Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

“எங்கு பார்த்தாலும் நம்பிக்கை துரோகம்”

“எங்கு பார்த்தாலும் நம்பிக்கை துரோகம்”

“எங்கு பார்த்தாலும் நம்பிக்கை துரோகம்”

மேற்கு ஆப்பிரிக்காவில் மலேரியா காய்ச்சலுக்கு மருந்து சாப்பிட்ட 12 வயது சிறுவன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தான். அரசு அங்கீகாரம் பெற்ற கடையிலிருந்துதான் அவனுடைய அம்மா அந்த மருந்தை வாங்கினார். ஆனால் அது போலி மருந்து! “கடந்த 15 வருடங்களாகவே போலி மருந்துகளின் நடமாட்டம் இருந்து வருகிறது” என்கிறார் அந்த மருத்துவமனையில் வேலை பார்க்கும் ஒரு மருத்துவர். *

ஆசியாவைச் சேர்ந்த தம்பதியருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்திருந்தது. பாவம்... அந்தப் பெற்றோர் சீக்கிரமே அதிர்ச்சியில் ஆடிப்போனார்கள். அப்படி என்ன நடந்தது? சத்தான பால் என்று நம்பி, தங்கள் குழந்தைக்குக் குடிக்கக் கொடுத்தார்கள். ஆனால், அது பிள்ளையின் உயிரையே குடித்துவிட்டது! அதிலிருந்த கலப்படப் பொருள் அந்தப் பிஞ்சுக் குழந்தையின் உயிருக்கு உலைவைத்துவிட்டது!!

நம்பிக்கைக்குப் பேர்போன அமெரிக்கத் தொழிலதிபர் ஒருவர் வாடிக்கையாளர்களிடமிருந்து கோடிக்கணக்கான டாலர்களைச் சுருட்டிவிட்டார்! “இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய மோசடி” என இது முத்திரை குத்தப்பட்டது. இந்த மோசடியில் ஆயிரக்கணக்கானோரின் ஓய்வூதியப் பணம் மாயமாய் மறைந்துவிட்டது!!

இன்றைய உலகில், ஏறக்குறைய எல்லாருமே ஏதோவொரு கட்டத்தில் நம்பிக்கை துரோகத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள். “எங்கு பார்த்தாலும் நம்பிக்கை துரோகம்” என்று குறிப்பிடுகிறது பிரெஞ்சு செய்தித்தாள் லா மாண்ட். உலகளாவிய பொருளாதார நெருக்கடிக்கும் அதுவே ஆணிவேர்.

இன்று பரவலாகக் காணப்படும் ‘நம்பிக்கை துரோக’ செயல்களுக்கு எவையெல்லாம் தீனி போட்டிருக்கின்றன? இந்த உலகில், நீங்கள் யாரையாவது நம்ப முடியுமா? (g10-E 10)

[அடிக்குறிப்பு]

^ லா ஃபிகாரோ செய்தித்தாள் அறிக்கை; பாரிஸ், பிரான்சு.