Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இளைஞர் கேட்கின்றனர்

நான் ஏன் அப்படிப் பேசினேன்?

நான் ஏன் அப்படிப் பேசினேன்?

ஏன் அடிக்கடி தவறாகப் பேசிவிடுகிறேன்

அதைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்

என் நாவை அடக்குவது எப்படி

பதில் கண்டுபிடிக்க இந்தக் கட்டுரை உங்களுக்கு உதவும்

“நான் எப்பவுமே நல்லா யோசிச்சுதான் பேசுவேன். ஆனா, சில நேரத்துல ஏதாவது தப்பா பேசிடுவேன். அப்போ, அந்த இடத்த விட்டே ஓடிடலாம் போல இருக்கும்.”​—சேஸ்

“நான் நினைக்கிறததான் எல்லாரும் யோசிச்சிட்டிருப்பாங்க, ஆனா நான் மட்டும் பட்டுனு வாய திறந்து சொல்லிடுவேன். அப்பறம் ஏன்தான் சொன்னேனோனு தலையில அடிச்சுக்குவேன்.”​—ஆலி

ஏன் அப்படிப் பேசுகிறேன்

முக்கிய வசனம்: “பேச்சில் தவறு செய்யாதவன் எவனோ அவனே பரிபூரணமான மனிதன்.” (யாக்கோபு 3:2) இதிலிருந்து என்ன தெரிகிறது? யாராலும் நாவை முழுமையாக அடக்க முடியாது. “ஒரு விஷயத்தைப் பற்றி எதுவுமே சொல்லக்கூடாதுனு மூளை தடை போட்டாலும் அதையும் தாண்டி எல்லாத்தையும் உளறி கொட்டிடுவேன்” என்கிறாள் அனித்தா. a இதே போலத்தான் நிறைய பேர் சொல்கிறார்கள்.

நிஜ சம்பவம்: “நான் வேண்டான்னு ஒதுக்கி வெச்ச சில டிரெஸ்கள என் ஃப்ரெண்ட் எடுத்துக்கிறேன்னு சொன்னா. நான் கொஞ்சம்கூட யோசிக்காம, ‘இது உனக்கு பத்தாது’-ன்னு சொல்லிட்டேன். ‘அப்படினா, நான் குண்டுனு சொல்றியா’-ன்னு கேட்டா.”—கரீன்.

எப்போது வாயை அடக்குவது உங்களுக்குக் கஷ்டமாக இருக்கிறது என அறிய:

● பலவீனத்தைக் கண்டுபிடியுங்கள்

___ கோபத்தில் கண்டபடி பேசிவிடுகிறேன்

___ யோசிக்காமல் பேசிவிடுகிறேன்

___ மற்றவர்கள் சொல்வதைக் கேட்காமல் முந்திக்கொண்டு பேசிவிடுகிறேன்

___ வேறு காரணங்கள்

உதாரணம்: “நான் எப்ப பார்த்தாலும் ஜோக் அடிச்சுகிட்டே இருப்பேன். சில நேரத்துல நான் சொல்றத மத்தவங்க தப்பா புரிஞ்சுக்குவாங்க.”—அருணா.

● யாரிடம் அடிக்கடி தவறாக பேசிவிடுகிறீர்கள் என்பதைக் கண்டுபிடியுங்கள்.

___ அம்மா/அப்பா

___ கூடப்பிறந்தவர்

___ நண்பர்

___ வேறு யாராவது

உதாரணம்: “எப்பவும் எனக்கு ரொம்ப பிடிச்சவங்களதான் தெரியாத்தனமா புண்படுத்திடுறேன். அதுதான் எனக்கு கஷ்டமா இருக்கு. அவங்ககிட்ட ரொம்ப உரிமையா பேசறதுனாலதான் ஏதாவது தப்பா சொல்லிடுறேன்னு நினைக்கிறேன்” என்கிறாள் 20 வயது கிறிஸ்டி.

தவறாகப் பேசிவிட்டால் என்ன செய்வது

முக்கிய வசனம்: “சமாதானத்தை உண்டாக்குகிற காரியங்களை . . . நாடிச்செல்வோமாக.” (ரோமர் 14:19) இந்த அறிவுரையின்படி நடக்க ஒரு வழி, மன்னிப்பு கேட்பது.

நிஜ சம்பவம்: “நான் பத்து மாசக் குழந்தையா இருந்தப்ப அம்மா இறந்துட்டாங்க. அப்பாவும் என்னை அம்போன்னு விட்டுட்டு போயிட்டாங்க. அதனால, எங்க பெரியம்மாவும் பெரியப்பாவும்தான் என்னை வளத்தாங்க. எனக்கு ஒரு பத்து, பதினொரு வயசு இருக்கும்போது ஒருநாள், எங்க அம்மா இறந்தத நினைச்சு அழுதிட்டிருந்தேன். எனக்கு யாருமே இல்லனு நினைச்சு கோபம் கோபமா வந்துச்சு, யார் மேலயாவது எரிஞ்சு விழணும்னு தோனுச்சு. அப்ப எங்க பெரியம்மா ஏதோ வேலை செய்ய சொல்லி கூப்பிட்டாங்க. நான் கோபத்துல பொரிஞ்சி தள்ளிட்டேன். கடைசியில, அவங்கள பார்த்து ‘உங்கள எனக்கு சுத்தமா பிடிக்கல, நீங்க ஒன்னும் என் அம்மா இல்ல’-ன்னு சொல்லிட்டேன். அவங்க அப்படியே ஷாக் ஆகி நின்னுட்டாங்க. அப்புறம் கடகடன்னு அவங்க ரூமுக்கு போய், கதவ சாத்திட்டு அழ ஆரம்பிச்சிட்டாங்க. எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல. அவ்வளவு நாளா அவங்க பொண்ணு மாதிரி என்னை கவனிச்சிகிட்டாங்க. ஆனா நான் அவங்க மனச இப்படி நோகடிச்சிட்டேன். அப்புறம் என் பெரியப்பா எங்கிட்ட அதப்பத்தி பேசினாங்க. எப்படி கவனமா பேசணுங்கறதுக்கு சில வசனங்கள காட்டினாங்க. நான் செஞ்சது எவ்வளவு பெரிய தப்புனு புரிஞ்சுகிட்டு, நானே போய் பெரியம்மாகிட்ட மன்னிப்பு கேட்டேன்.”—கேரன்.

மன்னிப்பு கேட்பது உங்களுக்கு ஏன் கஷ்டமாக இருக்கிறது என்பதற்கான காரணத்தைக் கீழே எழுதுங்கள்.

․․․․․

மன்னிப்பு கேட்பதால் உங்களுக்கு என்ன நன்மை?

․․․․․

சிந்தித்துப் பார்க்க: நீதிமொழிகள் 11:2 மற்றும் மத்தேயு 5:23, 24-ல் உள்ள நியமத்தைக் கொஞ்சம் பாருங்கள்.

ஆனால், சொல்வதை எல்லாம் சொல்லிவிட்டு போய் மன்னிப்பு கேட்பதைவிட, முன்பே யோசித்துப் பேசுவது நல்லது. அதை எப்படிச் செய்யலாம்?

எப்படி நாவை அடக்குவது

முக்கிய வசனம்: “கேட்பதற்குத் தீவிரமாகவும், பேசுவதற்கு நிதானமாகவும், கோபிப்பதற்கு தாமதமாகவும் இருக்க வேண்டும்.” (யாக்கோபு 1:19) இதற்கு உதவும் சில ஆலோசனைகள் இங்கு கொடுக்கப்பட்டிருக்கின்றன. (g12-E 01)

இந்த வசனங்களை வாசித்துப் பாருங்கள். பிறகு, இங்கு சிலர் கொடுத்திருக்கும் ஆலோசனைகளோடு அவற்றைப் பொருத்திப் பாருங்கள்.

நீதிமொழிகள் 12:16

நீதிமொழிகள் 17:14

நீதிமொழிகள் 26:20

பிரசங்கி 7:9

பிலிப்பியர் 2:3

1 “எல்லா விஷயத்தையும் பெருசா எடுத்துக்காதீங்க. இல்லன்னா சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் கோபம் வரும்.”—ஜேனட்.

2 “கொஞ்ச நேரம் நான் தனியா வாக்கிங் போய்டுவேன். அப்போ, என் கோபம் எல்லாம் தணிஞ்சிடும்.”—பியூலா.

3 “சின்ன வயசுல நான் எல்லாத்துக்கும் எதிர்த்து பேசிட்டிருப்பேன். ஆனா, சின்ன விஷயத்தை எல்லாம் பெருசா எடுத்துக்க கூடாதுன்னு வளர வளர தெரிஞ்சிக்கிட்டேன்.”—செலினா.

4 “யாராவது கோபத்துல கத்துனா, பேசாம அமைதியா இருக்குறதுதான் நல்லது. நீங்க அமைதியா இருக்குறத பார்த்தா அவங்களும் அமைதியா ஆயிடுவாங்க. அதனால பொறுமையா இருங்க. எரியிற நெருப்புல எண்ணைய ஊத்தாதீங்க.”—டீனா.

5 “சில நேரத்துல யார் மேலயாவது எனக்கு கோபம் வரும்போது, அவங்கள திட்டுறதுக்கு வாய் வரைக்கும் வார்த்தை வந்திடும். ஆனா, உடனே பேசிடாம, பொறுமையா இருப்பேன். நான் பேசாம இருந்தது நல்லதா போச்சுனு அப்புறம்தான் புரிஞ்சிப்பேன். அதனால, யோசிக்காம எதையும் பட்டுனு சொல்லிடக்கூடாதுன்னு கத்துக்கிட்டேன்.”—சார்லஸ்.

“இளைஞர் கேட்கின்றனர்” தொடரில் வெளியான மற்ற கட்டுரைகளை www.watchtower.org/ype என்ற வெப்சைட்டில் பாருங்கள்.

[அடிக்குறிப்பு]

a இந்தக் கட்டுரையில் வரும் சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

[பக்கம் 17-ன் பெட்டி/படங்கள்]

ஆலி—நான் ஏதாவது சொல்றதுக்கு முன்னாடி மனசுக்குள்ள சில கேள்விகள கேட்டுக்குவேன்: ‘நான் இத சொல்றதுனால ஏதாவது பிரயோஜனம் இருக்குமா? நான் பேசறது மத்தவங்கள காயப்படுத்திடுமா?’ நாம சொல்றது சரியா தப்பான்னு நமக்கே சந்தேகமா இருந்துச்சுன்னா அத சொல்லாம இருக்குறதே நல்லது.

சேஸ்—நான் ஏதாவது சொல்றதுக்கு முன்னாடி, என்னை சுத்தி இருக்கிறவங்க இத கேட்டா என்ன நினைப்பாங்கனு யோசிச்சு பார்ப்பேன். வளர வளர நான் வாய அடக்க கத்துக்கிட்டேன். எல்லாத்தையும் நாம அனுபவத்துலதான் கத்துக்குவோம்.

[பக்கம் 19-ன் பெட்டி]

பெற்றோரிடம் கேட்டுப் பாருங்களேன்

நாம் யாருமே பரிபூரணர் இல்லை. யாக்கோபு எழுதியதைப் போல, “நாம் எல்லாரும் பலமுறை தவறு செய்கிறோம்.” எனவே, நாவை அடக்குவதில் என்னென்ன சவால்களைச் சந்தித்தார்கள் என்று உங்கள் பெற்றோரிடம் கேளுங்கள்.—யாக்கோபு 3:2.

[பக்கம் 18-ன் படம்]

“பேஸ்ட்டை வெளில எடுத்துட்டோம்னா திரும்ப உள்ள அமுக்க முடியாது. அதே மாதிரிதான், நம்ம பேச்சும். புண்படுத்துற வார்த்தைகள கொட்டிடோம்னா, திரும்ப அள்ள முடியாது.”—ஜேம்ஸ்.