துக்கத்திற்கு அருமருந்து
துக்கத்திற்கு அருமருந்து
◼ 12 வயதாக இருந்தபோதே அந்தப் பெண் தன்னுடைய அப்பாவை இழந்துவிட்டார். அதற்குப்பின் பல வருடங்களாகத் துக்கமும் துயரமும் அவளை ஆட்டிப்படைத்து. கனடாவிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்திற்கு ஒரு கடிதம் எழுதினாள், அதில்:
“நீங்கள் நேசிக்கும் ஒருவர் மரிக்கையில் என்ற புத்தகத்தை வாசித்த பிறகுதான் எனக்கு ஆறுதலே கிடைத்தது. துக்கத்திலிருந்து வெளிவர இது எனக்கு ரொம்பவே கைகொடுத்தது. இப்போதும் என்னுடைய அப்பாவை நினைத்தால் என்னுடைய கண்கள் குளமாகிவிடும். இந்தப் புத்தகத்தையும் அதிலுள்ள வசனங்களையும் படித்து, தியானித்து, ஜெபித்து அழுது தீர்த்த பிறகுதான் என் மனதிலிருந்த பாரம் குறைந்தது; கடவுள் என்னென்ன வாக்குறுதிகளை அளித்திருக்கிறார் என்பதைத் தெரிந்துகொண்டபோது மனதுக்கு நிம்மதியாக இருந்தது.
“அந்தப் புத்தகத்தில் பொறிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு வார்த்தையும் வசனமும் என் இதயத்திற்கு இதமாக இருந்தது, உடைந்துபோன என் உள்ளத்தை ஒட்டவைத்தது. இப்போதுதான் எனக்கு உயிரே வந்திருக்கிறது. சோகக் கடலில் திக்குத்தெரியாமல் தவிப்போருக்கு இது ஒரு கலங்கரைவிளக்கம்.”
உங்களுடைய பாசத்திற்கும் நேசத்திற்குமுரிய ஒருவரை பறிகொடுத்திருக்கிறீர்களா? இன்னும் அவர்களை நினைத்து நினைத்து மறுகிக்கொண்டிருக்கிறீர்களா? உங்கள் துக்கத்தைப் போக்க உதவி வேண்டுமா? இறந்தவர்களுக்கு பைபிள் தரும் நம்பிக்கை என்ன? நீங்கள் நேசிக்கிற ஒருவர் மரிக்கையில் என்ற 32 பக்க புத்தகத்தை நீங்களோ உங்கள் நண்பர்களோ படித்தால் நிச்சயம் ஆறுதல் பெறுவீர்கள். இந்தப் புத்தகத்தைப்பற்றி கூடுதல் தகவலைப் பெற விரும்பினால் இங்கே உள்ள கூப்பனைப் பூர்த்திசெய்து 5-ஆம் பக்கத்திலுள்ள பொருத்தமான விலாசத்திற்கு அனுப்பவும். (g 8/08)
❑ எந்த நிபந்தனையுமின்றி இந்தப் புத்தகத்தைப் பெற விரும்புகிறேன்.
❑ இலவசமாக பைபிளை கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன். தயவுசெய்து என்னைத் தொடர்புகொள்ளவும்.