Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

என் சுயமரியாதையை அதிகரிப்பது எப்படி?

என் சுயமரியாதையை அதிகரிப்பது எப்படி?

இளைஞர் கேட்கின்றனர்

என் சுயமரியாதையை அதிகரிப்பது எப்படி?

ஆம் இல்லை

கண்ணாடியில் உங்களைப் பார்க்கும்போது, ❍ ❍

உங்கள் தோற்றம் உங்களுக்குப் பிடித்திருக்கிறதா?

மெச்சத்தக்க திறமைகள் உங்களிடம் ❍ ❍

இருக்கிறதென்று நினைக்கிறீர்களா?

மற்ற இளைஞர்களுடைய தொல்லைகளைச் ❍ ❍

சமாளிக்க உங்களால் முடிகிறதா?

உங்களுடைய குறைகளை மற்றவர்கள் சுட்டிக்காட்டும்போது, ❍ ❍

உங்களால் அதை ஏற்றுக்கொள்ள முடிகிறதா?

மற்றவர்கள் உங்களைப் பற்றித் தவறாகப் பேசுவதை ❍ ❍

உங்களால் தாங்கிக்கொள்ள முடிகிறதா?

மற்றவர்கள் உங்களை நேசிக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்கிறீர்களா? ❍ ❍

உங்கள் உடல்நலத்தைப் பார்த்துக்கொள்கிறீர்களா? ❍ ❍

மற்றவர்கள் சாதிப்பதைப் பார்த்து நீங்கள் சந்தோஷப்படுகிறீர்களா? ❍ ❍

நீங்களும் கெட்டிக்காரர்தான் என்று நினைக்கிறீர்களா? ❍ ❍

மேலே கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளில் பலவற்றிற்கு நீங்கள் இல்லை என்று பதிலளித்தால், உங்களுக்குத் தன்னம்பிக்கை குறைவாக இருக்கிறதென அர்த்தம். இது, உங்களுடைய பலங்களை நீங்கள் புரிந்துகொள்ள முடியாமல் செய்திருக்கிறது. உங்களிடம் இருக்கும் பலங்களை உணர்ந்துகொள்ள இந்தக் கட்டுரை உங்களுக்கு உதவும்.

பெரும்பாலான இளைஞர்கள் தங்களுடைய தோற்றத்தைப் பற்றியும் திறமைகளைப் பற்றியும் புரிந்துகொள்ள முடியாமல் திண்டாடுகிறார்கள்; மற்ற இளைஞர்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது தாங்கள் எந்த மூலைக்கு என்று நினைக்கிறார்கள். நீங்களும் அதுபோலத்தான் நினைக்கிறீர்களா? அப்படியென்றால், கவலைப்படாதீர்கள்! உங்களைப் போலவே நிறையப் பேர் இருக்கிறார்கள்.

● “என்னுடைய குறைகளை நினைக்க நினைக்க நான் நொந்து போய்விடுகிறேன். பொதுவாக, மற்றவர்களைவிட நான்தான் என்னைக் கடுமையாக விமர்சித்துக்கொள்கிறேன்.”—லெடிஸ்யா. *

● “நீங்கள் எவ்வளவுதான் அழகாக இருந்தாலும் உங்களைவிட அழகானவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள்.”—ஹேலி.

● “மற்றவர்களோடு இருக்கையில், எல்லாரும் என்னையே பார்த்துக்கொண்டிருப்பது போன்ற உணர்வு எனக்கு ஏற்படும். நான் லாயக்கற்றவள் என்று மற்றவர்கள் நினைப்பார்களோ எனப் பயப்படுவேன்.”—ரேச்சல்.

இந்த மூவரைப் போலவே நீங்களும் உணருகிறீர்கள் என்றால், கவலைப்படாதீர்கள். உங்களுக்கு நிச்சயம் உதவி இருக்கிறது. உங்கள் சுயமரியாதையை வளர்க்க உதவும் “தன்னம்பிக்கை டானிக்குகள்” மூன்றைக் கவனியுங்கள்.

1. நண்பர்களைச் சம்பாதியுங்கள்

முக்கிய வசனம். “உண்மையான நண்பன் எல்லாச் சமயத்திலும் அன்பு காட்டுகிறான்; கஷ்ட காலத்தில் ஆதரவளிக்கிற சகோதரனாக இருக்கிறான்.”—நீதிமொழிகள் 17:17, NW.

இதன் அர்த்தம். நல்ல நண்பர் கஷ்ட காலங்களில் உறுதுணையாக இருப்பார். (1 சாமுவேல் 18:1; 19:2) ஒருவர் உங்கள்மீது அக்கறை காட்டுகிறார் என்ற எண்ணமே உங்கள் மனதிற்குப் புத்துணர்ச்சியைக் கொடுக்கும். (1 கொரிந்தியர் 16:17, 18) ஆகவே, உங்கள்மீது நல்ல விதமான செல்வாக்கைச் செலுத்துபவர்களோடு நெருங்கிப் பழகுங்கள்.

“நீங்கள் கவலையிலேயே மூழ்கிக் கிடக்காதபடி உண்மையான நண்பர்கள் பார்த்துக்கொள்வார்கள்.”—டானல்.

“உங்கள்மீது ஒருவருக்கு உண்மையிலேயே அக்கறை இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்வது சில சமயங்களில் மிகமிக முக்கியம். இது உங்கள் தன்மானத்தை அதிகரிக்கச் செய்யும்.”—ஹெதர்.

எச்சரிக்கை: நீங்கள் நீங்களாகவே இருக்க உதவுபவர்களே உண்மையான நண்பர்கள்; ஆகையால், உங்கள் நண்பர்கள் அப்படிப்பட்டவர்களா என்பதை நிச்சயப்படுத்திக்கொள்ளுங்கள்; அவர்களுக்காக நீங்கள் வேஷம் போடாதீர்கள். (நீதிமொழிகள் 13:20; 18:24; 1 கொரிந்தியர் 15:33) மற்றவர்களைக் கவர வேண்டும் என்பதற்காக ஏதாவது முட்டாள்தனமாகச் செய்தீர்கள் என்றால், உங்கள் சுயமரியாதையை இழந்துவிடுவீர்கள், இழிவுபடுத்தப்பட்டதைப்போல உணருவீர்கள்.—ரோமர் 6:21.

உங்கள் கருத்து. எந்த நண்பர் உங்களுடைய சுயமரியாதையை அதிகரிப்பாரோ அவருடைய பெயரை இங்கே எழுதுங்கள்.

.....

இந்த நபருடன் நீங்கள் ஏன் சிறிது நேரம் செலவிடக்கூடாது? குறிப்பு: இந்த நபர் உங்களுடைய வயதினராக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

2. மற்றவர்களுக்கு உதவுங்கள்

முக்கிய வசனம். “பெற்றுக்கொள்வதைவிடக் கொடுப்பதிலேயே அதிகச் சந்தோஷம் இருக்கிறது.”—அப்போஸ்தலர் 20:35.

இதன் அர்த்தம். மற்றவர்களுக்கு உதவும்போது, உங்களுக்கு நீங்களே உதவுகிறீர்கள். எப்படி? “ஒருவன் தாராளமாகக் கொடுத்தால் அவன் லாபம் அடைகிறான். நீ அடுத்தவர்களுக்கு உதவினால் நீயும் நன்மை பெறுவாய்” என்கிறது ஒரு பைபிள் பழமொழி. (நீதிமொழிகள் 11:25, ஈஸி டு ரீட் வர்ஷன்) மற்றவர்களுக்கு நீங்கள் உதவும்போது உங்களுடைய சுயமரியாதை கூடும் என்பது நூற்றுக்கு நூறு உண்மை! *

“என்னால் மற்றவர்களுக்கு என்ன செய்ய முடியும் என்று யோசித்துப் பார்க்கிறேன்; சபையில் உள்ளவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்ய முயற்சி செய்கிறேன். இப்படி மற்றவர்கள்மீது அன்பும் அக்கறையும் காட்டும்போது ரொம்பவே சந்தோஷப்படுகிறேன்.”—ப்ரியானா.

“கிறிஸ்தவ ஊழியம் மிகுந்த நன்மை அளிக்கிறது. ஏனென்றால், நம்மைப் பற்றி யோசிப்பதை நிறுத்திவிட்டு மற்றவர்களைப் பற்றி யோசிக்க ஆரம்பித்துவிடுகிறோம்.”—ஜேவன்.

எச்சரிக்கை: ஆதாயத்திற்காக மட்டுமே மற்றவர்களுக்கு உதவாதீர்கள். (மத்தேயு 6:2-4) தவறான உள்நோக்கத்தோடு உதவுவதில் எந்தப் பிரயோஜனமும் இல்லை. அது போலித்தனமானது என்பதை மற்றவர்களால் எளிதில் கண்டுபிடித்துவிட முடியும்.—1 தெசலோனிக்கேயர் 2:5, 6.

உங்கள் கருத்து. நீங்கள் முன்பு யாருக்காவது உதவி செய்திருக்கிறீர்களா? யார் அவர்? அவருக்காக நீங்கள் என்ன செய்தீர்கள்?

.....

அதன் பிறகு நீங்கள் எவ்வாறு உணர்ந்தீர்கள்?

.....

வேறு யாருக்கு உதவ முடியும் என்று யோசித்துப் பாருங்கள்; அவருக்கு நீங்கள் எவ்வாறு உதவலாம் என்று எழுதுங்கள்.

.....

3. தவறு செய்தாலும் தளர்ந்துவிடாதீர்கள்

முக்கிய வசனம். “எல்லாருமே பாவம் செய்து கடவுளுடைய மகிமையான குணங்களைப் பிரதிபலிக்கத் தவறியிருக்கிறார்கள்.”—ரோமர் 3:23.

இதன் அர்த்தம். நம் எல்லாருக்குமே குறைபாடுகள் இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. அதனால், நாம் சில சமயங்களில் எதையாவது தவறாகச் சொல்லிவிடலாம் அல்லது செய்துவிடலாம். (ரோமர் 7:21-23; யாக்கோபு 3:2) நாம் தவறு செய்வதைத் தவிர்க்க முடியாவிட்டாலும், அதற்குப் பிறகு எப்படி நடந்துகொள்கிறோம் என்பதைக் கட்டுப்படுத்த முடியும். பைபிள் இவ்வாறு சொல்கிறது: “நல்லவர் ஏழு முறை விழுந்தாலும் எழுந்து நிற்பார்.”—நீதிமொழிகள் 24:16, பொது மொழிபெயர்ப்பு.

“நம்முடைய பலவீனங்களை மற்றவர்களுடைய பலத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால், நம்முடைய சுயமரியாதை குறைந்துவிடும்.”—கெவன்.

“எல்லாரிடமும் நல்ல குணங்களும் இருக்கின்றன, கெட்ட குணங்களும் இருக்கின்றன. அதனால், நம்மிடம் இருக்கிற நல்ல குணங்களைப் பார்த்துச் சந்தோஷப்பட்டுக்கொள்ள வேண்டும், கெட்ட குணங்களைத் திருத்திக்கொள்ள வேண்டும்.”—லாரன்.

எச்சரிக்கை: உங்கள் குறைபாடுகளைச் சாக்காகப் பயன்படுத்தி பாவம் செய்துகொண்டிருக்காதீர்கள். (கலாத்தியர் 5:13) வேண்டுமென்றே தவறு செய்தால், யெகோவா தேவனுடைய அங்கீகாரத்தை இழந்துவிடுவீர்கள்; அவருடைய அங்கீகாரம்தான் மிக முக்கியம்.—ரோமர் 1:24, 28.

உங்கள் கருத்து. எந்தக் குணத்தில் நீங்கள் முன்னேற வேண்டுமோ, அந்தக் குணத்தை இங்கு எழுதுங்கள்.

.....

அந்தக் குணத்திற்குப் பக்கத்தில் இன்றைய தேதியையும் குறிப்பிடுங்கள். நீங்கள் எப்படி முன்னேற வேண்டும் என்று ஆராய்ச்சி செய்யுங்கள்; பின்பு, ஒரு மாதத்தில் எவ்வளவு முன்னேறி இருக்கிறீர்கள் என்பதைப் பாருங்கள்.

உங்களுடைய உண்மையான மதிப்பு

‘கடவுள் நம் இருதயத்தைவிட உயர்ந்தவராக இருக்கிறார்’ என்று பைபிள் சொல்கிறது. (1 யோவான் 3:20) உங்களுடைய மதிப்பை உங்களால் பார்க்க முடியாவிட்டாலும் கடவுளால் பார்க்க முடியும் என்பதை இது அர்த்தப்படுத்துகிறது. உங்களிடம் குறைபாடு இருப்பதால் உங்களுடைய மதிப்பைக் கடவுள் பார்க்காமல் போய்விடுவாரா? உங்களிடம் 1,000 ரூபாய் நோட்டு ஒன்று இருப்பதாக வைத்துக்கொள்ளுங்கள். அது லேசாகக் கிழிந்திருக்கிறது. அது கிழிந்திருக்கிறது என்பதற்காக அதைத் தூக்கியெறிந்து விடுவீர்களா? அல்லது, அதற்கு மதிப்பில்லாமல் போய்விடுமா? இல்லவே இல்லை. அது கிழிந்திருந்தாலும் கிழிந்திராவிட்டாலும் அதற்கு அதே மதிப்புதான்.

கடவுளும் உங்களை அப்படித்தான் மதிக்கிறார். அவரைப் பிரியப்படுத்துவதற்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகளை அவர் கவனிக்கிறார்; உங்களுக்கு அவை ரொம்ப அற்பமானதாகத் தோன்றினாலும்கூட அவற்றை அவர் மதிக்கிறார். சொல்லப்போனால், ‘உங்களுடைய உழைப்பையும் தமது பெயருக்காக நீங்கள் காட்டிய அன்பையும் மறந்துவிடுவதற்குக் கடவுள் அநீதியுள்ளவர் அல்ல’ என்று பைபிள் உறுதியளிக்கிறது.—எபிரெயர் 6:10. (g10-E 05)

“இளைஞர் கேட்கின்றனர்” தொடர் கட்டுரைகளுக்கு: www.watchtower.org/ype

[அடிக்குறிப்புகள்]

^ இந்தக் கட்டுரையில் சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

^ நீங்கள் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராக இருந்தால், கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய செய்தியை மற்றவர்களுக்கு அறிவிக்கையில் கிடைக்கும் சந்தோஷத்தை எண்ணிப் பாருங்கள்.—ஏசாயா 52:7.

சிந்திப்பதற்கு

நீங்கள் கீழே சொல்லப்பட்டுள்ள காரணங்களுக்காக மனம் தளர ஆரம்பித்தீர்கள் என்றால் என்ன செய்வீர்கள்?

● மற்ற இளைஞர்கள் உங்களை மட்டம்தட்டிப் பேசுவதால்

● மற்றவர்கள் அளவுக்கு நீங்கள் இல்லை என்று உணருவதால்

● உங்கள் குறைகள் மட்டுமே உங்கள் கண்களுக்குத் தெரிவதால்

[பக்கம் 11-ன் சிறுகுறிப்பு]

“ஒருவர் ரொம்ப அழகாக இருக்கலாம், ஆனால் தனக்கு அழகே இல்லை என்று நினைத்துக்கொள்ளலாம். மறுபட்சத்தில், ஒருவர் அழகாக இல்லாமல் இருக்கலாம்; ஆனால், தன்னைவிட யாருமே அழகாக இல்லையென்று நினைத்துக்கொள்ளலாம். எல்லாம் அவரவர் கண்ணோட்டத்தில்தான் இருக்கிறது.”—அலீசா

[பக்கம் 11-ன் பெட்டி/படங்கள்]

மற்ற இளைஞர்கள் சொல்வது

“நான் தன்னம்பிக்கை இழந்த சமயங்களில் என் நண்பர்கள் என்னிடம் அன்பாகப் பேசியது எனக்கு உற்சாகத்தைக் கொடுத்தது. ஒரு அரவணைப்போ சின்னப் புன்சிரிப்போகூட அதிக ஊக்கத்தைக் கொடுத்தது.”

“மற்றவர்களுடைய நல்ல குணங்களைப் பார்த்துப் பொறாமைப்படுவதைவிட, அந்தக் குணங்களிலிருந்து நாம் நன்மை அடையலாம். நம்முடைய நல்ல குணங்களைப் பார்த்து அவர்களும்கூட நன்மை அடைவார்கள்.”

[படங்கள்]

ஆப்ரீ

லாரென்

[பக்கம் 12-ன் படம்]

ஒரு நோட்டு கிழிந்திருக்கிறது என்பதற்காக, அதன் மதிப்பு குறைந்துவிடாது. அதுபோலவே, உங்களுக்குக் குறைபாடு இருக்கிறது என்பதற்காக, கடவுளுடைய பார்வையில் உங்கள் மதிப்பு குறைந்துவிடாது