Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இன்று கடவுளுடைய ஆவி எவ்வாறு செயல்படுகிறது?

இன்று கடவுளுடைய ஆவி எவ்வாறு செயல்படுகிறது?

இன்று கடவுளுடைய ஆவி எவ்வாறு செயல்படுகிறது?

அவன் தாயின் மடியில் இருக்கும்போதே முடமாக இருந்தான். தேவாலயத்தில் அலங்கார வாசல் என்றழைக்கப்பட்ட வாசலில், வந்துபோவோரிடம் கையேந்தியிருப்பதே அவனின் அன்றாட வாழ்க்கை. முடவனான இந்த பிச்சைக்காரனுக்கு ஒரு நாள் மிக அதிக மதிப்பு வாய்ந்த ஒன்று தானமாக கிடைத்தது. ஆம் அவன் ஊனம் சொஸ்தமாக்கப்பட்டது!—அப்போஸ்தலர் 3:2-8.

அப்போஸ்தலர்களாகிய பேதுருவும் யோவானும், ‘அவனைப் பிடித்துத் தூக்கிவிட்டபோது’ “அவன் பாதங்களும் கணுக்களும் பலங்கொண்டன”; என்றபோதிலும், அந்தச் சுகப்படுத்துதலுக்கான புகழை தாங்கள் ஏற்கவில்லை. ஏன்? பேதுருவே இவ்வாறு விளக்கினார்: “இஸ்ரவேலரே, இதைக் குறித்து நீங்கள் ஆச்சரியப்படுகிறதென்ன? நாங்கள் சுயசக்தியினாலாவது சுயபக்தியினாலாவது இவனை நடக்கப்பண்ணினோமென்று நீங்கள் எங்களை உற்றுப் பார்க்கிறதென்ன?” நிச்சயமாகவே, தங்கள் பலத்தினால் அல்ல, கடவுளுடைய பரிசுத்த ஆவியினாலேயே அத்தகைய ஒரு காரியம் நடக்க முடியும் என்பதை பேதுருவும் யோவானும் உணர்ந்தார்கள்.—அப்போஸ்தலர் 3:7-16; 4:29-31.

அந்தச் சமயத்தில் புதியதான கிறிஸ்தவ சபை, கடவுளுடைய ஆதரவை பெற்றிருந்தது என்பதை காட்டுவதற்கே அத்தகைய ‘பலத்த செய்கைகள்’ அருளப்பட்டன. (எபிரெயர் 2:4) ஆனால், அவற்றின் நோக்கத்தை நிறைவேற்றிய பின் அவை “ஒழிந்துபோம்” என்று அப்போஸ்தலன் பவுல் சொன்னார். a (1 கொரிந்தியர் 13:8) ஆகவே, இப்போது, உண்மையான கிறிஸ்தவ சபையில், கடவுளால் கட்டளையிடப்படும் எந்தச் சுகப்படுத்துதல்களையோ, தீர்க்கதரிசன செய்திகளையோ, பிசாசுகளைத் துரத்துவதையோ நாம் காண்கிறதில்லை.

எனினும், கடவுளுடைய பரிசுத்த ஆவி இப்பொழுதெல்லாம் கிரியை செய்கிறதில்லை என்று அர்த்தமாகுமா? நிச்சயமாகவே இல்லை! கடவுளுடைய ஆவி முதல் நூற்றாண்டில் செயல்பட்டதும் நம்முடைய நாளில் செயல்படுவதும் எப்படி என்பதைப் பற்றிய சில வழிகளை நாம் கவனிக்கலாம்.

‘சத்திய ஆவி’

கடவுளுடைய பரிசுத்த ஆவி செயல்படும் ஒரு விதமானது, சத்தியங்களைத் தெரிவிப்பதும், தெளிவிப்பதும், வெளிப்படுத்துவதுமாகும். தாம் மரிப்பதற்கு முன்பு இயேசு தம்முடைய சீஷர்களிடம் இவ்வாறு சொன்னார்:இன்னும் அநேகங்காரியங்களை நான் உங்களுக்குச் சொல்ல வேண்டியதாயிருக்கிறது, அவைகளை நீங்கள் இப்பொழுது தாங்கமாட்டீர்கள். சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்.”யோவான் 16:12, 13.

பொ.ச. 33-ன் பெந்தெகொஸ்தேயின்போது “சத்திய ஆவி” ஊற்றப்பட்டது. அப்போது எருசலேமில் ஒரு மேலறையிலே கூடியிருந்த ஏறக்குறைய 120 சீஷர்கள், பரிசுத்த ஆவியால் முழுக்காட்டப்பட்டார்கள். (அப்போஸ்தலர் 2:1-4) அந்த வருடாந்தர பண்டிகைக்காக கூடிவந்திருந்தவர்களில் அப்போஸ்தலன் பேதுருவும் இருந்தார். பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டவராய் பேதுரு எழுந்து “நின்று,” இயேசுவைப் பற்றிய சில சத்தியங்களை விரிவாக விளக்கினார் அல்லது தெளிவாக்கினார். உதாரணமாக, ‘நசரேயனாகிய இயேசு’ எவ்வாறு ‘கடவுளின் வலது கரத்திற்கு உயர்த்தப்பட்டார்’ என்பதை விரிவாக எடுத்துக் கூறினார். (அப்போஸ்தலர் 2:14, 22, 33) மேலும், தனக்குச் செவிகொடுத்துக் கேட்டுக்கொண்டிருந்த யூதரை நோக்கி இவ்வாறு தைரியமாய்ச் சொல்லவும் கடவுளுடைய ஆவி பேதுருவை உந்துவித்தது: “நீங்கள் கழுமரத்தில் அறைந்த இந்த இயேசுவையே கடவுள் ஆண்டவரும் கிறிஸ்துவுமாக்கினார் என்று இஸ்ரவேல் வீட்டார் அனைவரும் நிச்சயமாய் அறியக்கடவர்கள்.” (அப்போஸ்தலர் 2:36, NW) ஆவியால் ஏவப்பட்ட பேதுருவினுடைய செய்தியின் பலனாக, ஏறக்குறைய மூவாயிரம் பேர் முழு மனதுடன் ‘வார்த்தையை ஏற்றுக்கொண்டு’ முழுக்காட்டப்பட்டார்கள். இவ்வாறு, கடவுளுடைய பரிசுத்த ஆவி, அவர்களைச் சத்தியத்திற்குள் வழிநடத்துவதற்கு உதவியது.—அப்போஸ்தலர் 2:37-41.

கடவுளுடைய பரிசுத்த ஆவி, போதிக்கும் வேலையைச் செய்ததோடு, நினைப்பூட்டும் வேலையையும் செய்தது. இயேசு சொன்னார்: “என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்.”—யோவான் 14:26.

போதிக்கும் வேலையை பரிசுத்த ஆவி எவ்வாறு செய்தது? சீஷர்கள் இயேசுவினிடமிருந்து முன்பு கேட்டிருந்தவையும் ஆனால் முழுமையாக புரிந்திராதவையுமான காரியங்களைத் தெளிவாக புரிந்துகொள்ளும்படி கடவுளின் ஆவி அவர்களுடைய மனதைத் திறந்தது. உதாரணமாக, இயேசு தம்முடைய விசாரணையின்போது, யூதேயாவின் ரோம தேசாதிபதியாகிய பொந்தியு பிலாத்துவினிடம்: “என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல” என்று சொன்னதை அப்போஸ்தலர்கள் அறிந்திருந்தார்கள். எனினும், 40 நாட்களுக்குப் பிறகு, இயேசு பரலோகத்திற்கு எழும்பிச் செல்லும் சமயத்தில், அந்த ராஜ்யம் இங்கே பூமியில் ஸ்தாபிக்கப்படும் என்ற தவறான கருத்தே அப்போஸ்தலர்களுக்கு இன்னும் இருந்தது. (யோவான் 18:36; அப்போஸ்தலர் 1:6) பொ.ச. 33-ன் பெந்தெகொஸ்தேயில் கடவுளுடைய பரிசுத்த ஆவி ஊற்றப்பட்டது வரையில், அப்போஸ்தலர்கள் இயேசுவினுடைய வார்த்தைகளின் அர்த்தத்தை முழுமையாக புரிந்துகொள்ள இயலவில்லை என தெரிகிறது.

இயேசுவின் பல்வேறு போதகங்களை திரும்பவும் மனதிற்குக் கொண்டுவருவதன் மூலம், கடவுளுடைய ஆவி நினைப்பூட்டும் வேலையையும் செய்தது. உதாரணமாக, கிறிஸ்துவின் மரணத்தையும் உயிர்த்தெழுதலையும் பற்றிய தீர்க்கதரிசனங்களுக்கான புதிய அர்த்தம் பரிசுத்த ஆவியின் உதவியினால்தான் உதித்தது. (மத்தேயு 16:21; யோவான் 12:16) இயேசுவின் போதகங்களை திரும்பவும் நினைவுக்குக் கொண்டுவந்ததால், அரசர்கள், நியாயாதிபதிகள், மதத் தலைவர்கள் ஆகியோருக்கு முன்பு, அப்போஸ்தலர்கள் தங்கள் நிலைநிற்கையின் சார்பில் தைரியத்துடன் வழக்காடுவதற்கு உதவிசெய்தது.—மாற்கு 13:9-11; அப்போஸ்தலர் 4:5-20.

கூடுதலாக, ஊழியத்தில், பலன்தரும் பிராந்தியங்களுக்கு பூர்வ கிறிஸ்தவர்களை வழிநடத்தவும் கடவுளுடைய பரிசுத்த ஆவி உதவிசெய்தது. (அப்போஸ்தலர் 16:6-10) மேலும், எல்லா மனிதரின் நன்மைக்காகவும், கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளை எழுதுவதில் பங்குகொள்ளும்படியும் பூர்வக் கிறிஸ்தவர்களைக் கடவுளுடைய ஆவி ஏவியது. (2 தீமோத்தேயு 3:16) ஆகவே, முதல் நூற்றாண்டில் பரிசுத்த ஆவி, பல்வேறு வழிகளில் செயல்பட்டதென்பது தெளிவாக இருக்கிறது. அற்புதங்களை நடப்பிப்பதற்கு மாத்திரமே அது அருளப்படவில்லை.

பரிசுத்த ஆவி, நம்முடைய நாளில்

அவ்வாறே நம்முடைய நாளில் பரிசுத்த ஆவி, உண்மை கிறிஸ்தவர்களின் சார்பாக செயல்பட்டு வருகிறது. இது, 19-வது நூற்றாண்டின் பிற்பகுதியின்போது, அமெரிக்காவைச் சேர்ந்த பென்ஸில்வேனியா, அலிகெனியில் இருந்த பைபிள் மாணாக்கரின் ஒரு சிறிய தொகுதியினருக்குத் தெளிவாயிற்று. மிகுந்த அக்கறை கொண்டிருந்த இந்த பைபிள் மாணாக்கர்கள், ‘சத்தியத்தை’ அறிந்துகொள்ளத் துடித்தார்கள்.—யோவான் 8:32; 16:13.

இந்தத் தொகுதியின் ஓர் உறுப்பினராகிய சார்ல்ஸ் டேஸ் ரஸல், வேதப்பூர்வ சத்தியத்திற்காக அவர் நாடித் தேடினதைக் குறித்து இவ்வாறு சொன்னார்: “தடங்கலாக குறுக்கே நிற்கக்கூடிய எந்தத் தப்பெண்ணத்தையும் என் இருதயத்திலிருந்தும் மனதிலிருந்தும் நீக்கி, சரியான புரிந்துகொள்ளுதலுக்கு அவருடைய ஆவியால் வழிநடத்தப்பட உதவி செய்யும்படி ஜெபித்தேன்.” மனத்தாழ்மையுடன் செய்த இந்த ஜெபத்தை கடவுள் கேட்டருளினார்.

ரஸலும் அவருடைய கூட்டாளிகளும் வேதவசனங்களை ஊக்கந்தளராமல் ஆராய்ந்தபோது, பல காரியங்கள் தெளிவாயின. ரஸல் இவ்வாறு விளக்கினார்: “நூற்றாண்டுகளாக, பல்வேறு பிரிவினர்களும் குழுக்களும், பைபிள் கோட்பாடுகளைத் தங்களுக்குள் பிரித்து, மனித யூகங்களையும் தவறான கருத்துக்களையும் அவற்றுடன் இணைத்து ஒன்றாக்கியிருந்ததாக நாங்கள் கண்டோம்.” இதனால், அவர் சொன்னபடி, “சத்தியம் தொலைந்துவிட்டது.” நிச்சயமாகவே, வேதப்பூர்வ சத்தியம், நூற்றாண்டுகளினூடே கிறிஸ்தவமண்டலத்திற்குள் படிப்படியாக பரவிய புறமத போதகங்களின் ஒரு தொகுப்பின்கீழ் அமிழ்ந்து மறைந்தன. ஆனால் ரஸல், சத்தியத்தை அறியவும் யாவரறிய அறிவிக்கவும் திடத்தீர்மானத்துடன் இருந்தார்.

டவுளைத் தவறாக விவரித்த பொய்மத கோட்பாடுகளை ஸயன்ஸ் உவாட்ச் டவர் அண்ட் ஹெரல்ட் ஆஃப் கிரைஸ்ட் பிரசன்ஸ் பத்திரிகையின் வாயிலாக ரஸலும் அவருடைய உடனுழைப்பாளிகளும் தைரியமாக கண்டனம் செய்தார்கள். பொதுவாக மதிக்கப்பட்ட மதக் கொள்கைக்கு நேர்மாறாக, ஆத்துமா அழிவுள்ளது, மரணத்தில் நாம் பிரேதக் குழிக்குச் செல்கிறோம், யெகோவாவே மெய்யான ஒரே கடவுளாயிருப்பதால் திரித்துவத்தின் பாகமானவர் அல்லர் என்று பகுத்துணர்ந்தார்கள்.

எனினும், பொய்ப் போதகங்களை அவ்வாறு வெளியரங்கமாக்கினது, கிறிஸ்தவமண்டல மதகுருக்களுக்குக் கோபமூட்டியிருக்கும் என்பதை நீங்கள் புரிந்திருப்பீர்கள். செல்வாக்குமிகுந்த தங்கள் ஸ்தானங்களை விடாது பற்றியிருக்கும்படி, கத்தோலிக்க மற்றும் புராட்டஸ்டண்ட் குருமார் பலர், ரஸலை கேவலப்படுத்தும்படியான நோக்கத்துடன் போராட்டங்களை நடத்தினார்கள். ஆனால் அவரும் அவருடைய கூட்டாளிகளும் விட்டுக்கொடுக்கவில்லை. திடநம்பிக்கையோடு கடவுளுடைய ஆவியின் வழிநடத்துதலை நாடினார்கள். ரஸல் இவ்வாறு சொன்னார்: “. . . நம்முடைய மீட்பரும், மத்தியஸ்தரும், தலைவருமாகிய இயேசுவின் நிமித்தமாகவும், அவருடைய வேண்டுகோளின்படியும் அனுப்பப்பட்ட பிதாவின் பரிசுத்த ஆவி, நமக்கு போதிக்கும் என்றே கர்த்தர் உறுதியளித்துள்ளார்.” நிச்சயமாகவே பரிசுத்த ஆவி போதித்தது! இந்த நேர்மையான பைபிள் மாணாக்கர்கள், பைபிளிலிருந்து சத்தியத்தின் தூய்மையான தண்ணீரைத் தொடர்ந்து பருகியும் அவற்றை உலகமெங்கும் விரிவாக விநியோகித்தும் வந்தார்கள்.—வெளிப்படுத்துதல் 22:17.

யெகோவாவின் சாட்சிகளுடைய தற்கால அமைப்பு, இப்போது ஒரு நூற்றாண்டுக்கு மேலாக, கடவுளுடைய பரிசுத்த ஆவியின் வழிநடத்துதல்களை ஏற்று செயல்படுகிறது. எப்படியென்றால், யெகோவாவின் ஆவி தங்கள் ஆவிக்குரிய பார்வைக்குப் படிப்படியாய் ஒளியூட்டுகையில், காலத்துக்கேற்றவாறு விஷயங்களை நன்றாய் புரிந்துகொள்ளுவதோடு, அதற்கு தகுந்தவாறு தேவைப்படும் மாற்றங்களையும் செய்கின்றனர்.—நீதிமொழிகள் 4:18.

“எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்”

இயேசு தம்முடைய சீஷர்களிடம் இவ்வாறு சொன்னபோது, கடவுளுடைய பரிசுத்த ஆவியின் இன்னுமொரு வெளிக்காட்டைக் குறிப்பிட்டார்: “பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, . . . பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்.” (அப்போஸ்தலர் 1:8) கடவுளால் நியமிக்கப்பட்ட ஊழியத்தை தம்முடைய சீஷர்கள் செய்வதற்கு, ‘பெலனும்’ ‘பரிசுத்த ஆவியும்’ அருளுவார் என்ற இயேசுவின் வாக்குறுதி இன்றும் பொருந்துகிறது.

ஒரு தொகுதியாக, யெகோவாவின் சாட்சிகள், பிரசங்க ஊழியத்தில் ஈடுபடுகிறவர்களாக பிரசித்தி பெற்றிருக்கிறார்கள். (பெட்டியைக் காண்க.) நிச்சயமாகவே, சத்தியத்தின் செய்தியை 230-க்கும் மேற்பட்ட தேசங்களிலும் தீவுகளிலும் யெகோவாவின் சாட்சிகள் பேசுகிறார்கள். போரால் தாக்கப்பட்டிருக்கும் பகுதிகளில் தங்கள் உயிரையே இழக்க நேரிடும் அபாய நிலை உட்பட, எதுவும் நடக்கலாம் என்ற சூழ்நிலையிலும் அவர்கள் கடவுளுடைய ராஜ்யத்தின் சார்பாக தைரியமாய் பேசுகிறார்கள். கிறிஸ்தவ ஊழியத்திற்கான அவர்களுடைய ஆர்வம், இன்று பரிசுத்த ஆவி செயல்படுகிறது என்பதற்கு பலமான அத்தாட்சியை அளிக்கிறது. அவர்களுடைய முயற்சிகளை யெகோவா தேவன் ஆசீர்வதிக்கிறார் என்பது தெளிவாயிருக்கிறது.

உதாரணமாக, சென்ற ஆண்டில், கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்கு நூறு கோடிக்கும் மேற்பட்ட மணிநேரம் செலவிடப்பட்டது. அதன் பலன்? 3,23,439 பேர் தங்களை கடவுளுக்கு ஒப்புக்கொடுத்திருந்ததை தண்ணீர் முழுக்காட்டுதல் மூலம் அடையாளப்படுத்தினார்கள். கூடுதலாக, புதிதாய் அக்கறை காட்டுவோருடன் 44,33,884 வாராந்தர வீட்டு பைபிள் படிப்புகள் நடத்தப்பட்டன. மொத்தத்தில் 2,46,07,741 புத்தகங்களும், 63,11,62,309 பத்திரிகைகளும், 6,34,95,728 சிற்றேடுகளும் புக்லெட்டுகளும் அளிக்கப்பட்டன. கடவுளுடைய ஆவி செயல்படுகிறது என்பதற்கு எத்தகைய வல்லமைவாய்ந்த அத்தாட்சி!

கடவுளுடைய ஆவியும் நீங்களும்

நற்செய்திக்கு ஒருவர் சாதகமாக பிரதிபலித்து, தன்னுடைய வாழ்க்கையை கடவுளுடைய தராதரங்களுக்கு ஏற்ப மாற்றியமைத்து, மீட்பின் கிரய பலிக்குரிய ஏற்பாட்டில் விசுவாசத்தைக் காட்டுகையில், கடவுளுடன் சுத்தமான நிலைநிற்கைக்கு வழி திறக்கப்படுகிறது. இப்படிப்பட்டவர்களிடம் அப்போஸ்தலன் பவுல், ‘கடவுள் . . . தம்முடைய பரிசுத்த ஆவியை உங்களில் வைக்கிறார்’ என்று சொன்னார்.—1 தெசலோனிக்கேயர் 4:7, 8, NW; 1 கொரிந்தியர் 6:9-11.

கடவுளுடைய ஆவியைப் பெற்றிருந்தால் அநேக நல்ல ஆசீர்வாதங்கள் கிடைக்கும். எப்படிப்பட்ட ஆசீர்வாதங்கள்? கடவுளுடைய ஏவப்பட்ட வார்த்தை இவ்வாறு சொல்லுகிறது: “ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்.” (கலாத்தியர் 5:22, 23) இது ஓர் ஆசீர்வாதம். ஆகையால், நன்மைக்கேதுவாக உந்துவிக்கும் வல்லமைவாய்ந்த ஆற்றலாக இருக்கும் கடவுளுடைய ஆவி, தேவ பண்புகளைக் காட்டும்படி ஒருவருக்கு உதவிசெய்கிறது.

நீங்கள் பைபிளை வாசித்து, கற்றுக்கொண்டவற்றை பொருத்திப் பயன்படுத்தினால் ஞானத்திலும், அறிவிலும், உட்பார்வையிலும், பகுத்துணர்விலும், சிந்திக்கும் திறமையிலும் பெருகும்படி கடவுளுடைய ஆவி உங்களுக்கு உதவும்; இது இன்னொரு ஆசீர்வாதம். மனிதரைப் பார்க்கிலும் கடவுளையே பிரியப்படுத்த அரசர் சாலொமோன் நாடினதால்,மிகுதியான ஞானத்தையும் புத்தியையும், கடற்கரை மணலத்தனையான மனோவிருத்தியையும்” பெற்றார். (1 இராஜாக்கள் 4:29) சாலொமோனுக்கு யெகோவா பரிசுத்த ஆவியைக் கொடுத்தார், நிச்சயமாகவே, இன்று தம்மை பிரியப்படுத்த நாடுவோருக்கும் தம்முடைய பரிசுத்த ஆவியைக் கொடாமல் நிறுத்தி வைக்க மாட்டார்.

சாத்தானையும் அவனுடைய பேய்களையும், இந்தப் பொல்லாத காரிய ஒழுங்குமுறையையும், பரிபூரணத்தை இழந்த தங்கள் மாம்சத்தின் பாவப் போக்குகளையும் எதிர்த்துப் போரிடுவதற்கு கடவுளுடைய பரிசுத்த ஆவி கிறிஸ்தவர்களுக்கு உதவிசெய்வதும் இன்னொரு ஆசீர்வாதமே! இது எப்படி முடியும்? இதற்கு அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு பதிலளிக்கிறார்: “என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு.” (பிலிப்பியர் 4:13) நமக்கு துன்பங்களும் சோதனைகளும் வராமல் பரிசுத்த ஆவி தடுத்துவிடாது; எனினும், அவற்றை சகிக்க உதவிசெய்யும். கடவுளுடைய ஆவியில் நம்பிக்கை வைத்தால், எந்தத் துன்பத்தையும் சோதனையையும் சகிப்பதற்கு, “இயல்புக்கு அப்பாற்பட்ட வல்லமையை” நாம் பெறலாம்.—2 கொரிந்தியர் 4:7; 1 கொரிந்தியர் 10:13; NW.

எல்லா அத்தாட்சியையும் நீங்கள் கவனிக்கையில், இன்று கடவுளுடைய பரிசுத்த ஆவி செயல்படுகிறது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. யெகோவாவின் மகத்தான நோக்கங்களைப் பற்றி சாட்சி கொடுப்பதற்கு, அவருடைய ஆவி, அவருடைய ஊழியர்களை உந்துவிக்கிறது. தொடர்ந்து ஆவிக்குரிய வெளிச்சத்தைப் பிரகாசிக்கச் செய்து, நம் விசுவாசத்தையும் உறுதிப்படுத்தி, நம் சிருஷ்டிகருக்கு உண்மைப் பற்றுறுதியுடன் நிலைத்திருக்க நமக்கு உதவுகிறது. இன்று கடவுள் தம்முடைய உண்மையுள்ள ஊழியர்களுக்குப் பரிசுத்த ஆவியை அருளுவதன்மூலம் தம் வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாய் இருக்கலாம்!

[அடிக்குறிப்புகள்]

a காவற்கோபுரம் (ஆங்கிலம்), ஆகஸ்ட் 15, 1971, பக்கங்கள் 501-5-ல், “ஆவியின் அற்புத வரங்கள் ஏன் நின்றுவிட்டன?” என்ற கட்டுரையைப் பாருங்கள்.

[பக்கம் 10-ன் பெட்டி]

யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி மற்றவர்கள் சொல்பவை

மற்ற சர்ச்சுகள் ஜனங்களை வசீகரித்து இழுக்க, அல்லது ஓரினப்புணர்ச்சி, கற்பழித்தல் போன்ற தற்கால விவாதங்களைக் கையாள ஆலோசகர்களை கூலிக்கு அமர்த்துகின்றன. ஆனால் சாட்சிகளோ மாறிவரும் இவ்வுலகோடு எவ்விதத்திலும் இணங்கிச் செல்வதில்லை. அவர்கள் உலகளவில் இன்னும் தவறாமல் பிரசங்கித்து வருகிறார்கள்.”—தி ஆரஞ்ச் கௌன்டி ரெஜிஸ்டர், ஆரஞ்ச் கௌன்டி, கலிபோர்னியா, அ.ஐ.மா.

“ தங்கள் விசுவாசத்தைப் பரப்புவதில், யெகோவாவின் சாட்சிகளைப்போல் . . . அவ்வளவு ஆர்வம் காட்டும் தொகுதிகள் சொற்பமே.”—தி ரிப்பப்ளிக், கொலம்பஸ், இன்டியானா, அ.ஐ.மா.

“ பைபிள் நியமங்களைப் பொருத்திப் பயன்படுத்தி, ‘நற்செய்தியுடன்’ வாசல் வாசலாக செல்பவர்கள் அவர்கள் மட்டுமே.”—ஸேக்கி லிட்டெரேட்ஸ்கியா, போலந்து.

“ இதுவரை அறியப்பட்டுள்ளவற்றிலேயே மிகப் பெரியதான இந்தப் பிரசங்க ஏற்பாட்டில், யெகோவாவின் சாட்சிகள், யெகோவாவின் செய்தியை உலகமுழுவதும் கொண்டுசென்றிருக்கிறார்கள்.”—நியூஸ்-அப்ஸர்வர், டமாக்வா, பென்ஸில்வேனியா, அ.ஐ.மா.

[பக்கம் 9-ன் படங்கள்]

கடவுளுடைய பரிசுத்த ஆவி நமக்கு ஆன்மீக அறிவொளியூட்டுகிறது,

. . . நாம் சிறந்த கிறிஸ்தவ பண்புகளை வளர்ப்பதற்கு உதவுகிறது,

. . . உலகெங்கும் செய்துவரும் பிரசங்க வேலையில் நமக்கு ஆதரவளிக்கிறது