Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உணவில் கிருமிகள்—ஜாக்கிரதை!

உணவில் கிருமிகள்—ஜாக்கிரதை!

உணவில் கிருமிகள்​—⁠ஜாக்கிரதை!

“ஈ-கோலி பாக்டீரியாவால் பிள்ளைகள் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஜெர்மனியில் பள்ளி மூடப்பட்டது.”​—⁠ராய்ட்டர்ஸ் நியூஸ் சர்வீஸ், ஜெர்மனி.

“ஜந்து மாகாணங்களில் சால்மோனெல்லா கிருமி தொற்றுக்கு முளைகட்டிய பயிறுகளே காரணமாக இருந்தது.”​—⁠யூஎஸ்ஏ டுடே.

“இட்லியில் ஈ-கோலி பாக்டீரியம்.” ​—⁠தி டைம்ஸ் ஆஃப் இன்டியா, பூனே, இந்தியா.

உணவிலிருந்து தொற்றும் நோயால் அநேகர் பாதிக்கப்படுவதாக உலகின் பல நாடுகளிலிருந்து செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன. வளர்ந்த நாடுகளில் ஒவ்வொரு வருடமும் சுமார் 30 சதவீத மக்கள் இதனால் பாதிக்கப்படுவதாக ஆய்வாளர்கள் மதிப்பிடுகிறார்கள்.

இதைப் படித்ததும் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஹாங்காங்கில் இருக்கும் ஹோய் என்ற குடும்பத்தலைவர் சொல்கிறார்: “இதெல்லாம் நினைச்சா வேதனையா இருக்கு, கோவம்கூட வருது. எனக்கு இரண்டு பிள்ளைங்க. அவங்க சாப்பிடறதுக்கு நல்ல பொருளா பார்த்து எங்க வாங்கறது, எப்படி வாங்கறதுனு ஒரே குழப்பமா இருக்கு.”

ஏழைபாழை நாடுகளில் ஒவ்வொரு வருடமும் உணவினால், நீரினால் பரவும் நோய்கள் லட்சக்கணக்கான மக்களின் உயிரைக் குடித்திருக்கின்றன. நைஜீரியாவில் வசிக்கும் போலா சொல்கிறாள்: மார்க்கெட்டில விற்கிற உணவு பொருள்கள்ல ஈ மொய்க்கும், மழை, காற்று, தூசி எல்லாம் படும். உணவுனால வர்ற நோய்ங்கள பத்தி படிக்கறப்போவும் கேள்விப்படுறப்போவும் பயமா இருக்கும். என் குடும்பம் பாதுகாப்பா இருக்கணும்னு நான் விரும்புறேன்.

உணவினால் வரும் நோயிலிருந்து உங்கள் குடும்பத்தைப் பாதுகாக்க முடியுமா? கனடா நாட்டு உணவு சோதனை மையம் விளக்குகிறது: மளிகை கடையில் கெட்டுப்போன உணவு பொருள் ஏதாவது இருந்தால், அடுத்த நாளே தலைப்புச் செய்தியில் வந்துவிடும். அது நல்லதுதான். ஆனால், ஜாக்கிரதையாக இல்லாவிட்டால் வீட்டு சமையற்கட்டில் தயாரிக்கும் உணவுகூட பாதுகாப்பற்றதாய் ஆகிவிட வாய்ப்பிருக்கிறது என்பதைப் பலர் யோசிப்பதில்லை.

உணவினால் பரவும் நோயிலிருந்து உங்கள் குடும்பத்தைப் பாதுகாக்க என்ன செய்யலாம்? நான்கு வழிகளைப் பார்க்கலாம். (g12-E 06)

[பக்கம் 3-ன் பெட்டி]

பாதிக்கப்படுவோர் யார்?

உணவினால் பரவும் நோய்களுக்கு பலிகடா ஆகிறவர்கள் குறிப்பாக...

● ஜந்து வயதிற்கு உட்பட்ட பிள்ளைகள்

● கர்ப்பிணி பெண்கள்

● எழுபது வயதைத் தாண்டியவர்கள்

● நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள்

நீங்களோ உங்களோடு சாப்பிடுபவர்களோ இவற்றில் ஏதாவது ஒரு வகையினராக இருந்தால், நீங்கள் தயாரிக்கிற... பரிமாறுகிற... சாப்பிடுகிற... உணவு பாதுகாப்பானதா என்று கவனமாக இருக்க வேண்டும்.

[படத்திற்கான நன்றி]

Source: நியூ சவுத் வேல்ஸ் ஃபுட் அத்தாரிட்டி, ஆஸ்திரேலியா.