Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பருவ வயதில் வரும் மனச்சோர்வுக்கு மருந்து

பருவ வயதில் வரும் மனச்சோர்வுக்கு மருந்து

பருவ வயதில் வரும் மனச்சோர்வுக்கு மருந்து

மெக்சிகோவில் ஆங்கிலம் பயிலும் மாணவர்களிடம் அவர்களுக்குப் பிடித்த தலைப்பில் ஒரு பேச்சை தயாரித்து வரும்படி சொல்லப்பட்டது. அதைப்பற்றி மாரிட்ஸா இவ்வாறு சொல்கிறார்: “அந்தச் சமயத்தில் நான் மனச்சோர்வால் பாதிக்கப்பட்டிருந்தேன். செப்டம்பர் 8, 2001-ல் விழுத்தெழு! பத்திரிகையில் வெளிவந்த ‘மனச்சோர்வடைந்த பருவ வயதினருக்கு உதவி’ என்ற தொடர் கட்டுரை (ஆங்கிலம்) எனக்கு உதவிக்கரம் நீட்டியது. எனவே, அந்தப் பத்திரிகையில் இருந்த விஷயங்களைப் பயன்படுத்தி பேச்சை தயாரித்து கொடுத்தேன். அதற்கு அதிக மதிப்பெண்ணையும் பெற்றேன். அதன்பிறகு மாணவர்களுக்கும் ஆசிரியைகளுக்கும் அந்தத் தொடர் கட்டுரையைக் கொடுத்தேன்.”

இரண்டு வருடங்களுக்குப் பிறகு, மாரிட்ஸா வீட்டுக்கு வீடு ஊழியம் செய்துகொண்டிருந்தபோது அவள் பயின்ற அதே ஆங்கில வகுப்பில் பயிலும் ஒரு பெண்ணைச் சந்தித்தாள். இந்தப் பெண், பருவ வயதில் வரும் மனச்சோர்வைப் பற்றிய அதே விழுத்தெழு! தொடர் கட்டுரைகளைக் காட்டினபோது மாரிட்ஸாவுக்கு ஒரே ஆச்சரியம். மாரிட்ஸாவின் ஆசிரியைக்கு அந்தக் கட்டுரைகள் ரொம்பப் பிடித்திருந்ததால் தன்னுடைய மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் அதைக் கொடுத்ததாகத் தெரிகிறது.

பருவ வயதில் வரும் மனச்சோர்வைப்பற்றி கூடுதல் தகவலைத் தெரிந்துகொள்ள இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன்தரும் விடைகள் என்ற புத்தகத்தைப் பாருங்கள். அதிலுள்ள சில அதிகாரங்கள்: “என்னை நான் ஏன் விரும்புவதில்லை?,” “நான் ஏன் அவ்வளவு மனச்சோர்வடைகிறேன்?,” “என் தனிமையுணர்வை நான் போக்குவது எவ்வாறு?” இந்தச் சிற்றேட்டைப்பற்றி கூடுதல் தகவலைப் பெற விரும்பினால் இங்கே உள்ள கூப்பனைப் பூர்த்திசெய்து 5-ஆம் பக்கத்திலுள்ள பொருத்தமான விலாசத்திற்கு அனுப்பவும். (g 4/08)

❑ எந்த நிபந்தனையுமின்றி இந்தப் புத்தகத்தைப்பற்றி கூடுதலான தகவல் பெற விரும்புகிறேன்.

❑ இலவசமாக பைபிளை கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன். தயவுசெய்து என்னைத் தொடர்புகொள்ளவும்.