நாடுகளும் மக்களும்
இந்தோனேஷியாவைச் சுற்றிப் பார்க்கலாமா
சுமார் 17,000 தீவுகளால் ஆனது இந்தோனேஷியா. இங்கு வாழ்பவர்கள் மிகவும் சிநேகபான்மையானவர்கள், பொறுமையானவர்கள், பவ்வியமானவர்கள், உபசரிக்கும் குணமுள்ளவர்கள்.
உணவுப் பழக்கம்: இந்தோனேஷியர்கள் பொதுவாக சாதத்தோடு காரசாரமான கறி வகைகளைச் சாப்பிடுகிறார்கள்; பழ வகைகளையும் சாப்பிடுகிறார்கள். சில பகுதிகளில், பாய் போட்டு உட்கார்ந்து, சாதத்தைக் கையால் எடுத்து மற்ற உணவு வகைகளில் தொட்டுச் சாப்பிடுகிறார்கள். இப்படிச் சாப்பிடும்போதுதான் அதிக ருசி என்கின்றனர் அவர்களில் அநேகர்.
இந்தோனேஷியர்கள் கலைப் பிரியர்கள்; நடனம், இசை என்றால் அவர்களுக்குக் கொள்ளை ஆசை. ஆங்க்லாங் என்பது அவர்களுடைய பிரபல இசைக் கருவி; அது மூங்கில் குழல்கள் பொருத்தப்பட்ட ஒரு சட்டம். ஆட்டி அசைக்கப்படும்போது வித்தியாசமான ஒலியை எழுப்பும் விதத்தில் அவை ஒவ்வொன்றும் ட்யூன் செய்யப்படுகின்றன. எனவே, ஓர் இசையை வாசிக்க வேண்டுமானால், ஏராளமானோர் ஒன்றிணைந்து சரியான நேரத்தில் தங்கள் தங்கள் ஆங்க்லாங் கருவியை ஆட்டி அசைக்க வேண்டும்.
கி.பி. 15-ஆம் நூற்றாண்டுவரை, இந்து மதமும், பின்னர் புத்த மதமும் இங்கு தழைத்தோங்கியது. ஆனால், 16-ஆம் நூற்றாண்டுக்குள், இஸ்லாம் கால்பதித்தது. ஐரோப்பியர்கள் நறுமணப்
பொருள்களைத் தேடிக்கொண்டு அதே நூற்றாண்டில் வந்தபோது கிறிஸ்தவமண்டல மதப்பிரிவுகள் இங்கு நுழைந்தன.பைபிள் கல்விபுகட்டும் வேலைக்குப் பேர்போன யெகோவாவின் சாட்சிகள் 1931 முதல் இங்கு ஊழியம் செய்துவருகின்றனர். தற்போது 22,000-த்திற்கும் அதிகமான சாட்சிகள் இங்கு உள்ளனர். காதுகேளாதோருக்கும் நற்செய்தியை அறிவிக்கிற அவர்கள் சமீபத்தில் இயேசுவின் நினைவுநாள் அனுசரிப்பை சைகை மொழியில் நடத்தியபோது, 500-க்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர். (g13-E 04)
பஹாஸா இந்தோனேஷியா எனவும் அழைக்கப்படுகிற இந்தோனேஷியா மொழி உட்பட 98 மொழிகளில் விழித்தெழு! பிரசுரிக்கப்படுகிறது