Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

குடும்பமாகச் சிந்திக்க...

குடும்பமாகச் சிந்திக்க...

குடும்பமாகச் சிந்திக்க...

இந்தப் படங்களில் என்ன இல்லை?

நீதிமொழிகள் 18:10 மற்றும் 26:17-ஐ வாசியுங்கள். இப்போது இந்தப் படங்களைப் பாருங்கள். இதில் என்ன இல்லை? கீழேயுள்ள கோடிட்ட இடத்தில் பதில்களை எழுதுங்கள். புள்ளிகளை இணைத்து, முழு படத்தைக் கண்டுபிடியுங்கள், பின்பு வண்ணம் தீட்டுங்கள்.

1 .....

2 .....

[படங்கள்]

(பிரசுரத்தைக் காண்க)

கலந்தாலோசிக்க:

இந்த வசனங்களிலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்? கடவுளுடைய அங்கீகாரத்தைப் பெற அவரது பெயரைத் தெரிந்துவைத்திருந்தால் மட்டும் போதுமா?

பதில் கண்டுபிடிக்க: சங்கீதம் 91:2-ஐயும் நீதிமொழிகள் 3:5, 6-ஐயும் வாசியுங்கள்.

மற்றவர்களுடைய விஷயத்தில் தலையிடாமல் இருப்பது ஏன் நல்லது?

பதில் கண்டுபிடிக்க: கலாத்தியர் 6:5-7-ஐயும் 1 தெசலோனிக்கேயர் 4:11-ஐயும் 1 பேதுரு 4:15-ஐயும் வாசியுங்கள்.

பின்பு, நீதிமொழிகள் 26:18, 19-ஐ வாசியுங்கள். விளையாட்டுக்காக தமாஷ் செய்வது சரியா?

பதில் கண்டுபிடிக்க: நீதிமொழிகள் 14:13-ஐயும் 15:21-ஐயும் மத்தேயு 7:12-ஐயும் வாசியுங்கள்.

குடும்பமாகச் செய்து பார்க்க:

நீதிமொழிகள் 31:10-31-ஐச் சேர்ந்து வாசியுங்கள். ஒரு திறமைசாலியான மனைவி செய்யும் வேலைகளை அந்த வசனங்கள் பட்டியலிடுகின்றன; அவற்றில் சிலவற்றை உங்கள் குடும்பத்திலுள்ள ஒருவர் மௌனமாக நடித்துக் காட்ட வேண்டும். மற்றவர்கள் அதைக் கண்டுபிடிக்க வேண்டும். நீங்கள் இன்னும் திறமைசாலியாக என்னென்ன வேலைகளைக் கற்றுக்கொள்ளலாம் எனக் குடும்பமாகக் கலந்துபேசுங்கள். (g11-E 10)

சேகரிக்க... கற்றுக்கொள்ள...

வெட்டவும், மடிக்கவும், பாதுகாக்கவும்

பைபிள் அட்டை 1 சாலொமோன்

கேள்விகள்

அ. சாலொமோன் பணத்தையோ நீண்ட ஆயுசையோ கடவுளிடம் கேட்காமல் எதைக் கேட்டார்?

ஆ. கோடிட்ட இடத்தை நிரப்புங்கள். சாலொமோன் _____ நீதிமொழிகளைச் சொன்னார், _____ பாடல்களைப் பாடினார்.

இ. சாலொமோனின் மற்றொரு பெயர் என்ன?

[அட்டவணை]

கி.மு. 4026 கி.பி. 1 கி.பி. 98

ஆதாம் படைக்கப்பட்ட வருடம் சுமார் கி.மு. 1000-ல் வாழ்ந்தார் கடைசி பைபிள் புத்தகம்

எழுதப்பட்ட வருடம்

[தேசப்படம்]

சாலொமோனின் ஞானமுள்ள வார்த்தைகளைக் கேட்பதற்காக சேபா நாட்டு ராணி கிட்டத்தட்ட 2,400 கிலோமீட்டர் தூரத்திலிருந்து வந்தார்

சேபா

எருசலேம்

சாலொமோன்

பின்னணி

இவர் தாவீதுக்கும் பத்சேபாளுக்கும் பிறந்த இரண்டாவது மகன். இஸ்ரவேல் நாட்டை இவர் 40 வருடங்கள் ஆண்டார். யெகோவாவை வணங்குவதற்காக ஒரு பெரிய ஆலயத்தைக் கட்டினார். (1 இராஜாக்கள் 5:2-5) நீதிமொழிகள், பிரசங்கி, உன்னதப்பாட்டு ஆகிய பைபிள் புத்தகங்களை எழுத யெகோவா இவரைப் பயன்படுத்தினார். பொய் கடவுட்களை வணங்கிய பெண்களைத் திருமணம் செய்துகொண்டார்; இதனால் யெகோவாவை விட்டு விலகிச் சென்றார்.—1 இராஜாக்கள் 11:1-6.

பதில்கள்

அ. ஞானமுள்ள இருதயம்.—1 இராஜாக்கள் 3:5-14.

ஆ. 3,000, 1,005.—1 இராஜாக்கள் 4:29, 32.

இ. யெதிதியா, இதன் அர்த்தம் யெகோவாவுக்குப் பிரியமானவர்.—2 சாமுவேல் 12:24, 25.

மக்களும் நாடுகளும்

3. என் பெயர் க்ளோ. எனக்கு ஒன்பது வயது, கனடா நாட்டில் இருக்கிறேன். கனடாவில் சுமாராக எத்தனை யெகோவாவின் சாட்சிகள் இருக்கிறார்கள்? 55,000 அல்லது 88,000 அல்லது 1,10,000?

4. இதில் எந்தப் புள்ளி கனடா நாட்டை காட்டுகிறது? அதை வட்டமிடு. உன்னுடைய நாடு எங்கே? அதில் ஒரு புள்ளி வை. உன் நாட்டிற்கும் என் நாட்டிற்கும் எவ்வளவு தூரம் என்று பார். (g11-E 10)

பிள்ளைகளுக்காக: இந்தப் படங்கள் எங்கே இருக்கின்றன?

இங்குள்ள படங்கள் இந்தப் பத்திரிகையில் எங்கே இருக்கின்றன? ஒவ்வொரு படத்திலும் என்ன நடக்கிறது என்று உங்கள் சொந்த வார்த்தையில் சொல்லுங்கள்.

“குடும்பமாகச் சிந்திக்க...” என்ற இந்தக் கட்டுரையின் கூடுதல் பிரதிகளை www.pr418.com-லிருந்து ‘பிரிண்ட்’ எடுக்கலாம்

● “குடும்பமாகச் சிந்திக்க...”—பதில்கள் 24-ஆம் பக்கத்தில்

பக்கங்கள் 30 மற்றும் 31-க்கான பதில்கள்

1. பலத்த துருகம், அதாவது கோபுரம்.

2. நாய்.

3. 1,10,000.

4. அ.