Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஆளும் குழுவின் புதிய அங்கத்தினர்கள்

ஆளும் குழுவின் புதிய அங்கத்தினர்கள்

ஆளும் குழுவின் புதிய அங்கத்தினர்கள்

உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி ஆஃப் பென்ஸில்வேனியாவின் வருடாந்தர கூட்டம் 1999, அக்டோபர் 2, சனிக்கிழமையன்று நடந்தது. இன்ப அதிர்ச்சி தரும் ஓர் அறிவிப்போடு அந்தக் கூட்டம் முடிவுற்றது. 10,594 பேர் டெலிஃபோன் மூலமாகவோ அல்லது நேரிலோ அக்கூட்டத்தில் ஆஜராயிருந்தனர். யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும் குழுவில் புதிதாக நான்கு அங்கத்தினர்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றனர் என்ற அறிவிப்பைக் கேட்டு கிளர்ச்சி அடைந்தனர். புதிய உறுப்பினர்கள் நால்வருமே அபிஷேகம் பண்ணப்பட்டவர்கள். சாமுவேல் எஃப். ஹெர்ட்; எம். ஸ்டீவன் லெட்; கை ஹெச். பியர்ஸ்; டேவிட் ஹெச். ஸ்பிளேன் என்பவர்களே அந்நால்வர்.

சாமுவேல் ஹெர்ட் 1958-⁠ல் பயனியர் ஊழியத்தை ஆரம்பித்தார். 1965-1997 வரை, வட்டார மற்றும் மாவட்ட கண்காணியாக சேவை செய்தார். பிறகு, அவரும் அவருடைய மனைவி க்ளோரியாவும் ஐக்கிய மாகாணங்களின் பெத்தேல் குடும்பத்தின் பாகமாக சேவை புரிந்து வந்திருக்கின்றனர். அங்கே, சகோதரர் ஹெர்ட் ஊழியம் சம்பந்தப்பட்ட வேலைகளை கண்காணிக்கும் பிரிவில் (Service Depertment) சேவை செய்து வந்திருக்கிறார். ஊழியக் குழுவிற்கு (Service Committee) உதவியாளராகவும் பணி புரிந்துள்ளார்.

ஸ்டீவன் லெட், பயனியர் ஊழியத்தை 1966, டிசம்பரில் ஆரம்பித்தார். 1967 முதல் 1971 வரையாக, ஐக்கிய மாகாணங்களிலுள்ள பெத்தேலில் சேவை செய்தார். 1971, அக்டோபரில் சூசனை மணந்தார். பின், விசேஷ பயனியர் ஊழியத்தை ஆரம்பித்தார். 1979-1998, வட்டார கண்காணியாக ஊழியம் செய்தார். 1998, ஏப்ரல் முதல், அவரும் அவரது மனைவி சூசனும் ஐக்கிய மாகாணங்களின் பெத்தேலில் சேவை புரிந்துள்ளனர். அங்கே, ஊழியப் பிரிவில் சேவை செய்திருக்கிறார். போதிக்கும் குழுவிற்கு (Teaching Committee) உதவியாளராகவும் சேவை செய்துள்ளார்.

கை பியர்ஸ் ஒரு குடும்பஸ்தர். 1982, ஏப்ரலில் அவரும் அவரது மனைவி பென்னியும் பயனியர் ஊழியத்தை ஆரம்பித்தனர். 1986 முதல் 1997 வரை, வட்டார கண்காணியாக ஊழியம் செய்தார். 1997-⁠ல், இருவரும் புரூக்ளின் பெத்தேல் குடும்பத்தினருள் ஒருவரானார்கள். சகோதரர் பியர்ஸ், அலுவலர் ஆலோசனைக் குழு (Personnel Committee) உதவியாளராக சேவை செய்துள்ளார்.

டேவிட் ஸ்பிளேன் பயனியர் ஊழியத்தை ஆரம்பித்தது 1963 செப்டம்பரில். இவர் 42-வது கிலியட் பள்ளியின் பட்டதாரி. ஆப்பிரிக்காவிலுள்ள செனகலில் மிஷனரியாக ஊழியம் செய்தார். பிறகு, 19 வருடங்கள் கனடாவில் வட்டார ஊழியம் செய்தார். 1990 முதல் அவரும் அவரது மனைவி லின்டாவும் ஐக்கிய மாகாணங்களின் பெத்தேலில் சேவை புரிந்திருக்கின்றனர். சகோதரர் ஸ்பிளேன் ஊழியம் மற்றும் எழுத்துத் துறையில் சேவை செய்துள்ளார். 1998 முதல் எழுதும் குழுவில் (Writing Committee) உதவியாளராக சேவை செய்துள்ளார்.

இந்த புதிய நான்கு அங்கத்தினர்களையும் சேர்த்து, இப்போது ஆளும் குழுவில் உள்ளவர்கள்: சி. டபிள்யூ. பார்பர், ஜே. இ. பார், எம். ஜி. ஹென்ஷல், ஜி. லாஷ், டி. ஜேரக்ஸ், கே. எஃப். க்ளேன், ஏ. டி. ஷ்ரோடர், எல். ஏ. ஸ்விங்கில், டி. ஸிட்லிக். இப்போது விரிவாக்கப்பட்டுள்ள இந்த ஆளும் குழுவினர், உலகம் முழுவதிலும் உள்ள கடவுளுடைய மக்களின் வேலைகளை கண்காணிப்பதிலும் அவர்களுடைய ஆவிக்குரிய தேவைகளை பூர்த்தி செய்வதிலும் தங்கள் சேவையை தொடருவார்கள். இந்த வேலையில் மும்முரமாக ஈடுபடும் இவர்களை யெகோவா தொடர்ந்து பலப்படுத்தி ஆசீர்வதிப்பாராக. இதுவே அனைவரது மனமார்ந்த ஜெபம்.