Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

108-வது கிலியட் வகுப்பு பரிசுத்த சேவைசெய்ய உந்துவித்தது

108-வது கிலியட் வகுப்பு பரிசுத்த சேவைசெய்ய உந்துவித்தது

108-வது கிலியட் வகுப்பு பரிசுத்த சேவைசெய்ய உந்துவித்தது

“பரிசுத்த சேவை.” கடவுளை வணங்குவதை குறிப்பதற்கு பைபிள் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தையே இது. இது கிரேக்க வார்த்தையிலிருந்து வருகிறது, கடவுளுக்கு சேவை செய்வதைக் குறிக்கிறது. (ரோமர் 9:4) 108-வது உவாட்ச்டவர் கிலியட் பைபிள் பள்ளி பட்டமளிப்பு நிகழ்ச்சியை 5,562 பேர் அனுபவித்து மகிழ்ந்தார்கள். யெகோவா தேவனுக்கு ஏற்கத்தகுந்த பரிசுத்த சேவை செய்ய உதவும் நடைமுறை ஆலோசனைகள் பட்டதாரிகளுக்கு வழங்கப்பட்டதை அனைவரும் செவிகொடுத்துக் கேட்டார்கள். a

யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும் குழுவின் அங்கத்தினராகிய தியோடர் ஸாரக்ஸ் நிகழ்ச்சிநிரலுக்கு தலைமை தாங்கினார். “நம் பிதாவின் பெயர்” என்ற தலைப்புடைய 52-ம் பாடலுடன் இந்த நிகழ்ச்சிநிரல் இனிதே ஆரம்பமானது. “பரிசுத்தப் படுத்துவோம்,/ஈடற்ற உம் பெயரை” என்பதே இந்தப் பாடலின் இரண்டாவது வரி. மாணவர்கள் தங்களுடைய பயிற்றுவிப்பை மிஷனரி சேவையில் அர்ப்பணிப்பதற்கான இருதயப்பூர்வ ஆசையை இந்த வரி வெளிப்படுத்தியது. (10 நாடுகளிலிருந்து வந்த) இவர்கள் 17 நாடுகளில் மிஷனரி சேவை செய்வார்கள்.

சகோதரர் ஸாரக்ஸ் தன்னுடைய அறிமுகத்தில், வெளி நாடுகளில் சேவை செய்வதற்கு மாணவர்களை தயார்படுத்திய ஐந்து மாத தீவிர பைபிள் படிப்பிற்கு கவனத்தைத் திருப்பினார். ‘அதிமுக்கியமான காரியங்களை நிச்சயப்படுத்திக்கொள்வதற்கு’ இது அவர்களுக்கு உதவி செய்திருக்கிறது, அதாவது தாங்கள் முன்பு கற்ற விஷயங்களை கடவுளுடைய வார்த்தையின் வெளிச்சத்தில் ஆராய்ந்து பார்ப்பதற்கும் ‘நலமானதைப் பற்றிக்கொள்வதற்கும்’ உதவி செய்திருக்கிறது. (1 தெசலோனிக்கேயர் 5:21) யெகோவாவுக்கும் அவருடைய வார்த்தைக்கும் உண்மைத்தன்மையோடு இருப்பதற்கும் மிஷனரி சேவையில் உறுதியோடு நிலைத்திருப்பதற்கும் அவர்களை உற்சாகப்படுத்தினார். இவை அனைத்தையும் செய்வதற்கு எது அவர்களுக்கு உதவிசெய்யும்?

பரிசுத்த சேவை செய்ய நடைமுறை ஆலோசனை

“நியாயத்தன்மை என்ற பரீட்சையில் நீங்கள் தேர்ச்சி பெறுவீர்களா?” என்ற தலைப்பில் பேசினார் பெத்தேல் இயக்க குழுவின் அங்கத்தினர் லான் ஷில்லிங். தெய்வீக ஞானத்தைப் பிரதிபலிக்கும் நியாயத்தன்மையின் மதிப்பை அவர் சிறப்பித்துக் காண்பித்தார். (யாக்கோபு 3:17) நியாயத்தன்மை என்பது வளைந்து கொடுப்பவர்களாயும், பாரபட்சமற்றவர்களாயும், மிதமானவர்களாயும், கரிசனையுள்ளவர்களாயும் தன்னடக்கமுள்ளவர்களாயும் இருப்பதை குறிக்கிறது. “நியாயத்தன்மையுள்ளவர்கள் மற்றவர்களுடன் பழகுகையில் சமநிலையுடன் இருக்கிறார்கள். அவர்கள் மிதமிஞ்சி போவதில்லை” என்று சொன்னார் சகோதரர் ஷில்லிங். நியாயத்தன்மையோடு இருக்க ஒரு மிஷனரிக்கு எது உதவும்? தன்னைப் பற்றி சமநிலையான கருத்தைக் கொண்டிருத்தல், மற்றவர்கள் சொல்வதை செவிகொடுத்துக் கேட்பதற்கும் அவர்களிடமிருந்து கற்றுக்கொள்வதற்கும் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுதல், கடவுளுடைய நியமங்களை விட்டுக்கொடுத்து விடாமல் அதேசமயத்தில் மற்றவர்களுடைய கருத்துக்களையும் ஏற்றுக்கொள்ள மனமுள்ளவர்களாயிருத்தல்.—1 கொரிந்தியர் 9:19-23.

“சாப்பிட மறவாதீர்கள்!” என்பது இந்த நிகழ்ச்சிநிரலில் வந்த அடுத்த பேச்சின் ஆர்வத்தைத் தூண்டும் தலைப்பு. இது ஆளும் குழுவின் மற்றொரு அங்கத்தினராகிய சாம்யல் ஹெர்ட் என்பவரால் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து பரிசுத்த சேவை செய்வதற்கு நல்ல ஆவிக்குரிய போஷாக்குத் திட்டத்தைப் பின்பற்றுவது எவ்வளவு முக்கியம் என்பதை சிறப்பித்துக் காண்பித்தார். “உங்களுக்கு நியமிக்கப்பட்ட இடத்திற்கு சென்று பிரசங்கிப்பதிலும் கற்பிப்பதிலும் மும்முரமாய் இறங்கிவிட்டீர்களென்றால் ஆவிக்குரிய காரியங்களில் நீங்கள் அதிக பிஸியாகிவிடுவீர்கள்” என்று சொன்னார் சகோதரர் ஹெர்ட். “ஆகவே, ஆவிக்குரிய சமநிலையையும் பலத்தையும் காத்துக்கொள்ள உங்களுக்கு ஆவிக்குரிய உணவு அதிகம் தேவை.” ஆவிக்குரிய மனச்சோர்வையும் சதா வீட்டைப் பற்றியே நினைத்து தவிப்பதையும் தவிர்ப்பதற்கு தொடர்ந்து ஆவிக்குரிய போஷாக்குத் திட்டத்தைப் பின்பற்றுவது முக்கியம். அது திருப்தியைக் கொடுத்து, பரிசுத்த சேவையில் நிலைத்திருப்பதற்கு உறுதியைத் தரும்.—பிலிப்பியர் 4:13.

“ஆரம்பத்திற்கு செல்லுங்கள்” என்று மாணவர்களை உற்சாகப்படுத்தினார் கிலியட் போதனையாளர் லாரன்ஸ் போவன். அவர் எதை அர்த்தப்படுத்தினார்? நீதிமொழிகள் 1:7-க்கு கவனத்தை திருப்பும்படி பார்வையாளரை கேட்டுக்கொண்டார், அது சொல்கிறது: “கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; மூடர் ஞானத்தையும் போதகத்தையும் அசட்டைபண்ணுகிறார்கள்.” பேச்சாளர் இவ்வாறு விளக்கினார்: “யெகோவா இருக்கிறார் என்ற அடிப்படை சத்தியத்தை புறக்கணிக்கும் எந்தப் போதகமும் மெய்யான அறிவுக்கேற்றதல்ல, சரியான புரிந்துகொள்ளுதலையும் தராது.” துண்டு துண்டு பாகங்களாக வெட்டப்பட்ட ஒரு படத்தை, நுணுக்கமான பல விவரங்களடங்கிய கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளுக்கு சகோதரர் போவன் ஒப்பிட்டார். துண்டு துண்டான பாகங்களை ஒன்றுசேர்க்கும்போது, ஒரு முழு படம் கிடைக்கிறது. எந்தளவு நிறைய துண்டுகளை ஒன்று சேர்க்கிறீர்களோ அந்தளவுக்கு படம் பெரிதாகவும் தெளிவாகவும் தெரிகிறது. அதுபோலவே, பைபிளிலுள்ள நுணுக்கமான விவரங்களை எந்தளவு அதிகம் தெரிந்துகொள்கிறோமோ அந்தளவு அதன்மீது போற்றுதலும் வளரும், அதிகமாக கடவுளுக்கு பரிசுத்த சேவை செய்வதற்கும் தூண்டப்படுவோம்.

கிலியட் பள்ளியின் பதிவாளர் வாலஸ் லிவ்ரன்ஸ் கடைசி சொற்பொழிவை ஆற்றினார். “கடவுளுக்கு உங்களுடைய நன்றியை பலியாக செலுத்துங்கள்” என்ற தலைப்பில் பேசினார். பத்து குஷ்டரோகிகளை இயேசு குணப்படுத்திய விவரப் பதிவிற்கு கவனத்தைத் திருப்பினார். (லூக்கா 17:11-19) அந்தப் பத்து பேரில் ஒருவர் மாத்திரமே கடவுளுக்கு துதிசெலுத்தி இயேசுவுக்கு நன்றி தெரிவித்தார். “மற்ற குஷ்டரோகிகள் தாங்கள் சுத்தமானதைக் குறித்து மெய்சிலிர்த்துப் போயிருந்திருப்பார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. சுத்தமானதைக் குறித்து மகிழ்ச்சியும் அடைந்திருப்பார்கள், ஆனால் தாங்கள் சுத்தமாகிவிட்டதை ஆசாரியனிடம் காண்பித்து அங்கீகாரம் பெறுவதிலேயே குறியாக இருந்தார்கள்” என குறிப்பிட்டார் சகோதரர் லிவ்ரன்ஸ். சத்தியத்தைப் படிப்பதால் ஆவிக்குரிய சுத்திகரிப்பு ஏற்படுகிறது, கடவுள் காண்பித்த நற்குணம் நன்றி தெரிவிக்கும்படி ஒருவரை உந்துவிக்க வேண்டும். கடவுளுடைய எல்லா செயல்களையும் நற்குணத்தையும் சிந்தித்துப் பார்த்து, அவருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தங்களுடைய சேவையையும் தியாகங்களையும் செய்யும்படி 108-வது கிலியட் வகுப்பு மாணவர்கள் அனைவரும் உற்சாகப்படுத்தப்பட்டார்கள்.—சங்கீதம் 50:14, 23; 116:12, 17.

அனுபவங்களும் பேட்டிகளும்

நிகழ்ச்சிநிரலின் அடுத்த பாகத்தை மற்றொரு கிலியட் போதனையாளர் மாற்கு நியூமர் நடத்தினார். பயிற்சி காலத்தின்போது மாணவர்களுக்கு கிடைத்த வெளி ஊழிய அனுபவங்களை இந்த நிகழ்ச்சி சிறப்பித்துக் காட்டியது. கிலியட் பள்ளிக்கு வருவதற்கு முன்பு, மாணவர்கள் சராசரியாக சுமார் 12 ஆண்டுகளை முழுநேர சேவையில் செலவழித்திருந்தார்கள். கிலியட் பள்ளியில் பயிற்சி பெறும்போது, பலதரப்பட்ட ஆட்களுக்கு பைபிள் படிப்புகளை ஆரம்பித்திருந்தார்கள். ‘எல்லாருக்கும் எல்லாமாவது’ எப்படி என்பதை இந்த மாணவர்கள் அறிந்திருந்ததை இது காண்பித்தது.—1 கொரிந்தியர் 9:22.

மாணவர்களுடைய அனுபவங்களுக்குப் பிறகு, சார்ல்ஸ் மால்ஹன் என்பவரும் வில்லியம் சாம்யல்சன் என்பவரும் பெத்தேல் அங்கத்தினர்களில் சிலரையும் கிலியட் பள்ளிக்கு ஆஜரான பயணக் கண்காணிகளையும் பேட்டி கண்டார்கள். பேட்டி காணப்பட்டவர்களில் ஒருவர் ராபர்ட் பெவீ, இவர் 51-வது கிலியட் பள்ளியில் பட்டம்பெற்று பிலிப்பைன்ஸில் சேவை செய்தவர். வகுப்பினருக்கு அவர் இவ்வாறு நினைப்பூட்டினார்: “பிரச்சினைகள் ஏற்படும்போதெல்லாம், அவற்றை எப்படி தீர்ப்பது என்பதற்கு ஒவ்வொருவரும் ஆலோசனைகள் கொடுக்கிறார்கள். ஆனால் எல்லோரையும்விட அதிக புத்திசாலியான ஒருவர், நல்ல யோசனையை கொடுக்கும் ஒருவர் இருக்கிறார். பைபிளை ஆராய்ந்து, கடவுளுடைய நோக்குநிலையை கண்டுபிடிக்க முயலுங்கள், அவரைவிட யாரும் மேம்பட்ட யோசனையை வழங்க முடியாது. அதுவே எப்பொழுதும் சரியானதாக இருக்கும்.”

இந்த சிறந்த ஆவிக்குரிய நிகழ்ச்சிநிரலின் முடிவாக, “யெகோவாவுக்கு ஏற்கத்தகுந்த பரிசுத்த சேவையை செய்யுங்கள்” என்ற தலைப்பில் ஆளும் குழுவின் அங்கத்தினராகிய ஜான் பார் பேசினார். நல் இருதயம் படைத்தவர்கள் கடவுளை ஏற்கத்தகுந்த விதத்தில் வணங்குவதற்கு, வெளி ஊழியத்தின் மூலம் எப்படி பரிசுத்த சேவை செய்யலாம் என்பதை எடுத்துரைத்தார். மத்தேயு 4:10-ல் உள்ள இயேசுவின் வார்த்தைகளுக்கு கவனத்தைத் திருப்பி, சகோதரர் பார் இவ்வாறு சொன்னார்: “நாம் யெகோவாவை மாத்திரமே வழிபட வேண்டுமென்றால், பேராசை, பொருளாசை, தற்பெருமை போன்ற விக்கிரகாராதனைக்குரிய எல்லா வகை கண்ணிகளையும் ஒழித்துக்கட்ட வேண்டும். 1940-களின் ஆரம்பம் முதற்கொண்டு, இந்நாள் வரை நம்முடைய மிஷனரிகள் இந்த விஷயத்தில் மிகச் சிறந்த முன்மாதிரி வைத்திருப்பது நம்மை எவ்வளவு சந்தோஷப்படுத்துகிறது! 108-வது கிலியட் பள்ளி பட்டதாரிகளாகிய நீங்களும் அவர்களுடைய நல்ல முன்மாதிரியை பின்பற்றுவீர்கள் என்று நம்புகிறோம். நீங்கள் யெகோவாவுக்கு பரிசுத்த சேவை செய்யப் போகிறீர்கள், அவர் மாத்திரமே அதைப் பெறுவதற்குத் தகுதிவாய்ந்தவர்.”

உற்சாகமூட்டும் நிகழ்ச்சிநிரலுக்கு இது நம்பிக்கையூட்டும் உச்சக்கட்டமாக இருந்தது. உலகம் முழுவதிலுமுள்ள நண்பர்களிடமிருந்து வந்த வாழ்த்து செய்திகளை படிப்பதற்கும், பட்டங்களை வழங்குவதற்கும், இந்த வகுப்பினர் பெற்ற பயிற்றுவிப்புக்காக அவர்களிடமிருந்து வந்த பாராட்டு கடிதத்தை வாசிப்பதற்குமான சமயம் இது. மாணவர்கள் தங்களுடைய நியமிப்பிலும் யெகோவாவை சேவிப்பதிலும் உண்மைத்தன்மையோடு நிலைத்திருக்கும்படி புத்திமதி கூறப்பட்டது. 25 நாடுகளிலிருந்து வந்திருந்த விருந்தினரோடு, ஆஜராயிருந்த அனைவரும் யெகோவாவுக்கு துதி பாட்டு பாட ஜெபத்துடன் இந்நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

[அடிக்குறிப்புகள்]

a இந்த நிகழ்ச்சி மார்ச் 11, 2000-ல் நியூ யார்க், பேட்டர்ஸனில் உள்ள உவாட்ச்டவர் கல்வி மையத்தில் நடைபெற்றது.

[பக்கம் 23-ன் பெட்டி]

வகுப்பின் புள்ளிவிவரங்கள்

பிரதிநிதித்துவம் செய்யப்பட்ட நாடுகள்: 10

அனுப்பப்பட்ட நாடுகளின் எண்ணிக்கை: 17

மாணவர்களின் எண்ணிக்கை: 46

தம்பதிகளின் எண்ணிக்கை: 24

சராசரி வயது: 34

சத்தியத்தில் இருக்கும் சராசரி ஆண்டுகள்: 16

முழுநேர ஊழியத்தில் இருக்கும் சராசரி ஆண்டுகள்: 12

[பக்கம் 24-ன் படக்குறிப்பு]

உவாட்ச்டவர் கிலியட் பைபிள் பள்ளியில் பட்டம் பெறும் 108-வது வகுப்பு

[பக்கம் 24-ன் படம்]

கீழே கொடுக்கப்பட்டிருக்கும் பட்டியலில், வரிசை எண்கள் முன்னிருந்து பின்னோக்கியும், பெயர்கள் ஒவ்வொரு வரிசையிலும் இடமிருந்து வலமும் கொடுக்கப்பட்டுள்ளன.

(1) அமடோரி, இ.; குக், ஓ.; பைர்ன், எம்.; லீ, ஏ. (2) நியூசம், டி.; பேடர்ட்ஸோலீ, ஏ.; பீக்ரா, எச்.; காட்டோ, டி.; கேட்வுட், டி. (3) ஈட், டி.; ஈட், ஜே.; வெல்ஸ், எஸ்.; ஜாமிசன், ஜே.; கோன்சாலஸ், எம்.; கோன்சாலஸ், ஜே. (4) காட்டோ, டி; லான், டி.; நிக்லோஸ், ஒய்.; பிரைஸ், எஸ்.; ஃபாஸ்டர், பி.; ஈபாரா, ஜே. (5) அமடோரி, எம்.; மான்னிங், எம்.; ஜேம்ஸ், எம்.; போஸ்ட்ராம், ஏ.; கேட்வுட், பி.; நியூசம், டி. (6) ஃபாஸ்டர், பி.; ஜாமிசன், ஆர்.; ஹைஃபிங்கர், ஏ.; கோஃபல், சி.; கோஃபல், டி.; பைர்ன், ஜி. (7) ஹைஃபிங்கர், கே.; மான்னிங், சி.; குக், ஜே; போஸ்ட்ராம், ஜே; லான், ஈ.; பேடர்ட்ஸோலி, ஏ. (8) ஜேம்ஸ், ஏ.; வெல்ஸ், எல்.; பிரைஸ், டி.; நிக்லோஸ், ஈ.; லீ, எம்.; ஈபாரா, பி.; பீக்ரா, ஒய்.