Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்

வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்

வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்

இயேசுவை விலையுயர்ந்த தைலத்தால் அபிஷேகம் செய்தபோது குறைகூறியதாக மூன்று சுவிசேஷங்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. குறைகூறியது யூதாஸ் மட்டுமா அல்லது மற்ற சீஷர்களுமா?

மத்தேயு, மாற்கு, யோவான் ஆகிய சுவிசேஷங்களில் இந்த சம்பவம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த குறை சொல்லும் விஷயத்தில் யூதாஸே முன்நின்றதாக தெரிகிறது. அதன் பிறகு அவருக்கு ஆதரவாக மற்ற சில சீஷர்களும் அவருடன் சேர்ந்து கொண்டனர். நம்மிடம் நான்கு சுவிசேஷங்கள் இருப்பதற்கு நாம் ஏன் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பதை இந்த சம்பவம் எடுத்துக்காட்டுகிறது. இவற்றில் ஒவ்வொரு எழுத்தாளர் எழுதிய விஷயமும் துல்லியமானதே, ஆனால் எல்லா சுவிசேஷங்களும் அதே விவரங்களை கொடுப்பதில்லை. இப்படிப்பட்ட இணையான பதிவுகளை நாம் எடுத்துப் பார்ப்பது, அநேக சம்பவங்களைப் பற்றிய தகவல்களை விளக்கமாகவும் முழுமையாகவும் தெரிந்துகொள்ள உதவுகிறது.

மத்தேயு 26:6-13-ன் பதிவு, பெத்தானியாவில் குஷ்டரோகியாயிருந்த சீமோனின் வீட்டில் நடந்த சம்பவத்தை பற்றிய தகவலை கொடுக்கிறது. ஆனால் நறுமண தைலத்தை இயேசுவினுடைய தலையின் மேல் ஊற்றிய அந்த பெண்ணின் பெயரை குறிப்பிடுவதில்லை. ‘சீஷர்கள் அதைக் கண்டு விசனமடைந்து,’ அந்த தைலத்தை விற்று பணத்தை ஏழைகளுக்கு கொடுத்து உதவியிருக்கலாமே என குறை சொல்வதாக மத்தேயு பதிவு செய்கிறார்.

மாற்குவினுடைய பதிவில், இவற்றுள் பெரும்பாலான தகவல்கள் காணப்படுகின்றன. அத்துடன், அந்த ஸ்திரீ, பரணியை அல்லது புட்டியை கொண்டு வந்து, உடைத்தாள் என்ற கூடுதல் தகவலை கொடுக்கிறார். அந்த பரணியில், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது போன்ற “நளதம் என்னும் உத்தம” நறுமண தைலம் இருந்தது. குறை சொல்லும் விஷயத்தில், இந்த செயலைக் குறித்து ‘சிலர் தங்களுக்குள்ளே விசனமடைந்து . . . அவளைக்குறித்து முறுமுறுத்தார்கள்’ என மாற்கு பதிவு செய்கிறார். (மாற்கு 14:3-9) ஆக இந்த இரண்டு பதிவுகளுமே, குறை சொன்ன விஷயத்தில் ஒன்றிற்கும் மேற்பட்ட சீஷர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பதை காண்பிக்கின்றன. இருப்பினும், இது எவ்வாறு துவங்கியது?

இதற்கு கண்கண்ட சாட்சியான யோவான், இது சம்பந்தமான கூடுதல் தகவல்களை கொடுக்கிறார். அதாவது அங்கிருந்த அந்தப் பெண்ணைப் பற்றிய தகவலையும் கொடுக்கிறார். அவள் மார்த்தாள், லாசருவின் சகோதரியான மரியாள். யோவான் கொடுக்கும் இந்த தகவல்கள் முரண்பாடுள்ளவையாக அல்லாமல் நமக்கு கூடுதல் தகவல்களை கொடுக்கும் அருமையான பதிவாகவே எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்: ‘அதை இயேசுவின் பாதங்களில் பூசி, தன் தலைமயிரால் அவருடைய பாதங்களைத் துடைத்தாள்.’ இதைப் பற்றிய பதிவுகள் எல்லாவற்றையும் இணைத்துப் பார்க்கும்போது, மரியாள் “களங்கமில்லாத நளதம்” என யோவான் உறுதிசெய்யும் அந்த தைலத்தை, இயேசுவின் தலையிலும் பாதங்களிலும் பூசியிருக்க வேண்டும் என்பது தெரிகிறது. யோவான், இயேசுவுடன் நெருக்கமாக இருந்ததால், இயேசு அவமதிக்கப்படுவதை அவரால் சகித்துக்கொள்ள முடியவில்லை. அதனால்தான் அவர் சொன்ன வார்த்தைகளை நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: “அவருடைய சீஷரில் ஒருவனும் அவரைக் காட்டிக்கொடுக்கப் போகிறவனுமாகிய சீமோனுடைய குமாரனான யூதாஸ்காரியோத்து: இந்தத் தைலத்தை முந்நூறு பணத்துக்கு விற்று, தரித்திரருக்குக் கொடாமல் போனதென்ன என்றான்.”யோவான் 12:2-8.

ஆம், யூதாஸ் ‘சீஷரில் ஒருவனாக’ இருந்தான். ஆனால், அந்த ஸ்தானத்தில் இருந்த ஒருவன் இயேசுவை காட்டிக்கொடுக்க திட்டமிட்டதைக் குறித்து யோவான் எவ்வளவு எரிச்சலடைந்திருப்பார் என்பதை உங்களால் உணர முடிகிறது அல்லவா! டாக்டர் சி. ஹோவெர்ட் மத்தனீ என்ற மொழிபெயர்ப்பாளரின் பிரகாரம் யோவான் 12:4-ல் காணப்படும், காட்டிக்கொடுக்கப் ‘போகிறவன்’ என்ற வார்த்தைக்கான கிரேக்க பதத்திற்குரிய இலக்கண அர்த்தம், ஒரு தொடர்ச்சியான செயலை குறிக்கிறது. ஆக, இயேசுவை யூதாஸ் காட்டிக்கொடுத்தது, அந்த கணநேரத்தில் திடீரென தூண்டப்பட்டு செய்த ஒரு செயல் அல்ல, ஆனால் வெகு நாட்கள் இதைக் குறித்து சிந்தித்து திட்டமிட்டு செய்த ஒரு சதி வேலையாகும் என்பதை இது காண்பிக்கிறது. அத்துடன், யூதாஸ் “தரித்திரரைக்குறித்துக் கவலைப்பட்டு இப்படிச் சொல்லாமல், அவன் திருடனானபடியினாலும், பணப்பையை வைத்துக்கொண்டு அதிலே போடப்பட்டதைச் சுமக்கிறவனானபடியினாலும் இப்படிச் சொன்னான்” என கூடுதலான தகவல்களையும் யோவான் கொடுக்கிறார்.

ஆக அந்த விலையேறப்பெற்ற தைலத்தை விற்று அந்த பணத்தை பணப்பெட்டியில் போட்டிருந்தால், தான் அதிலிருந்து அதிக பணத்தை திருடியிருக்கலாம் என்ற எண்ணத்திலேயே திருடனாகிய யூதாஸ் இந்த வாதத்தை துவங்கியிருக்க வேண்டும் என்பது தர்க்கரீதியாக தெரிகிறது. இவ்வாறு யூதாஸ் குறை சொன்னவுடன், மற்ற சில அப்போஸ்தலர்கள் அவன் சொன்னது நியாயம் என நினைத்து அவனுக்கு ஒத்தூதியிருக்க வேண்டும். இருப்பினும், இவ்வாறு குறை சொன்னதற்கு யூதாஸே முக்கிய காரணம்.