புதுத் தெம்பளித்த “பழைய புத்தகம்”
புதுத் தெம்பளித்த “பழைய புத்தகம்”
◼ பிரேசிலில் யெகோவாவின் சாட்சி ஒருவர் வீடுவீடாகச் சென்று மக்களைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தபோது ஒரு பெண்மணியை எதிர்ப்பட்டார். படுத்தபடுக்கையாகக் கிடந்த தன் மாமியாரை ஒரு புத்தகம் குணப்படுத்தியதாக அந்தப் பெண்மணி கூறினாள். அது எந்தப் புத்தகம் என்று அந்தச் சாட்சி ஆர்வம் பொங்க கேட்க.. “அது ரொம்ப பழைய புத்தகம்” என்று சொல்லிவிட்டு, அவளுடைய மகன் ஏடு ஏடாக கிழித்து வைத்திருந்த என்னுடைய பைபிள் கதை புத்தகத்தை கொண்டுவந்து காட்டினாள்.
மாமியாருக்கு மனச்சோர்வு இருந்தது.. சாவு, இருட்டு என்றாலே பயந்து நடுங்குவார்.. கட்டிலைவிட்டு இறங்கி வரவே மாட்டார்.. என்று அந்தப் பெண்மணி விளக்கினாள். அந்தச் சந்தர்ப்பத்தில் இவளுடைய மகனுக்கு பைபிள் கதை புத்தகம் ஒன்று கிடைத்தது. அதை தன் பாட்டிக்கு வாசித்துக் காட்டினான். பேரன் வாசித்ததைக் கேட்டு பாட்டிக்கு புதுத்தெம்பு வந்தது; மனச்சோர்விலிருந்து மீண்டார்.
சாட்சி இவ்வாறு விவரிக்கிறார்: “இந்தப் புத்தகம் யெகோவாவின் சாட்சிகளால் அச்சிடப்பட்டது, உங்களுக்கும் ஒன்னு கொண்டு வரட்டுமா? என்று அந்தப் பெண்மணியிடம் கேட்டேன். அப்போது, ‘எனக்கு ஒன்னும் என் மாமியாருக்கு ஒன்னும் கொண்டுவாங்க’ என்று அவங்க சொன்னாங்க. நான் போய்க் கொடுத்தபோது, இன்னும் வேணும்னு கேட்டாங்க. கடைசியில, நண்பர்களுக்காக 16 புத்தகம் வாங்கிக்கிட்டாங்க!”
116 கதைகளைக் கொண்ட என்னுடைய பைபிள் கதை புத்தகத்தை நீங்களும் தருவித்து படிக்கலாம். இந்தக் கதைகள் பைபிள் காலத்தில் வாழ்ந்த மக்களையும் அன்று நடந்த சம்பவங்களையும் நம் கண்முன் நிறுத்துகின்றன. இந்தப் புத்தகம் பிரசுரிக்கப்பட்டு 30 ஆண்டுகள் கடந்துவிட்டன. இதுவரை ஏழு கோடியே 20 லட்சம் பிரதிகள் அச்சிடப்பட்டுள்ளன. இந்தப் புத்தகத்தைப் பெற விரும்பினால் இங்கே உள்ள கூப்பனைப் பூர்த்திசெய்து 5-ஆம் பக்கத்திலுள்ள பொருத்தமான விலாசத்திற்கு அனுப்பவும். (g 12/08)
❑ எந்த நிபந்தனையுமின்றி இந்தப் புத்தகத்தைப் பெற விரும்புகிறேன்.
❑ இலவசமாக பைபிளைக் கற்றுக்கொள்ள ஆசை. தயவுசெய்து என்னைத் தொடர்புகொள்ளவும்.