Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

 அட்டைப்பட கட்டுரை | சோதனைகள் இடியாய் தாக்கும்போது...

ஆரோக்கியத்தை இழக்கும்போது...

ஆரோக்கியத்தை இழக்கும்போது...

அர்ஜென்டினாவைச் சேர்ந்த மேபல் எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பார். அவர் ஒரு ஃபிசியோதெரபிஸ்ட். 2007-ல் அவருடைய வாழ்க்கை தலைகீழாக மாறியது. திடீரென்று, அவர் களைப்பாக உணர ஆரம்பித்தார், தினமும் தலைவலியால் அவதிப்பட்டார். மேபல் சொல்கிறார்: “நான் போகாத டாக்டர் இல்ல, சாப்பிடாத மருந்தில்ல. இருந்தாலும் என் உடம்பு சரியாகவே இல்லை. கடைசியா எம்.ஆர்.ஐ (MRI) ஸ்கேன் எடுத்தேன். அப்போதான் என் மூளையில ஒரு கட்டி இருந்தது தெரிய வந்துச்சு. என்னால அத தாங்கிக்கவே முடியல. இத்தனை நாளா எனக்கு இந்த கட்டி இருந்தது தெரியாம போச்சேன்னு நினைச்சு கவலைப்பட்டேன்.”

அவர் தொடர்ந்து சொல்கிறார்: “ஆப்ரேஷனுக்கு அப்புறம் நான் ரொம்ப கஷ்டப்பட்டேன். ஆப்ரேஷன் முடிஞ்சு கண்ணை திறந்தப்போ என்னால கொஞ்சம்கூட அசைய முடியல, மேலேயே பார்த்துட்டு இருந்தேன். ஆப்ரேஷனுக்கு முன்னாடி நான் ரொம்ப சுறுசுறுப்பா இருந்தேன்; ஆனா, இப்போ ஒன்னுமே செய்ய முடியல. ஐசியு-ல இருந்தப்போ எனக்கு பைத்தியம் பிடிக்கிற மாதிரி இருந்தது. அங்கிருந்த அலாரம் சத்தம், மெஷின் சத்தம், மத்த நோயாளிங்க அழுவுற சத்தம் மட்டும்தான் எனக்கு கேட்டுச்சு. என்னை சுத்தியிருந்தவங்க எல்லாரும் வலியிலயும் வேதனையிலயும் தவிச்சுட்டு இருந்தத என்னால உணர முடிஞ்சுது.”

“இப்போ நான் ஓரளவுக்கு குணமாயிட்டேன். யாரோட உதவியும் இல்லாம நடக்க முடியுது. சில சமயத்துல தனியா வெளில போயிட்டு வர முடியுது. இருந்தாலும், என் கண்பார்வை இன்னும் சரியாகல. என்னால எதையும் தெளிவா பாக்க முடியல. தசைகளும் (muscles) சரியா வேலை செய்றதில்லை.”

எப்படிச் சமாளிப்பது?

நம்பிக்கையாக இருங்கள். “மகிழ்ச்சி என்பது நல்ல மருந்தைப் போன்றது. ஆனால் துக்கமோ நோயைப் போன்றது” என்று பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 17:22 ஈஸி டு ரீட் வர்ஷன்) மேபல் சொல்கிறார்: “நான் கொஞ்சம் கொஞ்சமா குணமாயிட்டு வந்தேன். ஆனா, உடற்பயிற்சி செய்யும்போது பயங்கரமா வலிக்கும். அதனால, உடற்பயிற்சி செய்றத விட்டுடலாம்னு தோணும். என்கிட்ட வந்த நோயாளிங்ககூட இப்படித்தான் கஷ்டப்பட்டாங்க. இருந்தாலும், உடம்பு நல்லாயிடும் என்ற நம்பிக்கையோட முயற்சி செஞ்சேன்.”

நல்ல விஷயங்களையே யோசித்துப் பாருங்கள். மேபல் சொல்கிறார்: “பைபிள் படிச்சதுலயிருந்து இந்த கஷ்டம் எல்லாம் ஏன் வருதுன்னு தெரிஞ்சிக்கிட்டேன். அதோட, சீக்கிரத்துல இந்த கஷ்டம் எல்லாம் இல்லாத காலம் வரும்னு தெரிஞ்சுகிட்டேன்.” *

கடவுளுக்கு உங்கள்மீது அக்கறை இருக்கிறது என்பதை மறந்துவிடாதீர்கள். (1 பேதுரு 5:7) மேபல் இப்படிச் சொல்கிறார்: “‘நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்’-ன்னு ஏசாயா 41:10 சொல்லுது. இந்த வசனம் எவ்ளோ உண்மைனு ஆப்ரேஷன் தியேட்டர்குள்ள போனப்போ புரிஞ்சிக்கிட்டேன். என்கூட யெகோவா தேவன் இருக்கிறதுனால, நான் எதை பத்தியும் கவலைப்படல.”

உங்களுக்குத் தெரியுமா? வியாதியே இல்லாத காலம் வரப்போகிறது என்று பைபிள் சொல்கிறது.—ஏசாயா 33:24; 35:5, 6. (g14-E 07)

^ பாரா. 8 இதைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? புத்தகத்தில் அதிகாரம் 11-ஐ பாருங்கள்.