Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பக்கம் இரண்டு

பக்கம் இரண்டு

பக்கம் இரண்டு

பொறுப்பான பிள்ளைகளை வளர்க்க...

புத்தம் புது மலராய்ப் பூத்திருக்கும் பிள்ளைச் செல்வத்தைக் கைகளில் ஏந்தும்போது ஒன்றைப் பற்றி மட்டும் பெற்றோர் நினைத்துப் பார்க்க மாட்டார்கள். ஆனால், அதுதான் யதார்த்தம்: இந்தப் பிஞ்சுக் குழந்தை ஒருநாள் வளர்ந்து பெரியவனாகிவிடுவான்; தன் சொந்தக் காலில் நிற்பான். சொல்லப்போனால், மனிதனுடைய வாழ்க்கை இப்படித்தான் இருக்குமென கடவுளும் சொல்லியிருக்கிறார்: “புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு” போவான். (ஆதியாகமம் 2:24) இது ஆணுக்கு மட்டுமல்ல, பெண்ணுக்கும் பொருந்தும்.

என்றாலும், மகனோ மகளோ வேலை தேடி அல்லது மணமாகி வேறு இடத்திற்குச் செல்லும் நாளில் நிறையப் பெற்றோரின் கண்களில் ஆனந்தமும் அழுகையும் ததும்பி நிற்கும். ‘என் பிள்ளையை நான் ஒழுங்காக வளர்த்திருக்கிறேனா?’ என்று அவர்கள் யோசிப்பார்கள். ‘அவன் தன்னுடைய வேலையைத் தக்கவைத்துக்கொள்வானா, அவள் வீட்டை ஒழுங்காக கவனித்துக்கொள்வாளா, அவன் வரவுக்கு ஏற்ற செலவு செய்வானா?’ என்றெல்லாம் நினைத்து அவர்கள் கவலைப்படலாம். அதைவிட முக்கியமாக, ‘நாங்கள் சொல்லிக் கொடுத்த ஒழுக்க நெறிகளின்படி வாழ்வானா?’ என்ற கேள்விதான் அவர்கள் மனதைக் குடையும்.—நீதிமொழிகள் 22:6; 2 தீமோத்தேயு 3:15.

பிள்ளைகளுடைய வளர்ச்சியின் ஒவ்வொரு கட்டத்திலும் பெற்றோருக்கு வழிகாட்டுகிற பைபிள் ஆலோசனைகளுக்கு விழித்தெழு!-வின் இந்தச் சிறப்பிதழைப் புரட்டுங்கள். (g11-E 10)