமின்றி இந்தப் புத்தகத்தைப்பற்றி கூடுதலான தகவல் பெற விரும்புகிறேன்.

❑ இலவசமாக பைபிளை கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன். தயவுசெய்து என்னைத் தொடர்புகொள்ளவும்.